கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.நேற்று முன்தினம் அதாவது கடந்த 24ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கூடப்பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடக்கப்படுவதையொட்டி மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள்.கொரோனா வைரஸ் தோன்றிய காலமிருந்தே அதுதொடர்பான கட்டுக்கதைகளும் தோன்றத் தொடங்கின. கிளிநொச்சியில் நடந்த ஒரு கதை வருமாறு…ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார்.காணொளியில் தான் தடுப்பூசி பெற்றுக் கொண்டபின் தனக்கு காந்த சக்தி ஏற்பட்டதை நிரூபிக்கும் விதத்தில் ஊசி ...
Read More »கொட்டுமுரசு
தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் காலமானார்!
நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். சிறுவயதிலேயே ...
Read More »அநுராதபுரத்தில் ஈனம்! அமெரிக்காவில் வேசம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேரடியாக துப்பாக்கி முனையில் கொலைப் பயமுறுத்தல் விடுத்தவர் அப்பாவியல்ல. ஏற்கனவே இரண்டு படுகொலைச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்களைப் புரிந்து அரசியல் கலப்பு நீதியால் தப்பியவர். அமெரிக்காவில் நின்று புலம்பெயர் தமிழரை பேச்சுக்கு அழைப்பு விடுத்திருப்பவர் சாதாரண பிரஜையல்ல. கொலைச் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். புலம்பெயர் தமிழரை தடை செய்த இலங்கையின் முதலாம் இலக்க போர்க்குற்றவாளி. மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பித்த வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வு அமெரிக்காவில் ஆரம்பமாவதற்கு ...
Read More »இலங்கைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்?
கொரோனா வைரஸின் பேகமான பரவல் அச்சம் இருந்து கொண்டிருக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குத் தாக்குதல் அச்சுறுத்தல், நாரேகஹம்பிட்டி வைத்தியசாலைக் கழிப்பறைக்குள் கைக்குண்டு மீட்பு, யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் இரண்டு வெடிகுண்டுகள் மீட்பு, திருகோணமலை, மூதூரில் இரண்டு கிளைமோர்கள் மீட்பு என்றெல்லாம் செய்திகள் கடந்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமிருக்கின்றன. நேரடியாகச் சொன்னால், கடந்த 13அம் திகதி முதல் சர்வதேச ரிதியில் எழுந்திருக்கும் அழுத்தங்கள் இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் வடிவத்திலும் எதிரொலிக்கின்றன ...
Read More »வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவது எப்படி?
வெற்றியாளர்கள் எந்தவொரு செயல்களை செய்வதற்கு முன்பும் சரியாக திட்டமிடுவார்கள். அப்படி திட்டமிட்டு செயல்படுவது வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்: காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் அன்றைய நாளில் என்னென்ன வேலைகளையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் நிறைய பேர் உண்டு. மறுநாளில் முடிக்க வேண்டிய வேலைகளை நினைத்து இரவில் தூக்கத்தை தொலைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வெற்றியாளர்கள் எந்தவொரு செயல்களை செய்வதற்கு முன்பும் சரியாக திட்டமிடுவார்கள். முந்தைய நாள் மாலையிலோ, இரவிலோ தூங்க செல்வதற்கு முன்பு அடுத்த ...
Read More »ரத்வத்த சம்பவம்: அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து கவலை எழுப்புகிறார் அம்பிகா
சிறைச்சாலை முகாமைத்துவம், கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறை வளாகங்களுக்குள் போதையில் வலுக் கட்டாயமாக பிரவேசித்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்குப் பின்னரான நிகழ்வுகள் தொடர்பாக , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ட்விட்டரில் பல கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். ரத்வத்தயின் நடத்தையால் பாதிக்கப்பட்ட கைதிகள் எவ்வாறு துரிதமாக அமைச்சர் ராஜபக்ஷவின் வருகை தொடர்பாக அழைப்பு விடுக்கும் செய்தியை அனுப்பக்கூடியதாக இருந்தது என்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச வின் வருகை குறித்து ...
Read More »மீண்டும் அரியணை ஏறுவாரா ட்ரூடோ?
கனடாவில் இன்று பொதுத்தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இரண்டு வருடகாலப்பகுதியில் இரண்டாவது தடவை கனடாவில் பொதுமக்கள் பொதுதேர்தலில் வாக்களிக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக தேர்தலை ( இரண்டு வருடகாலத்திற்கு முன்பாக ) தேர்தலை அறிவித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் – மூன்றாவது முறையாக அரியணை ஏறுவதே அவரது நோக்கம். ஐந்து வாரகாலமாக தீவிரமாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து தலைவர்களும் வாக்காளர்களை நோக்கி தங்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர். இரண்டு முன்னணி வேட்பாளர்கள் மத்தியிலான கடுமையான போட்டி தொற்றுநோயிலிருந்து ...
Read More »அரசாங்கம், ஐநாவை… கையாளத் தொடங்கி விட்டதா?
ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல மீளாய்வு அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது போலவே வெளிவந்திருக்கிறது. அது சிங்கள கூட்டு உளவியலை ஒப்பீட்டளவில் அதிகம் பயமுறுத்தாதவிதத்தில் இலங்கை முழுவதுக்குமான மனித உரிமைகள் தொடர்பான ஓர் அறிக்கை என்ற வெளித்தோற்றத்தை காட்டுகிறது. இந்த அறிக்கை இவ்வாறு அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக வெளிவருவதற்கு உரிய வேலைகளை அரசாங்கம் கடந்த சில மாதங்களாக தீவிரமாகச் செய்துவந்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற ஓர் ...
Read More »உள்ளாடைக்கும் தட்டுப்பாடா?
நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை.ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச் சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன்.ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து அதிகமாக செய்திகளை வெளியிடுகின்றனர்.இச்செய்திகள் உள்நோக்கத்தோடு மிகைப்படுத்தப்பட்டவை என்று இலங்கைத்தீவில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ...
Read More »ஜெனிவா:48 சொன்னதும் சொல்லாததும்!
மனித உரிமைப் பேரவையின் இந்த மாத 48வது அமர்வில் 46:1 இலக்கத் தீர்மானத்தின் முடிவுக்கிணங்க ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் முன்வைத்த வாய்மூல அறிக்கையை வழக்கம்போல இலங்கை அரசு நிராகரித்துள்ளது. சீனா அதற்கு பக்கப்பாட்டு வாசித்துள்ளது. கோதபாய அரசு செய்யத் தவறியவைகளையும் செய்ய வேண்டியவைகளையும் ஆணையாளரின் அறிக்கை பட்டியலிட அதில் சொல்லப்படாதவைகளை தமிழர் தரப்பு பட்டியலிடுகிறது. அப்படியானால் 49ம் 51ம் அமர்வுகளுக்கு முற்கூட்டியே அவ்விடயங்களை பேரவைக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கானது. இதனை செய்யத் தவறின் இதற்கும் தனியான பொறுப்புக்கூறல் தீர்மானம் தேவைப்படலாம். ...
Read More »
Eelamurasu Australia Online News Portal