தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலும் சிட்னியிலும் சமகால அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்குகொள்ளவுள்ளார். தற்போதைய சமகால அரசியல் தொடர்பிலும் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாடலை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Read More »கொட்டுமுரசு
விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை (பின்னனி தகவல்கள்)
விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை சம்பந்தமாக இராணுவத்தினரின் மேல் சுமத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு, ஒரு எதிரி இல்லாத நிலையில் இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளம்செழியனினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கில் எதிரிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்ததுடன், மற்றுமொரு இராணுவம் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த வழக்கு இடம் பெற்றுவந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் எதிரிகள் நால்வருக்கும் தலா ...
Read More »வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை: முதலமைச்சர் ஆதங்கம்!
வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை. வடமாகாணத்தின் நிதியம், கொடைகள் மத்திய வங்கியின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(03) மன்னார் உள்ளக விளையாட்டு அரங்கை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நான் போதைப் பொருள் தடுப்புக் கூட்டமொன்றுக்கு கொழும்பு சென்றிருந்தேன். நண்பரும் சட்டத்தரணியுமான அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்பொழுது அங்கு பேசிய அத்தடுப்பு நிறுவனத்தின் தலைவர் வடமாகாணம் விரைவில் மற்றைய ...
Read More »அரசுகளின் நீதி – நிலாந்தன்
அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால், அதேசமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே, மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. மாற்றத்தைப் பாதுகாப்பது என்றால் அனைத்துலகப் பொறிமுறையை ஆதரிக்க முடியாது. ஏனெனில், மாற்றத்தின் பிதாக்களான மேற்கு நாடுகளும், இந்தியாவும் தூய அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களத் ...
Read More »சம்பந்தரின் இலக்கு? – யதீந்திரா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை மற்றும்இ கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குழுக்களின் பிரதித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டமை ஆகியன தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று செயலாற்றப் போகின்றார் என்று ஒரு சாராரும்இ அவரால் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை வீரியத்துடன் முன்னெடுக்க முடியாதென்று இன்னொரு சாராரும்இ இல்லை – இன்றைய சூழலை சாதகமாக ...
Read More »Chief Minister Wigneswaran rejects domestic investigation in new NPC resolution
Questioning the legal possibilities of conducting a credible investigation within the domestic sphere of the Sri Lankan Constitution and pointing out other hurdles within the SL State system, C.V. Wigneswaran, the Chief Minister of Northern Provincial Council (NPC) on Tuesday passed a resolution rejecting the domestic process being proposed by the USA and other powers. In ithe new resolution, the ...
Read More »தமிழரசுக் கட்சியின் செயல் நியாயமானதா….?
பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான நியமனங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு- தோல்வியுற்ற துரைரட்ணசிங்கத்துக்கும், மற்றொன்று வன்னி மாவட்டத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பேருமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள். இதனால், இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி தமதாக்கிக் கொண்டு, ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு அநீதி ...
Read More »தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதா? – நிலாந்தன்
தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒரு நாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இரு தேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா அரசியல் போக்குளையும் பிரதிபலிக்கும் விதத்தில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அரசியல் கட்சி பிரமுகர்களை ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்துத் தொடர்பாக பேச ...
Read More »கூட்டமைப்பிடம் சில கேள்விகள் – நிலாந்தன்
2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது.2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின்வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...
Read More »இனி பொறுமை இல்லை! வெளிநாட்டு நிதிகளை பெற்றுக்கொள்ள அதிகாரம் வேண்டும் – சம்பந்தர்
அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மேலாக வளங்கல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை பெறும் வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். இவையெல்லாம் உள்ளடங்கிய நல்லதொரு அரசியல் தீர்வின் மூலமே நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேசிய கட்சிகள் தமது நிலைப்பாட்டினை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்க வேண் டும். இனிமேலும் காலத்தை கடத்தமுடியாது. புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின் விரை ...
Read More »