இலங்கையில் சட்டம், ஒழுங்கு நிலைவரத்தில் ஓரளவு மேம்பாடு ஏற்பட்டிருப்பதாக மக்களை நம்பவைப்பதற்கான பிரயத்தனத்தில் அரசாங்கத் தரப்பினர் பல்வேறு கதைகளைக் கூறினாலும், உண்மையிலேயே குற்றச்செயல்கள் படுமோசமாக அதிகரித்தவண்ணமே இருக்கின்றன.பாதாள உலகக் குழுக்களிடையேயான பகைமையின் விளைவாக தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் துப்பாக்கிச் சூட்டுக்கொலைகள் இடம்பெறாமல் அண்மைக்காலமாக ஒரு வாரம்கூட கழிந்ததில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட வத்தளையில் பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிப்பிரயோகத்தில் கொல்லப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. போதைப்பொருள் கடத்தல் வியாபாரம், கொலைகள் உட்பட பாதாள உலகக் குழுக்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமோ அவ்வாறு ...
Read More »கொட்டுமுரசு
மொழியாலும் ஆக்கிரமிக்கின்றதா சீனா?
ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே. சகல துறைகளிலும் இன்று ஆசியாவில் முதலிடத்திலிருக்கும் சீனா அமெரிக்காவிற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. எவ்வாறு ஒரு நாட்டிற்குள் உட்புகுந்து அந்நாட்டின் சகல விடயங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை சீனாவிடம் தான் கற்க வேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பு ஒரு நாட்டின் பொருளாதார சந்தை மட்டுமல்ல மொழி,கலாசாரம், அரசியல் ஆகியவற்றிலும் அது தனது கையை ஓங்கச்செய்துள்ளது என்பது இலங்கையைப்பொறுத்தவரை பொருத்தமாகத்தான் இருக்கின்றது போலும். சீனா ...
Read More »சம்பந்தரின் கோரிக்கையும் சம்பந்தருக்கான கோரிக்கையும்!
நாட்டில் மீண்டும் ஒரு குருதிக்களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனின் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல், பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர்; ஓரணியில் நின்று, புதிய அரசமைப்பு வெற்றி பெற உழைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எந்தத்தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து, முழுமூச்சுடன் பயணிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை எனக் கூறுவார்கள். அவ்வகையில் ஜனாதிபதி ...
Read More »புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் அரசியல் கருத்தொருமிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை!
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற மூன்று காரணிகளின் விளைவாக புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் அரசியல் கருத்தொருமிப்பு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. முதலாவது காரணி கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக்கு ( அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் நிபுணர்களின் அறிக்கை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவும் காட்டுகின்ற எதிர்ப்பு. ராஜபக்ச மாத்திரமே இதுவரையில் தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டி கருத்து வெளியிட்டிருக்கிறார். சிறிசேனவும் ராஜபக்சவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...
Read More »‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா?
இளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது. புகைப்படம் என்பது நமது ஞாபகங்களை உறைய வைக்கும் ஒரு அற்புதமான அதிசயம். பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அதில் மூழ்கி கடந்த காலத்திற்கு சென்று விடுவதுண்டு. அந்த காலத்தில் வீட்டின் வரவேற்பறையில் வரிசையாக தொங்க விடப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளை படங்கள் பல கதைகளைச் சொல்லும். பின்னாட்களில், போட்டோ ஸ்டுடியோவிற்கு குடும்ப சகிதமாக சென்று விறைப்பாக நின்று போஸ் ...
Read More »புதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்?- நிலாந்தன்
மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ஓர் ஆளுனரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத் தலைவரை மதிப்பிட வேண்டும். அவருடைய அரசியல் இலக்குகள் எவையெவை என்று மதிப்பிட வேண்டும். மைத்திரிபால சிறிசேன இன்னமும் ஓர் ஆண்டு வரை தான் பதவியிலிருக்கப் போகிறார். கடந்த ஒக்ரோபர் மாதம் அவர் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றைச் செய்திருந்தார். அதில் அவர் தனக்கு வாக்களித்த சிங்கள தமிழ் ...
Read More »அமெரிக்காவினால் பெண் ஜனாதிபதியொருவரை தெரிவுசெய்ய முடியுமா?
மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த செனட்டரும் கல்வியாளருமான எலிசபெத் வாரென் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு மிக உயர்ந்த பதவிக்கு பெண்ணொருவரைத் தெரிவுசெய்வதற்கு வாக்களிக்கக்கூடிய ஆற்றல் தனக்கு இருக்கிறதா என்ற கேள்வியை தன்னையே கேட்பதற்கு அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆற்றல்வாய்ந்தவர்களாக இருக்கிறார்களா என்று பல பெண்மணிகள் பரீசீலிக்கப்படுகின்ற நிலைமை உலகின் மிகவும் பழமைவாய்ந்த ஜனநாயகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் காணக்கூடியதாக இருக்கின்ற ஒரு முக்கியமான வேறுபாடாகும். கிறிஸ்ரின் கில்லிபிராண்ட், கெலி அயோட், ...
Read More »சமயோசித செயற்பாட்டின் அவசியமும் அவசரமும் – பி.மாணிக்கவாசகம்
குழப்பத்திற்குள் குழப்பம். அந்த அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து குழம்பிப் போக முடியாது. அதில் இருந்து மீள்வது எப்படி என்பதுதான் கேள்வி. ஒக்டோபர் 26 இல் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி என்பது முதலாவது குழப்பம். ஐம்பத்திரண்டு நாட்கள் நீடித்த அந்தக் குழப்பத்திற்கு, அக்டோபர் 26 ஆம் திகதிக்கு முந்திய அரசியல் நிலைமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காய் நகர்த்தல்களை மேற்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் ஒரு முடிவேற்பட்டது. இரண்டு பிரதமர்கள், இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற இரட்டை நிலையில், நாட்டில் அரசாங்கமே இல்லை ...
Read More »மொழியோடு புரிந்த போர்!
தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றது. முதலாவது ...
Read More »ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து உள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது, ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் புலிகளினதும் தேவைப்பாடுகள் ஒரு நேர்கோட்டில் சந்தித்தன. அதனால்தான், ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய, புலிகள் அனுமதித்தனர்” என, அவர் மேலும் தெரிவித்து உள்ளார். சற்றே, 70 ஆண்டுகள் ...
Read More »