கொட்டுமுரசு

ஐ.நாவில் திமிறும் இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் காரசாரமான அறிக்கையையடுத்து சூடேறியிருந்த இலங்கையின் பொறுப்பு கூறல் விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு கொதிநிலையை எட்டி இருக்கின்றது. கொதிநிலை என்பதையும்விட அந்த அரங்கு ஒரு போர்க்களமாக மாறியிருக்கின்றது என்றே கூற வேண்டும். அவ்வாறு குறிப்பிடுவதில் தவறிருக்க முடியாது. அதீத ஆயுத பலத்தையும் ஆக்கிரமிப்பு போக்கையும் பயன்படுத்தி விடுதலைப்புலிகளை யுத்தத்தில் வெற்றிகொண்ட ராஜபக்சக்கள் 2015 தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னர் மீண்டும் 2019 இல் ஆட்சியைக் கைப்பற்றிய உடன் முன்னைய அரசாங்கத்தின் ஐ.நா பிரேரணைக்கான ...

Read More »

ஒரு பலமான கூட்டணிக்கான காலம்

அண்மையில் பிரதான தமிழ் கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாயிருந்தன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் அணைத்தும் இதில் பங்குகொண்டிருக்கின்றன. மாகாண சபை தேர்தல் இடம்பெறும்பட்சத்தில் மாவை சேனாதிராசாவை வடக்கு மாகாண முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதில் கட்சிகளுக்கடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதே வேளை ராஜதந்திர சமூகத்தை அணுகுவதற்கான குழுவொன்றையும் நிமியத்திருக்கின்றனர். ஆனால் இநதக் கலந்துரையாடல்களில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்தும் அறியப்படும் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் பங்குகொள்ளவில்லை. சுமந்திரன் தரப்பு ...

Read More »

இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம்

ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் நட்பு சக்திகளாகிய ...

Read More »

ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இந்த நகல் பிரேரணை அமைந்திருக்கின்றது. கடந்த வருடங்களில் ஏமாற்றப்பட்டதைப்போல இந்த வருடமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது. ஜெனிவா கூட்டத் தொடர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் இம்முறை ஏற்படுத்தியிருந்தமைக்கு பல காரணங்கள் ...

Read More »

புதிய தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும்

இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை உறுதிசெய்வதாக இந்திய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. இந்த கடப்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக மாறியுள்ளன,2019 இல் கோத்தபாயராஜபக்ச ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது. பெப்ரவரி 22 ம் ஆரம்பமாகவுள்ள அடுத்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பது சர்வதேச சட்டத்தை உறுதி செய்வது ...

Read More »

ஆளும் கட்சியின் உட்பூசல்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆளும் கட்சிக்குள் பலம் இழந்து வருகிறாரா? ஆளும் கட்சிக்குள், அவரை ஒதுக்கித் தள்ளும் நிலை உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், அண்மையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன; இடம்பெற்றும் வருகின்றன. தரை ஓடு போன்ற செரமிக் பொருட்களை இறக்குமதி செய்வதை, அரசாங்கம் ‘கொவிட் 19’ நோயால் ஏற்பட்ட பயணக் கஷ்டங்களின் காரணமாக, கடந்த வருடம் ஜூலை மாதம் தடை செய்திருந்தது. அப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதமர் அண்மையில் அத்தடையை நீக்கும் வகையில், ஒரு வர்த்தமானி ...

Read More »

இணைவு – எழுச்சி – சர்ச்சை – முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் !

தமிழ் மக்களின் போராட்டம் என்பது சாதாரண அரசியல் விளையாட்டல்ல. அது நீதிக்கும் நியாயத்துக்குமானது. அரசியல் உரிமைகள் சார்ந்தது. அடிப்படை உரிமைகளுக்கானது. அது அவர்களுடைய வாழ்வுக்கும் இருப்புக்குமானது. தமிழ் மக்கள் சாதாரண மக்களல்ல. அவர்கள் வந்தேறு குடிகளுமல்ல. வாழ்வியல் வழியில், கலை, கலாசார, மத, பண்பாடு, அரசியல் ரீதியான வரலாற்று பாரம்பரியத்துடனான தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். ஆனால் பெருந்தேசியப் போக்கில் தனி இனத்துவ அரசியல் மமதையில் சிங்கள பௌத்த தேசியக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல், கல்வி, ...

Read More »

பேரணியும் விளைவுகளும்

தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்திகளுக்கு உள்ளாகியிருந்த சுமந்திரனின் பாதுகாப்பை அரசங்கம் மீளப்பெற்று அவரை பலவீனப்படுத்தியதன் மூலம் அவரை மக்களுடன் நெருக்கமாக்கியிருக்கின்றது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி பெரெழுச்சியுடன், நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில், இந்தப் பேரணி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்விகளும் கூடவே எழுந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பேரணியை அரசாங்கமும் எதிர்பார்க்கவில்லை, தமிழர் தரப்பும் எதிர்பார்க்கவில்லை. பேரணிக்குப் பின்னர் வெளியிடப்படும் கருத்துக்களும், எடுக்கப்படும் நடவடிக்கைகளுமே, இது ;ஒரு விளைவுகளை ஏற்படுத்தாத பேரணி அல்ல என்பதை தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. பேரணி இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த ...

Read More »

உரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்

இந்தப் பந்தியை எழுதத் துவங்கும் பொழுது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நாள். கிளிநொச்சி நகரத்தில் பெரும் குரலுடன் நிரை நிரையாக சனங்கள் செல்லுகின்றனர். கறுப்புக் கொடி ஏந்தியபடி, எமது உறவுகள் எங்கே, கோத்தபாய அரசே பதில் சொல்லு என்ற பெருங்கேள்வி துளைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரச காவல்துறையினரால் மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுபுறத்தில் கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களுமாக களத்தில நின்று குரல்களை எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் போராடும் மக்களின் குரல் உக்கிரமாய் இருக்கையில், கிழக்கில் மக்கள் சிங்கள அரசின் கல் ...

Read More »

பொத்துவில் மூலம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சுமந்திரன் துரோகமிழைத்துள்ளார்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நேற்றைய நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் கொழும்பில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- ஐந்து நாட்களாக கிட்டதட்ட ஒரு இலட்சம் மக்களின் பங்களிப்புடன் – இறுதிநிகழ்வில் ...

Read More »