கொட்டுமுரசு

எழுத்தெண்ணிப் பயின்ற இளங்குமரனார்!

ஊர்ப் பெயரும் தாயார் பெயரும் ஒன்றாகக் கொண்டவர் இளங்குமரனார் (1930 – 2021). தாயார் பெயர் வாழவந்தாள். ஊர்ப் பெயர் வாழவந்தாள்புரம். தந்தை பெயர் இராமு; ஊர் வைத்த பெயர் ‘படிக்கராமு’. பெற்றோரின் எட்டாவது குழந்தையாகப் பிறந்ததால், அந்த நாள் வழக்கப்படி அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ‘கிருஷ்ணன்’. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் நூல்கள் தந்த தனித்தமிழ் உணர்வால் இவர் மாற்றிக்கொண்ட பெயர், ‘இளங்குமரன்’. இடைவிடாமல் படிக்கும் தந்தையாரின் பழக்கம் இவரிடமும் ஒட்டிக்கொண்டது. திருக்குறள் முழுவதையும் 12 வயதுக்குள்ளும், தொல்காப்பியம் முழுவதையும் 16 வயதுக்குள்ளும் மனப்பாடம் ...

Read More »

ஹிஷாலினியின் மரணம்! லையகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அவசியம்

சிறுமி ஹிஷாலினியின் மரணம், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு குற்றவியல் சம்பவமாகப் பதிவாகி இருக்கின்றது. ஆனால் அந்த மரணம் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு வினாக்களும், ஏற்கனவே பலதரப்பினராலும் எழுப்பப் பட்டுள்ள வினாக்களும் மலையகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பரிமாணங்களை வெளிப் படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அந்தச் சிறுமியின் மரணம் இன மத சமூக நிலைமைகளைக் கடந்து நாடளாவிய ரீதியில் பலதரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.   அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு, சிறுவர் உரிமைச் செயற் பாட்டாளர்கள் ...

Read More »

ஆட்சியாளர்கள் நேர்மையாக நடவடிக்கை எடுப்பார்களா?

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள வீட்டில், பணிபுரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி எனும் சிறுமி, தீக்காயங்களுக்கு உள்ளாகி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்தச் சிறுமி, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாகவும் மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. ஒருபுறம், சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி, எரித்துக் கொல்லப்பட்டதாகவும்  ரிஷாட் வீட்டிலும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், சிறுமிக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. மறுபுறம், ரிஷாட்டின் வீட்டுக்கு, சிறுமி வருவதற்கு ...

Read More »

குறைந்தளவு பயன் அளிக்ககூடிய சினோவக் தடுப்பூசியை அரசாங்கம் ஏன் பெருமளவில் கொள்வனவு செய்கின்றது?

இலங்கையில் பரவிவரும் டெல்டா வைரசினை கட்டுப்படுத்துவதில் குறைந்தளவு பலன்அளிக்ககூடிய – மிகவும்பெறுமதியான சினோவக் தடுப்பூசியை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து சுகாதார துறையை சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் . 13மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது. சினோவக் தடுப்பூசி 15 அமெரிக்க டொலர்களிற்கு விற்பனை செய்யப்படுகின்றது இது இலங்கையை பொறுத்தவரை மிகவும் பெரியதொகை என சுகாதாரதுறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஏனைய தடுப்பூ{சிகள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதையும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை மருத்துவர்கள் இந்த தடுப்பூசியின் செயல்திறன் ...

Read More »

இடிந்துபோன மோடியின் தேசியவாதம்

நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு ‘விஸ்வகுரு’ அல்லது ‘உலகிற்கு மாஸ்டர்’ ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 ற்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியா உதவிகளைப் பெற்றிருப்பதாகவும் இது மோடியின் வெளியுறவுக் ...

Read More »

பசில் ஒரு மந்திரவாதியில்லை ?

அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா ? கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தாவிட்டால் அல்லது அகற்றாவிட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது என்ற தொனிப்பட எச்சரிக்கும் ஒரு ...

Read More »

தமிழுக்கு வளம்சேர்க்கும் ஓர் இணையவாசி

பொழுதைப் போக்கவும், அரட்டை அடிக்கவும் இணையத்துக்கு வரும் பெரும்பாலானோர் மத்தியில் ஆக்கபூர்வமாக இணையத்தைப் பயன்படுத்துவோர் ஆங்காங்கே உள்ளனர். அவர்களுக்கெல்லாம் இணையத்தில் அறிவுபூர்வமான தகவல்களைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது விக்கிப்பீடியா எனும் களஞ்சியமாகும். அத்தகைய இணையக் கலைக் களஞ்சியத்தில் தமிழில் ஐம்பதாயிரத்துக்கும் மேல் தொகுப்புகள் செய்து, உலகின் ஐந்தாவது நபராக இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருளரசன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கனகரத்தினம், கனடாவைச் சேர்ந்த நக்கீரன், இலங்கையைச் சேர்ந்த அன்ரன், மதுரையைச் சேர்ந்த எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையடுத்து இந்த இமாலயப் பங்களிப்பைச் செய்துவரும் இணையவாசி ...

Read More »

ஜனாதிபதியின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே வடமாகாணசபையின் பிரதம செயலாளராக தமிழ் தெரியாத ஒருவரின் நியமனம்

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாணசபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் தொடர்பில் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னைய வடமாகாணசபை உறுப்பினர்களின் எதிர்ப்புக் கூட்டம் யாழ்ப்பாணம் இளம் கலைஞர் மன்றத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், வலு ...

Read More »

பாதுகாப்பு பற்றிய கட்டுக் கதையும் பயங்கரவாத தடைச் சட்டமும்

பல தசாப்தங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மனித உரிமைகளுக்கு மாறாக காணப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசானது பயங்கரவாத தடைச்சட்டமானது நாட்டை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது என கூறினாலும், நடைமுறையில், இச்சட்டம் ஒரு பிரஜையை தன்னிச்சையாக கைது செய்யவும், தடுத்து வைக்கவும், சித்திரவதை செய்;யவும் மற்றும் செய்யப்படாத குற்றத்திற்கு தண்டனையளிக்கவுமே வழிவகுக்கிறது. இச்சட்டம் இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் பற்றி சர்வதேச கடமைகளை மற்றும் அரசியலமைப்பு மூலம் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறினாலும், அடுத்தடுத்து ஆட்சியினை பொறுப்பேற்ற அரசாங்கங்கள் இச் சட்டத்தினை ...

Read More »

கறுப்பு ஜூலையும் இன்றைய நிலைமையும்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து, ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அனைத்துப்பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் இணைந்து, கடந்த எட்டாம் திகதி பாராளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களை, பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களைப் பிணையில் விடுதலை செய்ததன் பின்னர், பொலிஸார் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பலாத்காரமாக அழைத்துச் சென்றனர். இந்தப் பின்னணியில், அடக்குமுறை, விலைவாசி உயர்வு போன்ற நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர், கடந்த ஒன்பதாம் திகதி ...

Read More »