இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சனை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு கருத்தொருமிப்பின் அடிப்படையில் இணக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதற்கான அரிதான வாய்ப்பு இது என மக்கள் நம்பினார்கள். அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப்போவதாகவும் உறுதியளித்தார்கள். ஆனால், இன்று நாட்டில் தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடி முன்னெப்போதையும்விட ...
Read More »கொட்டுமுரசு
தமிழ் மக்களுக்கும் வீரர் ஒருவர் அவசரமாக தேவைப்படுகின்றார்!
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, கொழும்பு, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நாளை தொடக்கம், வடக்கு மாகாணத்திலும் இதே நிலைமை ஆரம்பிக்க உள்ளது. ஆக, அடுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் வரை, இரண்டு மாகாணங்களும் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களின் ஆளுகைக்குள் அடங்கப் போகின்றன. தமிழர்களது பார்வையில், மாகாண சபை ஆட்சி முறையிலான நடைமுறை பல குறைபாடுகளைத் தன்னகத்தில் கொண்டுள்ளது. இந்த ஆட்சி ...
Read More »நுட்பமான கொலை திட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்திய காதலி!
பத்திரிகையாளர் படுகொலை அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. எழுத்தால் பாதிக்கப்படுவோர் ஆயுதத்தை கையில் எடுக்கும் போது அங்கு மரணிக்கப்படுவது பத்திரிகை சுதந்திரமும், ஒரு குடும்பத்தின் எதிர்காலமும்.அப்படிப்பட்டது தான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி, 59, படுகொலையும். ஆனால் நேரடியாக மன்னரும், இளவரசரும் சுட்டிக்காட்டப்படுவதால் உலகின் பார்வை முழுதும் அந்த சம்பவத்தில் பதிந்துள்ளது.கொலை சம்பவம் ஹாலிவுட் படங்களில் வரும் கதையைப்போன்று திட்டமிட்ட படுகொலை என்கின்றன, துருக்கி நாளிதழ்கள். இந்த பிரச்னையில் நுாலிழையில் துருக்கி தப்பியுள்ளது. இல்லையேல் அவர்கள்தான் சிக்கலில் மாட்டியிருப்பார்கள். அரசருடன் நட்பு ஜமாலின் துவக்க ...
Read More »சிறப்புக் கட்டுரை: மீ டூ: ஊடக கர்வம் உடைகிற தருணம்!
ஊடகத் துறையில் இயங்கிக்கொண்டிருப்பதில் மனநிறைவு, பெருமை என்பதையெல்லாம் தாண்டி ஒரு கர்வம் கொண்டவன் நான். யாரையும் கேள்வி கேட்க முடிகிற வாய்ப்பால் வளர்ந்த கர்வம் அல்ல, சமுதாய மாற்றத்தில் ஒரு மையமான பாத்திரம் வகிக்கிற ஊடகத்தில் ஒரு சிறு புள்ளியாகவேனும் இருக்கிறோம் என்ற உணர்வால் ஏற்பட்ட கர்வம் அது. அந்தக் கர்வம் தகர்ந்து கூசிப்போய் நிற்கிற தருணங்களும் ஏற்படுவதுண்டு. ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்னையில் தென்னிந்திய திரைப்பட பெண்கள் சங்கம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அத்தகைய தருணங்களில் ஒன்று. அறம் ...
Read More »றோ, சிறிசேன, சம்பந்தன்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பு (Research and Analysis Wing – RAW) கொலை செய்வதற்கு சதிசெய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தத் தகவல் இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் இந்த செய்தியை முக்கித்துவப்படுத்தி பிரசுரித்திருக்கின்றன. கடந்த செய்வாக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்தத் தகவலை முதல் முதலாக கொழும்பிலிருந்து வெளிவரும் எக்கநொமிநெக்ஸ்ட் (economynext.com) இணையத்தளமே ...
Read More »குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்!
அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார். இதனையே இப்போது நான் சொல்லும் போது குறைந்தது ஒரு நூறு அடிக்கு கிணறு வெட்டவேண்டும் என்றே கூறுவேன் அப்போதுதான் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதனையே நாளை எனது பிள்ளைகள் எப்படிக் கூறப் போகின்றார்கள்? இதுதான் கடந்த ஜந்துதசாப்த் தங்களுக்குள் நிலத்தடிநீரில் ஏற்பட்டமாற்றம். ...
Read More »மருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்!
1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ்மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 31 வருடங்கள் கடந்துவிட்டன இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ...
Read More »பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்!
தாய் நாட்டின் மானம் காக்க தூக்குக் கயிற்றைத் துணிந்து முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாள் செற்ரம்பர் 28 ஆம் நாள். இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி பிறகு நம் நாட்டை அடிமைப்படுத்தி இங்குள்ள வளங்களை ஏராளமாகக் கொள்ளையடித்துச் சென்றது. அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அடக்குமுறைகளை ஏவியது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் கூறிக் கைது செய்து கடுமையாக சித்ரவதை செய்தது. எனினும், கைது, சிறை போன்றவற்றை துச்சமாக மதித்து ...
Read More »எவரும் சாதிக்கலாம் என்ற கலாம்!
அகரத்தில் இருந்து உயர்ந்தெழுந்து சிகரத்தைத் தொட்ட ‘இந்திய ஏவுகணை நாயகன்’, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். பெருமைகளைக் கடந்து ஓர் ஆசானாக மாணவர்களை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்களில் என்றுமே கலாம் ஈடுபட்டுவந்தார். மதராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் (எம்.ஐ.டி.) 1960-ல் விண்வெளிப் பொறியியல் பட்டம் பெற்றவுடன் விஞ்ஞானியாகத் தன் பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்துக் கல்வி புலத்துக்கே திரும்பினார் என்பது வியப்பளிக்கிறது. குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், சோமாலியாவைச் சேர்ந்த கல்வி – ...
Read More »கூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது!
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து வந்திருக்கின்றது. அதுவும், பாதீட்டுத் திட்டம் போன்ற, மிக முக்கிய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் கூட, கூட்டமைப்பு எந்தவித அழுத்தத்தையும் அரசாங்கத்துக்கு வழங்காது, ஆதரவளித்து வந்திருக்கின்றது. இது, ...
Read More »
Eelamurasu Australia Online News Portal