‘வெளியே வந்து பாருங்கள்… போதும் போதும் என்று சொல்லுகின்ற நம்மில் பலருக்கு, அளவுக்கு அதிகமாகவே வசதிகள் கிடைக்கப் பெற்றிருப்பதைக் காண்பீர்கள்’ என்று வெளிநாட்டுக் கவிஞர் ஒருவர் எழுதினார். உண்மைதான்! நாட்டில் பெரிய பெரிய விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற நாம், சமகாலத்தில், உண்பதற்கு ஒருவேளை உணவும் அடிப்படை வசதிகளும் இன்றி, அன்றாட வாழ்க்கையைக் கூட, வாழ்வதற்கு வழிதெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கணிசமான மக்கள் கூட்டம் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை, மறந்து விடுகின்றோம். அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக, இன்றைய, நேற்றைய அரசாங்கங்கள் எதுவும் காத்திரமான நடவடிக்கைகளை ...
Read More »கொட்டுமுரசு
ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் சிக்கிக்கொண்ட விக்கி!
விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த ஆவணப் பதிவை வெளியிட்டு வைத்தவர், வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன். அதில், தமது கட்சியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால், படுகொலை செய்யப்பட்டதாக மாத்திரம் அந்த வரலாற்று ஆவணக் குறிப்பு வெளிப்படுத்தவில்லை. ‘கந்தன் கருணை’யில் 60 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் டெலோ தலைவர் உள்ளிட்ட அந்த அமைப்பின் ...
Read More »சுதந்திர தினமும் தமிழ் மக்களும்- பி.மாணிக்கவாசகம்
நாடு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று ஏழு தசாப்தங்களாகின்றன. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக, 71 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொழும்பில் கொண்டாடப்பட்டிருக்கின்றது. கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பல்வகை ஊர்திகளும், படையினருடைய அணிவகுப்புக்களும், பாண்ட் வாத்திய அணி நடையும் பார்ப்போரைப் பரவசப்படுத்தியிருந்தன. ஆனால் இந்தப் பரவசம் நாடளாவிய ரீதியில் அனைத்து இலங்கையர்களுக்;கும் ஏற்பட்டிருக்கவில்லை. குறிப்பாக இந்த நாட்டின் பாரம்பரிய வரலாற்றுத் தாயக உரித்துடைய தமிழ் மக்களுக்கு இந்த சுதந்திர தினமும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் பரவசமூட்டுவதாகவோ அல்லது மகிழ்ச்சி ...
Read More »தொலைவாகும் தமிழர்கள்…!
யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் நிலவிவரும் அபிப்பிராயங்களில் ஒன்று யாழ்ப்பாணம் இலங்கைத் தீவின் தலை என்பது. தலைப் பகுதியில் வாழ்பவர்கள் நாட்டின் போக்கைத் தீர்மானிப்பர் என்று தமிழர்கள் நினைக்கின்றனர். இது சற்று அபரிமிதமான கற்பனை என்பதைத்தான் கடந்த 70ஆண்டுகள் நிரூபித்துள்ளன. யாழ்ப்பாணத் தமிழரின் 100வீதத் திறமையையும் கொழும்புடன் ஒப்பிடும்போது 15வீத அடைவுகூட இல்லை. தென் னிந்தியாவில் இருந்து ஆரம்பக் குடியிருப்புகள் நிகழ்ந்தபோது பூநகரி, மன்னார்ப் பகுதிகளுக்கு ஊடாகவே மக்கள் இலங்கைத் தீவுக்குள் நுழைந்த தற்கான ஆதாரங்கள் உண்டு. ஆதி மக்கள் நீர் நிலைகளை அண்மித்தே தமது ...
Read More »ஏமாற்று அரசியல்!
ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்தவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றானோ இல்லையோ, இலங்கையைப் பொருத்தமட்டில் அரசியலே எங்கும் வியாபித்திருக்கின்றது. எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்பதே நிலைமையாக உள்ளது. அதனை நிகழ்வுகளின் ஊடாகவும், நடவடிக்கைகளின் ஊடாகவும் தெளிவாகக் காணவும் உணரவும் முடிகின்றது. ஆயினும், இது நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அரசியலாகத் தெரியவில்லை. மாறாக நாட்டு மக்களைத் துண்டாடி, பல்வேறு பிரிவுகளாக்கி அவர்களை அழிவுசார்ந்ததோர் எதிர்காலத்தை நோக்கி ...
Read More »ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி?
அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது வெளிவந்துகெண்டிருந்த ‘சரிநிகர்’ பத்திரிகை அதன் முன்பக்கத்தில் குகமூர்த்தி காணாமல் போய் இத்தனை நாட்களாயிற்று என்ற செய்தியைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தது. சில ஆண்டுகளின் பின் சரிநிகரும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் குகமூர்த்தியைப் பற்றி ஆங்காங்கே யாராவது அவருடைய நண்பர்கள் அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஏதும் எழுதுவார்கள் அல்லது பேசுவார்கள். ஆனால் குகமூர்த்தியைத் தமிழ்ச்சமூகம் மறந்து இன்றோடு 19 ஆண்டுகளாகி விட்டது. ...
Read More »கூட்டுஒப்பந்தத்திற்குப் பின் உருவாகியுள்ள எதிர்ப்புகள்!
தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. முதல் தடவையாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தொழிற்சங்க கூட்டமைப்பு தவிர்த்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. மட்டுமல்லாது சில திருத்தங்களுடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய மலையக தொழிற்சங்கங்களைப்பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமது தரப்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட ஒரு தொழிற்சங்கம் கூட்டு ஒப்பந்தத்தை புறக்கணித்தமை பற்றி ...
Read More »ஆபத்தை எதிர்கொள்கிறதா ஊடகவியல்?
உலகளாவிய ரீதியில், ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் கவலைதரும் வாரமாக, கடந்த வாரம் அமைந்திருந்தது. இணையத்தள உலகில் கொடிகட்டிப் பறந்த பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர், கடந்த வாரம் நீக்கப்பட்டிருக்கின்றனர். இணையத்தளங்களைக் கேளிக்கைக்காகப் பயன்படுத்தும் பலருக்கும், பஸ்ஃபீட் இணையத்தளம் தெரிந்திருக்கும். பூனைக் குட்டிகளின் புகைப்படங்களையும் நகைச்சுவையான புதிர்களையும் பகிர்ந்து, இளைஞர்களிடத்தில் நற்பெயரைப் பெற்றுக்கொண்ட பஸ்ஃபீட், காத்திரமான ஊடகவியலிலும் பின்னர் ஈடுபட்டது. குறிப்பாக, புலனாய்வுச் செய்தியிடல் தொடர்பில் விருதுகளை வென்ற ஊடகமாக அது மாறியிருந்தது. ஆனால் இப்போது, பஸ்ஃபீட், ஹஃபிங்டன் போஸ்ட் உள்ளிட்ட இணைய ஊடகங்கள் பல, ...
Read More »அரசியலமைப்பு சூழ்ச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள்!
“தனி மனிதன் ஒருவன் ஆட்சி செய்யும் பிரஜைகள் நகரம் எந்த வகையிலும் பிரஜைகள் நகரம் அல்ல” – சொபொக்லீஸ் (என்டிகனி) இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். இன்றிலிருந்து சுமார் ஒரு வருட காலப்பகுதிக்குள் அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியும் தெரிவு செய்யப்படவிருக்கிறார். கடந்த காலத்தில் செய்த தவறுகளை எதிர்காலத்தில் செய்யாதிருக்க எம்மால் முடியுமா? கடந்த காலத்தில் செய்த தவறுகள்தான் யாவை? அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசியலமைப்பிற்கு எதிரான சூழ்ச்சியின் சூடு இன்னும் ...
Read More »கவனிக்க வேண்டிய கணக்கெடுப்புகள்!
தமிழர் பிரதேசங்களில் இறுதிப் போர் நடைபெற்று ஒரு தசாப்த காலத்தின் பின்னர், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக் குழு ஆகிய இரண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இப்பணியை மேற்கொள்ள உள்ளன. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கையில் உள்ளவர்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்களிடமுள்ள விவரங்களை வழங்க வேண்டும் எனவும் இவ்விரு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. “ஆகக் குறைந்தது, இறந்தவர்களின் பெயர்களைச் சேகரிப்பதன் மூலமாவது, அவர்களுக்கு மரியாதை ...
Read More »