வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில், தற்போதைய அரசாங்கம் வெற்றி பெற்ற பின்னர், மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம்” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் அண்மையில், ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு, அவர் மேலும் தெரிவிக்கையில், “முப்பது ஆண்டு காலப் போருக்குப் பின்னர், அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சிமுறைமையின் ...
Read More »கொட்டுமுரசு
தேர்தல் களத்தில் பெண்கள்
இலங்கை சட்டமன்றத்துக்காக 1931இலிருந்து இதுவரை அறுபது பெண்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் கடந்த மூன்று நாடாளுமன்றங்கள் ஒவ்வொன்றிலும் தலா 13 பெண்கள் மாத்திரமே அங்கம் வகித்திருந்தனர். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகையில் வெறும் 5.7 சதவீதம் மாத்திரமே ஆகும். உலக அரங்கில் பெண் தலைவர்களைக் கொண்ட நாடுகளாக தற்போது இருபதுக்கும் அதிகமான நாடுகள் இருக்கின்றன. அதிலும் கியூபா, பொலிவியா, உகண்டா போன்ற நாடுகளின் நாடாளுமன்றத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான ...
Read More »விரலுக்கேற்ற வீக்கமாக இருக்க வேண்டும்
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் வாக்குறுதிகளும் அதனூடாகத் தமது செயற்பாடுகளின் உறுதிமொழிகளும், தாராளமாகவே அள்ளிவீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் தேர்தலொன்று, சுகாதாரப் பாதுகாப்பு முறைகளுக்கு மத்தியிலும் தொற்று நோயொன்றின் அச்சுறுத்தலுக்கு இடையிலும், முதன்முதலாக இடம்பெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணைக்குழுவானது, இந்தத் தேர்தலை நடத்திவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கின்றது. தேர்தலுக்கான ஒத்திகையிலேயே நீண்ட நாள்களைச் செலவிட வேண்டிய தேவை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் இந்தத் தேர்தலுக்கான முனைப்பு காணப்படுகின்றதா என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது. வடபுலத்தை நோக்குகையில், நீண்டகால அரசியல் ...
Read More »தப்புக் கணக்கு
ஐந்தும் ஐந்தும் எத்தனை என்றால், பத்து (10) தான் பதில், ஆனால், ஐம்பத்தைந்து (55) என்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. நாட்டில் உள்ள தேசியவாத முகாமை முற்றிலுமாக அழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் பிளவுக்கு வழி செய்யும் நோக்கத்துடனேயே வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் தலையீடு செய்தன என்று, பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கும் கருத்து, ஐந்தும் ஐந்தும் 55 என்று பதில் கூறுவதற்குச் சமமானது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை வெற்றி பெறும் என்று சர்வதேச சக்திகள் எதிர்பார்க்கவில்லை என்றும், ...
Read More »தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்
மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என்னுடனும் மற்றும் அனைவருடனும் சிரித்த முகத்துடனும் பண்பான இயல்புகளுடனும் உறவாடிய அன்பர் இராஜநாயகம் இராஜேந்திரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை, இறுதியாக கடந்த ஆண்டில் இங்கு நடைபெற்ற நடன ஆசிரியை திருமதி அகிலா விக்னேஸ்வரனின் நடனப்பள்ளியின் ( Narthana Sorubalaya Classical Dance – NSCD ) மாணவர்களின் வருடாந்த நடன ஆற்றுகையின்போது சந்தித்து உரையாடியதுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது. எங்கே காண நேர்ந்தாலும், எனது எழுத்துக்கள் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை ...
Read More »இஸ்ரேலின் ‘இணைப்பு’ நடவடிக்கை; பதற்றத்தில் பாலஸ்தீனம்!
பெருந்தொற்றுக்கு நடுவே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளைத் தங்கள் நாட்டுடன் இணைக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் அரசு இறங்கியிருக்கிறது. பாலஸ்தீனர்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கும் இந்நடவடிக்கைக்கு, இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடான பிரிட்டன் முதல் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. எனினும், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் ஆதரவு இருப்பதால் நெதன்யாஹு இதில் துணிச்சலுடன் இறங்குகிறார். ஒருதலைப்பட்சமானது பெருந்தொற்றுக்கு நடுவே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ...
Read More »முடிவுறாத போரின் இன்னோர் அத்தியாயம்
முடிந்தது என்று நம்புவதற்கு தான், எல்லோருக்கும் விருப்பம். ஆட்சியாளர்களும் இவ்வாறே இதை, மக்களும் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், யாதார்த்தம் என்னவோ வேறுபட்டதாக இருந்து விடுகிறது. ‘முடிந்தது’ என்றும் ‘ஒழித்து விட்டோம்’ என்றும், பெருமைப் பேச்சுகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், இன்னொருபுறம் அழிவு மெதுமெதுவாக முன்னகர்ந்து, ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை, நாம் கண்முன்னால் காண்கின்றோம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாமும் இல்லை. அதை வெளிப்படையாக, மக்களுக்குச் சொல்லும் மனநிலையில், அரசாங்கங்களும் இல்லை. உயிர்களுக்கும் இலாபத்துக்கும் இடையிலான முடிவுறாத போரின் இன்னோர் ...
Read More »மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர்
தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ;இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் என்றும் கூறுகின்றார். வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு ...
Read More »தமிழ் வேட்பாளர்களை நோக்கி கேள்விகள்…..
நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே எனவே தமிழ் மக்களின் நிரந்தர பிரச்சினைகள் தொடர்பாகவும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் உங்களிடம் இருக்கக்கூடிய வழி வரைபடம் என்ன ?அதை அடைவதற்கான அரசியல் உபாயம் என்ன? என்பதை நீங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் அந்த அடிப்படையிலேயே இக் கேள்விகள்கேட்கப்படுகின்றன. கேள்வி ஒன்று -மிகவும் அடிப்படையான ...
Read More »எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டிய கதை
கடந்த வாரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதம் சம்பந்தனின் நேர்காணலை, ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அது, ‘எருமை மாடு ஏரோப்பிளேன்’ ஓடுவதற்கான சாத்தியங்கள் குறித்து, ஆழமாக யோசிக்க வைத்தது. குறிப்பாக, மூன்று பதில்கள் இவ்வாறு யோசிக்க வைத்தன. “மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு உண்டா” என்ற வினாவுக்கு அளிக்கப்பட்ட பதில் யாதெனில், “நல்லாட்சி அரசாங்கத்தை, நாங்கள் தான் ஆட்சியில் இருத்தினோம். தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தர அவர்களும் முயன்றார்கள்; அவர்களால் முடியவில்லை. ஆனால், நாங்கள் ஏமாந்து ...
Read More »
Eelamurasu Australia Online News Portal