Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / சம்பந்தரின் இலக்கு? – யதீந்திரா

சம்பந்தரின் இலக்கு? – யதீந்திரா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை மற்றும்இ கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குழுக்களின் பிரதித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டமை ஆகியன தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று செயலாற்றப் போகின்றார் என்று ஒரு சாராரும்இ அவரால் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை வீரியத்துடன் முன்னெடுக்க முடியாதென்று இன்னொரு சாராரும்இ இல்லை – இன்றைய சூழலை சாதகமாக கையாளுவதற்கு மேற்படி பதவி நிலைகளை காத்திரமாக பயன்படுத்த முடியுமென்று இன்னொரு தரப்பினுரும் பலவாறான அப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான அபிப்பிராயங்களில் பெருமளவிற்கு ஒரு பதட்டமும் அச்சவுணர்வும் மேலோங்கியிருப்பதை காணலாம். எங்களுடைய அரசியல் சூழலில்இ பொதுவாக அரசியல் என்றவுடன் அனைத்து விடயங்களையும் ஒரு விதமான அச்சத்துடனும் பதட்டத்துடனும் நோக்கும் போக்குண்டு. கடந்த 67 வருடங்களாக சிங்கள இராஜதந்திரத்திற்கு முன்னால் தோல்வியை சந்தித்ததால் என்னவோஇ இவ்வாறானதொரு அச்சம் எங்களை அறியாமலே எங்களை ஆட்கொண்டு விடுகின்றது. அந்தவகையில்தான்இ எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரமும் தமிழ்த் தேசியவாத சக்திகள் மத்தியில் ஒரு வித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சிறிலங்கா அரசுஇ சர்வதேச அளவில் நெருக்கடிகளை சந்தித்திருக்கும் இன்றைய சூழலில்இ எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தனை தங்களுக்கு சாதகமாக கையாண்டு விடுவார்களோ என்னும் ஒருவித நடுக்கம் தமிழ்ச் சூழலில் நிலவுவது உண்மை. உண்மையிலேயே சிலர் பதட்டப்படுவது போன்று சம்பந்தரின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது சிக்கலான ஒன்றுதானா? இதே போன்று ஒரு சில தமிழ்த் தேசிய கருத்தியல்வாதிகள் என்போர்இ இன்றைய சூழலை முன்னிறுத்தி பிறிதொரு கேள்வியையும் எழுப்புகின்றனர். அதாவதுஇ சம்பந்தரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டமையைக் கொண்டு தெற்கில் இனவாதம் தோற்றுவிட்டது என்னும் முடிவுக்கு வரமுடியுமா என்று அவ்வாறானவர்கள் கேட்கின்றனர். பின்னர்இ அவர்களே அப்படி கருதமுடியாது என்று அதற்கு பதிலும் அளிக்கின்றனர். இவை அனைத்திற்கும் பின்னாலும் இருப்பதோஇ நான் ஏலவே குறிப்பிட்டது போன்று ஒரு வித பயமும் பதட்டமுமே. எங்கு எதிரி நம்மை கையாண்டு விடுவானோ என்பதுதான் அந்த பயத்தின் ஆணிவேர். ஆனால் நிலைமைகளை கையாளுவது தொடர்பில் ஏன் நாம் பயப்பிட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி. எங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையிருந்தால்இ எந்தவொரு சூழலை கையாளுவது குறித்தும் நாம் அச்சப்பட வேண்டியதில்லை. எங்களுக்கு முன்னாலுள்ள அனைத்து சக்திகளுடனும் நாம் ஊடாடுவதன் மூலம்தான் சில விடயங்களில் முன்நோக்கி பயணிக்க முடியுமென்றால் அதனை தவிர்த்து ஒடுவது புத்திசாதுர்யமானதொரு அணுகுமுறையாக இருக்காது.

முதலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிநிலையை எடுத்து நோக்குவோம். இன்று சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது போன்றுஇ 1977இல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்துஇ அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற நடைமுறைகளின் படி அதிக ஆசனங்களை கொண்டிருக்கும் இரண்டாவது கட்சி என்னும் அடிப்படையில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் அப்போது அமிர்தலிங்கம் தனிநாட்டுக்கான மக்கள் ஆணையொன்றை பெற்றுவிட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இன்று சம்பந்தர் சமஸ்டி தீர்வொன்றிற்கான மக்கள் ஆணையுடன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார். ஆனால் அன்றைய சூழலில் ஆயுத விடுதலை இயக்கங்களின்இ முக்கியமாக விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக அமிர்தலிங்கத்தால் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடித்திருக்க முடியவில்லை. அன்றைய சூழலோடு ஒப்பிட்டால் புற அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியப்பாடு சம்பந்தருக்கு இல்லை. அந்த வகையில் இந்தப் பதவியை கொண்டு சம்பந்தர் எதை செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்வதற்கான சாதகமான சூழல் அவருக்குண்டு. ஆனால் அவர் எதைச் செய்ய விரும்புகிறார் என்பதுதான் கேள்வி. சம்பந்தர் அவரது ஐம்பது வருடகால அரசியல் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் நிற்கின்றார். எனவேஇ அவர் செய்ய விரும்புவதை செய்வதற்கான இறுதி வாய்ப்பு இது ஒன்றுதான். அதேவேளை அவர் இந்தக் காலத்தில் மேற்கொள்ளவுள்ள விடயங்கள்தான் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அவரது இடத்தையும் தீர்மானிக்கவுள்ளது.

sampanthan-trinco-860-09சம்பந்தனை பொறுத்தவரையில் தெற்குடன் சுமூகமான உறவில்
இருந்தவாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு நோக்கி முன்னகர வேண்டும் என்று சிந்திப்பதாகவே தெரிகிறது. ஆனால் சம்பந்தனுக்கும் ஏனையவர்களுக்கும் இடையில் ஒரு வித்தியாசமுண்டு. அதாவதுஇ சம்பந்தன் தேர்தல் மேடைகளில் ஆவேசமாக பேசவில்லைஇ மாறாக மைத்திரிபால சிறிசேன மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவராகவே பேசியிருந்தார். திருகோணமலையில் இடம்பெற்ற பல தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் மைத்திரிபால நேர்மையானவர்இ அவர் ஒரு இனத்துவேசியல்லஇ அவர் நெல்சன் மண்டேலாஇ மார்ட்டின்லூதர் கிங் போன்றோரின் சிந்தனைகளை பின்பற்ற விரும்புகிறார் என்றுதான் சம்பந்தன் திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருந்தார். முன்னர் தான் கூறியதற்கு ஏற்ப தற்போது சம்பந்தன் செயலாற்ற முற்படுகின்றார். என்னைப் பொறுத்தவரையில் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இன்றைய சூழலில் தெற்கை முற்றிலுமாக விரோதித்துக் கொண்டு முன்னைய வகை எதிர்ப்பரசியல் செய்ய முடியாதவொரு அரசியல் யதார்த்தம் இருக்கிறது என்பதையும் நாம் தட்டிக்கழிக்க முடியாது என்பதே எனது அபிப்பிராயம். அதேவேளை சிங்கள ஆட்சியாளர்களை முற்றிலுமாக நம்பி எந்தவொரு அரசியல் முன்னெடுப்புக்களிலும் ஈடுபட முடியாது என்னும் வாதத்தையும் தட்டிக்கழிக்க முடியாது.

இன்று தமிழர்களுக்கு சாதகமாக ஒரு விடயம் இருக்கிறதென்றால் அதுஇ இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை அரசின் மீதிருக்கின்ற குற்றச்சாட்டுக்களும்இ அந்த குற்றச்சாட்டு சர்வதேச மயப்படுத்தப்பட்டிருப்பதும்தான். ஆனால் இந்த இடத்திலும் நாம் ஒரு விடயத்தை மறந்துவிடக் கூடாது. ஒரு விடயம் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்காகவே அதில் சர்வதேச சக்திகள் தலையீடு செய்துவிடுவதில்லை. அந்த வகையில் நோக்கினால் இலங்கையின் இறுதி யுத்தத்தில் அப்பாவி தமிழ் மக்கள் திட்டமிட்டே இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அனைவரும் இன்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இது தமிழ் மக்கள் மீது ஒரு உலகளாவிய அனுதாபத்தையும்இ மறுதலையாக சிங்கள அரசு மீது ஒரு உலகளாவிய வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சனல் – 4 இன் பங்கு பிரதானமானது.

எனவே மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காண்பிப்பதுடன்இ சர்வதேச சமூகத்தின் மத்தியில் மீண்டும் நிமிர்ந்து நிற்பதற்கான சில வீட்டு வேலைகளை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நிச்சயமாக உண்டு. எனவே அதற்காக சில விடயங்களை உள்ளகரீதியில் நிரூபித்துக் காட்டவேண்டிய கடப்பாடும் அவர்களுக்குண்டு. இந்த இடத்தில்தான் தமிழ் மக்களின் பிச்சினைகளுக்கான ஒரு தீர்வை காணவேண்டிய தேவையை அவர்களால் புறம்தள்ள முடியாமல் போகிறது. இந்த இடம்தான் தமிழர் தரப்பு தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திஇ செயலாற்ற வேண்டிய இடமும் கூட. இந்த விடயங்களை கையாள வேண்டிய வரலாற்று பொறுப்பைத்தான் சம்பந்தன் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். இனி அவர் அதை எவ்வாறு கையாள போகின்றார் என்பதில்தான் அவரது சாணக்கியத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.

சம்பந்தன் தேர்தல் மேடைகளில் ஒரு விடயத்தை வலியுறுத்தி வந்தார். அதாவதுஇ 2016இற்குள் ஒரு நல்ல தீர்வு காண முடியுமென்று நம்புகிறேன். இந்த சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டால் அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும். சம்பந்தன் எதனை மனதில்கொண்டு இதனை கூறினாரோ நானறியேன். ஆனால் இன்று அமைச்சரவை நியமனத்தின் பின்னர் அரசியல் சாசனத்தை திருத்தியமைப்பது தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. இதற்கான நிபுணர் குழுவொன்றும் விரைவில் உருவாக்கப்படவுள்ளது. அரசியல் சாசனத்தில் எப்படியான மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்பதைக் கொண்டுதான்இ சம்பந்தர் எதனை இலக்காகக் கொண்டு செயற்பட்டார் என்பதும் வெளித்தெரியும். சந்திரிக்கா குமாரதுங்க கொண்டுவந்த தீர்வுப்பொதியில் சம்பந்தனின் பங்களிப்பும் உண்டு. இதே போன்று இன்னும் பல தீர்வாலோசனைகள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவ்வாறான பரிந்துரைகளை கருத்தில் கொள்ளக் கூடிய ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமா? ஆனால் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வானதுஇ கொழும்பால் எக்காலத்திலும் மீளப்பெற முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சம்பந்தனின் வரலாற்றுச் சாதனையாக அமைய முடியும். அதேவேளை அவர் சாணக்கியத் திறனும் தமிழர் வரலாற்றில் போற்றப்படும். அவ்வாறில்லாது போனால் சம்பந்தனின் இடம் தமிழர் அரசியல் வரலாற்றில் கேள்விக்குள்ளாகும் என்பதில் ஐயமில்லை.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். அதாவதுஇ இன்று சம்பந்தன் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னால் செய்யக் கூடிய உச்சமான ஒன்றை செய்ய முயற்சிக்கின்றார்இ ஒருவேளை சம்பந்தன் அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வெற்றியை பெற்றால் அதில் செல்வம் அடைக்கலநாதனுக்கும் ஒரு பிரதான பங்களிப்பு இருக்கும். உண்மையில் சம்பந்தனின் முயற்சிகளுக்காக தன்னை பணயம் வைத்திருப்பவர் டெலோவின் தலைவர் செல்வமேயன்றிஇ தமிழரசு கட்சியை சேர்ந்த எவருமல்ல. செல்வம் எவ்வாறு இந்த பதவிநிலையில் இருந்தவாறு தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலையும் முன்னெடுக்கப் போகின்றார் என்பது அவருக்கு முன்னாலுள்ள சவால். ஒருவேளை இதில் சறுக்கினால் அவரது அரசியல் இருப்பு பெரிதும் கேள்விக்குள்ளாகலாம்.

சம்பந்தனை பொறுத்தவரையில் ஒன்றில்இ அவர் தனது ஒட்டுமொத்த திறனையும் காண்பித்து தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை பெறுவார் அல்லது சிங்கள இராஜதந்திரத்தால் விழுங்கப்பட்ட தமிழ் மிதவாத தலைவர்களின் வரிசையில் சேர்வார். இரண்டில் ஒன்றுதான் நிகழ முடியும். சம்பந்தனுக்கு முன்னாலுள்ள பிரதான சவால் அவர் தன்னை சிங்கள மக்கள் மத்தியில் நிரூபிப்பதற்காக எந்தளவிற்கு இறங்கிப் போகப் போகின்றார் என்பதில்தான் இருக்கிறது. தான் ஒரு பிரிவினைவாதியல்ல என்பதையும்இ தான் சிங்கள மக்களுக்கு எதிரான ஒரு தமிழ் அரசியல்வாதியல்ல என்பதையும் நிரூபிப்பதற்காக சம்பந்தன் கடும் பிரயத்தனங்களை செய்து வருகின்றார். தனது முதலாவது நாடாளுமன்ற உரையிலும் அதனை அழுத்திக் குறிப்பிட்டிருக்கின்றார். நான் இதுவரை இருந்துவந்த தமிழ் தலைவர்கள் போன்ற ஒருவனல்ல என்பதை நிரூபிப்பதற்காக சம்பந்தன் எந்தளவிற்கு தன்னை தமிழ்த் தேசிய நீரோட்டத்திலிருந்து விலத்திக் கொள்ளப் போகின்றார்? இந்த கேள்விகளுக்கு நான் எழுந்தமானமாக ஊகங்களின் அடிப்படையில் பதிலளிக்க விரும்பவில்லை. அவ்வாறு நான் பதிலளித்தால் சம்பந்தன் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் போன்று செயற்படப் போகின்றார் என்று பதட்டப்படுவோர் வரிசையில் நானும் போயமர நேரிடும். அதனை நான் செய்ய விரும்பவில்லை. எல்லாவற்றுக்குமான பதில் காலத்திடமுண்டு.

About emurasu

Check Also

அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் ...