கொட்டுமுரசு

தமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது ?

பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தேர்­தலில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதன் மூலம், புதிய கட்­சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பத­வியில் அறி­மு­க­மா­கி­யுள்­ளது. இந்தப் புதிய முக பிர­வே­ச­மா­னது நாட்டைப் புதி­யதோர் அர­சியல் நெறியில் வழி­ந­டத்திச் செல்­வ­தற்கு வழி­வ­குக்­குமா என்­பது பல­ரு­டைய ஆர்­வ­மிக்க கேள்­வி­யாக உள்­ளது. ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுள்ள கோத்­த­பாய அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­ட­வ­ரல்ல. பாராளு­மன்ற அர­சி­யலில் அனு­ப­வ­மு­டை­ய­வ­ரு­மல்ல. யுத்தச் செயற்­பாட்டுப் பின்­ன­ணியைக் கொண்­டதோர் அதி­கார பல­முள்ள சிவில் அதி­கா­ரி­யா­கவே அவர் பிர­பலம் பெற்­றி­ருந்தார். ஒரு சிப்­பா­யாக இரா­ணு­வத்தில் பிர­வே­சித்து ...

Read More »

ஜெனரல் குணரட்ணவின் நியமனம்! -பாதுகாப்பு குறித்து கோத்தாபய உறுதியாகவுள்ளார்!

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை , இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மிகவும் உறுதியாகவுள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது. நவம்பர் 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த பெரும்பான்மை சிங்களவர்கள் இலங்கை ஜிகாத் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலின்கீழ் உள்ளது என்ற அச்சத்தின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சியடைவது குறித்தஅச்சத்தின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதும்,  ...

Read More »

கோத்தாபயவின் வெற்றியையும் சஜித்தின் தோல்வியையும் புரிந்துகொள்தல்!

கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச செல்லுபடியான வாக்குகளில் 52.25 சதவீதத்தைப் பெற்று  நிறைவான ஒரு வெற்றியை தனதாக்கிக்கொண்டிருக்கும்  அதேவேளை, அவரின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். ஞாயிறன்று  தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் ...

Read More »

வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்

நான் இறந்தால் என்னைப் பற்றிப் பத்திரிகைகள் எழுதுமா என்பது கேள்வி. தமிழ்நாடு எழுத்தாளர்களுக்கு அளிக்கும் கெளரவம் அத்தகைய சந்தேகத்தை எழுப்புகிறது… பத்திரிகைகளாவது ஒருநாள் எழுதும்… எழுதாமலும் போகும். ஆனால், நண்பர்கள் என்று சில பிறவிகள் இருக்கிறார்களே, அவர்களைப் பற்றி நினைத்துவிட்டால் எனக்கு சாகக்கூட பயமாயிருக்கிறது.’ நையாண்டி பாரதி என்ற புனைபெயரில் ‘கிராம ஊழியன்’ இதழில் 1944-ல் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரை இப்படித்தான் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது என்று உணர்ந்திருந்தபோதிலும், ஒரு எழுத்தாளராகவே வாழ்ந்து மறைய வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டவர் ...

Read More »

வடமாகாண பெண்­களும் அவர்­க­ளது தேவை­களும்!

இலங்­கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேர­டி­யாக பல்­வே­று­பட்ட பொரு­ளா­தார, அர­சியல் மாற்­றங்கள் மற்றும் சமய சமூக பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­தது. யுத்­தத்தின் அதி­யுச்ச பாதிப்பை தன்­ன­கத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகு­தி­களில் யுத்­தத்தின் பின்னர் பாரிய அளவு இல்­லா­விட்­டாலும் ஒரு அள­விற்கு யுத்­தத்தின் வடுக்­களை குறைப்­ப­தற்­கான அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் இடம் பெற்­றாலும் வடக்கு கிழக்கு பகு­தியில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் உள ரீதி­யான பாதிப்பு இது­வரை சரி செய்­யப்­பட முடி­யா­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.   மனி­தர்­க­ளா­கிய நாம் ஏதேனும் பிரச்­சி­னை­க­ளுக்கு அல்­லது கசப்­பான சம்­ப­வங்­க­ளுக்கு ...

Read More »

விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்!

எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும். 1983ஆம் ஆண்டு, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா ...

Read More »

ஜனாதிபதித் தேர்தல் – 2019 ; நடைபெறக்கூடியது என்ன ?

ஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திக­தி­யன்று நடை­பெற்று ஓரிரு நாட்­களில் புதிய ஜனாதிப­தியும் தெரிவு செய்­யப்­பட்­டு­வி­டுவார். யார் புதிய ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என்ற ஏக்­கத்­திலும் ஊகத்­திலும் மக்கள் உள்­ளனர். அதற்கு காரணம் 35 அபேட்­ச­கர்கள் போட்­டி­யி­டு­வ­தல்ல வேறு கார­ணங்­க­ளாகும். எனினும் பெரும்­பா­லான மக்கள் ஜனாதிபதித் தேர்­தலில் டம்மி அபேட்­ச­கர்­களும் அர­சி­ய­லையே பொழு­து­போக்­காக கொண்ட ஜோக்­கர்­களும் போட்­டி­யி­டு­வதால் அவர்­களில் யார் வெற்றி பெறுவர் என்­பதை தீர்­மா­னிப்­பதில் சங்­க­டப்­ப­டாமல் நிச்­ச­ய­மாக சஜித், கோத்­தபாய, அநுர குமார திசா­நா­யக்க ஆகிய இவர்­களில் ஒரு­வரே ...

Read More »

தேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம் !- இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம்!

வோசிங்டன் போஸ்ட் தமிழில் ரஜீபன் இலங்கையின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் செயற்பட்ட கொலைகும்பல்களிடமிருந்து தப்புவற்காக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு நாடு கடந்த நிலையில்வாழும் இலங்கைபத்திரிகையாளர்கள், தங்;கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வழிநடத்தியவர் இவ்வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதால் ,தாங்கள் மீண்டும்   இலங்கைக்கு திரும்பமுடியாது எனவும் தங்களிற்கு நீதி கிடைக்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். 2005 முதல் 2015 வரையான  மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில்  ஊடகஉறுப்பினர்களிற்கு எதிராக  தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கம்  தண்டிக்க தவறியுள்ளமை குறித்து  ...

Read More »

ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு கோத்தாபயவிற்கு உதவுதல்?

திசராணி குணசேகர தமிழில் ரஜீபன் என்;னிடம் இரண்டு குழுக்களே உள்ளன, பயங்கரவாதத்திற்கு எதிராக போராட விரும்புவர்களும் பயங்கரவாதிகளுமே அவர்கள். நீங்கள் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடுபவர்களா? -பிபிசி பேட்டியின் போது கோத்தாபய 2015 இல் பெரும்பான்மையான இலங்கையர்கள் ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்வதற்காக வாக்களித்தனர்.அந்த ஜனநாய சூழலை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக நாங்கள் வாக்களிக்கவேண்டுமா? அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதற்கு நாங்கள் விரும்பாமலே துணை போகப்போகின்றோமா? 2018 இல் இடம்பெற்ற சிறிசேன-மைத்திரி சதிமுயற்சியின் போது மகிந்த ராஜபக்ச சிறிசேனவிற்கு நீதிமன்ற தீர்ப்பினை புறக்கணித்து தேர்தல்களிற்கு ...

Read More »

சஜித்பிரேமதாசவை உருவாக்கிய விடயங்கள் எனக்குள்ளும் எதிரொலிக்கின்றன!

அகிம்சா விக்கிரமதுங்க தமிழில் ரஜீபன்    இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர்.  ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன். தோற்கடிக்க முடியாத, அற்புதமான,  அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன். கண்டிக்கத்தக்க –  கோழைத்தனமான  பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன். தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கின்றேன். இதன் மூலம் ...

Read More »