பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி எழுத்தாளர்களும் வாசகர்களும் அவரைக் குறித்தும் அவரது எழுத்துகளைக் குறித்தும் எழுதியும் பேசிக்கொண்டும் இருக்கும் நிலையில், அவரைப் பற்றிய கடுமையான விமர்சனங்களும் எப்போதும்போலத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பாரதியைக் குறித்து திராவிடர் கழகத்தின் இதழ் ஒன்றில் வெளியாகிவரும் கட்டுரைத் தொடர் அதற்கு ஒரு உதாரணம். அந்தக் கட்டுரைத் தொடரின் ஆசிரியர் அடுக்கடுக்காக வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை: பிராமணர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது, இந்து மதத்தைக் காப்பதற்கான ஆரிய சமாஜத்தின் முயற்சிகளில் ஒன்று, பாரதியும் அதைத்தான் செய்தார்; அவர் மீசை வைத்துக்கொண்டது சாதி மறுப்பின் ...
Read More »கொட்டுமுரசு
தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியுமா ?
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடந்த இரண்டு ஊடகச்சந்திப்புகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால் கூட்டமைப்புக்குள் மட்டுமில்ல தமிழரசுக் கட்சிக்குள்ளும் குழப்பம் என்பதைத்தான். இரண்டு கடிதங்களை அனுப்பப்போய் கூட்டமைப்பு குழம்பிப் போயிருக்கிறது என்பது சரியா? இல்லை.கூட்டமைப்பு ஏற்கனவே குழம்பித்தான் இருக்கிறது. ஆனால் இந்த கடிதங்களால் அந்தக் குழப்பம் வெளிப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.கூட்டமைப்பு ஏன் குழம்பி காணப்படுகிறது? ஏனென்றால் அது ஒரு வலிமையான கூட்டாக இல்லை. அது இதுவரையிலும் பதிவு செய்யப்படாத ஒரு கூட்டு.அதற்கென்று பலமான ஒரு யாப்பு இல்லை. அதற்கென்று ஒரு பொது வங்கிக் கணக்கு ...
Read More »ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள்
கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில் 14 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்” என்பதாகும். வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையொட்டித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அரசாங்கம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது. முதலாவதாக அனைத்துலக விசாரணை மற்றும் அனைத்துலக தகவல் சேகரிப்பு பொறிமுறைகள் தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது..“உள்ளகப் பொறிமுறைகள் சோர்வின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு ...
Read More »தமிழ் தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்?
இந்த மாத 48வது ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார். அடுத்த வருட மார்ச் மாத 49வது அமர்வில் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அடுத்த செப்டம்பரில் இடம்பெறும் 51வது அமர்விலேயே இலங்கை விவகாரம் தொடர்பான ஆணையாளரின் பூரண அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்படும். இந்த ஒரு வருட இடைவெளியில் தமிழ்த் தேசிய தலைமைகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாத்தியமில்லையெனில், அது சிங்களத் தரப்புக்கான வெற்றியை தங்கக் கிண்ணத்தில் வழங்கியதாகிவிடும். ஜெனிவா – இலங்கை நெடுஞ்சாலை கடந்த சில நாட்களாக மிகவும் ...
Read More »காற்று மாசு அடைதலும்… மூளை பாதிப்பும்…
காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும். காற்று இல்லாமல் நம்மால் 5 நிமிடம்கூட இருக்க முடியாது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்சிஜனும் மீதமுள்ள 1 சதவீதம் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன. வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று ...
Read More »ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்
தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் முன்னைநாள் ஊடகவியலாளரான அந்தப் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்- மறைந்த மங்கள சமரவீரவின் அணுகுமுறையைக் கையாண்ட பீரிஸ்’. பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் ...
Read More »மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்!
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது. வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, முகமாலைப் பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது ...
Read More »வக்சினே சரணம் ?
“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண.எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருக்காததால் மருத்துவநிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல்போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் உட்பட நாட்டின் எல்லாத் துறைகளையும் ராணுவமயப்படுத்தி வருகிறது. பைசர் வக்சினை கையாளும் பொறுப்பு ...
Read More »நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காத்தான்குடி ஆதில்
நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முஹமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என நியூசிலாந்து நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர் தொடர்பாக இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட ...
Read More »ஆதிக்க சக்திகளினது நலனும் ஆப்கானிஸ்தான் விடுதலையும்
தலிபான்கள் ஆப்கானிஸ்தானையும் அந்த மக்களையும் விடுதலை செய்தார்கள் என்றால் ஏன் அந்த மக்கள் அவர்களை வரவேற்று வீதியில் இறங்கி கொண்டாடுவதற்கு பதிலாக அந்த மக்கள் தங்கள் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல பெண் ஊடகவியலா ளர்கள், கலைஞர்கள், புத்தியீவிகள் பலர் அழுதபடியே தங்கள் இருத்தல் பற்றியும் அடிப்படை மதவாதிகளால் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கும் சரியா சட்டங்கள் பற்றியும் பயத்துடன் பேசுவதை ஊடகங்கள் ஊடக அறிகிறோம். அந்த மக்கள் வெறுக்கும் இந்த பஸ்தூன் தலிபான்களோடு எப்படி சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் சுய நலனோடு பல ...
Read More »