கொட்டுமுரசு

எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை

எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை என்பதை எங்களால் உறுதியாக தெரிவிக்கமுடியும் என எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்ளுர் முகவரான சீ கொன்சேர்ட்டியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலில் நைட்ரிக் அசிட் கசிவு காணப்படுகின்றது என சர்வதேச கடற்பரப்பில் கப்பல் நின்றவேளை இலங்கைக்கு தகவல் வழங்கினோம் எனவும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 1 கப்பலில் இருந்தவர்களிற்கும் உங்களிற்கும் ஹார்பர் மாஸ்டருக்கும் இடையிலான இடையிலான மின்னஞ்சல்கள் ஏன் அழிக்கப்பட்டன? பதில் -எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் ...

Read More »

நாம் எனும் ஆப்பிரிக்க பாண்டு தத்துவம்

மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் ஒருமுறை ஆப்பிரிக்கப் பழங்குடிச் சிறுவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். ஒரு கூடை நிறைய மிட்டாய்களை வைத்தார். “யார் அதை முதலில் அடைகிறாரோ, அவருக்கே அந்த மிட்டாய்கள் அனைத்தும்” என்றார். அனைத்துச் சிறுவர்களும் கைகோத்தார்கள், இணைந்து ஓடிக் கூடையை அடைந்தார்கள், இனிப்புகளைப் பகிர்ந்து உண்டார்கள். ஆச்சரியப்பட்ட ஆய்வாளர் கேட்டார், “தனியாக ஜெயித்திருந்தால், கூடை முழுவதும் தனி ஆளுக்குக் கிடைத்திருக்குமே?” அதற்கு ஒரு சிறுமி, “பாண்டு” என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு ஓடினாள். அதன் அர்த்தம், “எல்லாரும் வருத்தமாக இருக்கும்போது, எப்படி ஒருவர் மட்டும் ...

Read More »

‘இந்திய தேசியம்தான் எங்கள் முதன்மையான எதிரி!”

”பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!” என்கிறார் பழ.நெடுமாறன். மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ”தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் ‘தமிழகம்’ என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன? அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ...

Read More »

எரிக்கப்பட்ட நூலகமும் எரிக்கப்பட முடியாத அறிவும்

கடந்த 31ஆம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளில் ஒரு பலமான கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தில் அது மிகவும் முக்கியமான ஒரு பகுதி. கடந்த 40 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு தமிழனாக ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.எரிக்கப்பட்ட நூலகத்தை தமிழ் மக்கள் எப்படி நினைவுகூர வேண்டும்? முதலாவதாக அதை எரித்த சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை உலக அளவில் ...

Read More »

முதல் காய்ச்சல் முதல் விமானம் வரை- உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளிற்காக ஒரு தாயின் இரண்டு வார போராட்டம்

அவர்களது குடும்பம் குயின்ஸ்லாந்தின் மத்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட பின்னர்( அவரது கணவரின் விசா முடிவடைந்த பின்னர்) பிரியா நடேசலிங்கம் தனது இரு புதல்விகளினதும்-தர்னிகா 3- கோபிகா 5 உரிமைகளிற்காக தீவிரமாக குரல்கொடுப்பவராக மாறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள தனது பிள்ளைகளி;ற்காக போராடுவதை தவிர பிரியா நடேசலிங்கத்திற்கு வேறு வழியில்லை என்கின்றார் அவர்களது குடும்ப நண்பர் சிமோன் கமரூன். எல்லைகாவல்படையினர் அவர்களை கிறிஸ்மஸ் தடுப்பு முகாமிற்கு கொண்;டு சென்றது முதல் அவர்களின் புதல்விகளின் உடல்நிலை குறிப்பிடத்தக்க அளவிற்கு மோசமடைந்துள்ளது. தடுப்பிலிருந்து ஒரு நாளைக்கு ...

Read More »

யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம். திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன. ஒரு சமூகமாக நாம் வரலாற்றைப் பதிதலிலும் ஆவணப்படுத்தலிலும் முழுமையாகத் தோற்றிருக்கிறோம். நாம், சிலவற்றை வெளிப்படையாகவும் சுயவிமர்சன நோக்கிலும் பேசியாக வேண்டும். இப்போது, இதுபற்றிப் பேசுவதற்கான காலமா என்று கேட்காதீர்கள். இவ்வாறு கேட்டுக்கேட்டே, நான்கு தசாப்தங்களைக் கடந்துவிட்டோம். யாழ்ப்பாண நூலக எரிப்புக்கு ஒரு சமூகப் ...

Read More »

வண் டே மாஸ்க்கும் சமூக விழிப்பும்!

இந்தியாவில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழர் கூறினார் கொரோன வைரஸ் எனப்படுவது எங்களுடைய முதுகில் படிந்திருக்கும் அழுக்கை போன்றது. அது எங்களோடேயே இருக்கிறது என்று. நடப்பு நிலவரங்களை வைத்து பார்த்தால் அது சரி என்றே தோன்றுகிறது. சோதிக்கப்படாதவரை எல்லாருமே சுகதேகிகள்தான். சோதித்தால்தான் தெரியும் யாரெல்லாம் குணக்குறியற்ற நோய்க்காவிகள் என்று. கிளிநொச்சியில் அண்மையில் ஒரு பதினைந்து வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த பின்தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்படித்தான் இப்போது இயல்பாக இறக்கும் பலருக்கும் இறந்த பின்னர்தான் அவர்களுக்கு தொற்று ...

Read More »

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள்.சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது.இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும்  தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய ச கல திருத்தங்களையும் ஏற்று அவசரமாக பாராளுமன்றத்தினூடாக ...

Read More »

அறிவுக்குத் தீயிடும் போர்!

இலங்கையின் பெரும்பான்மை ஜனநாயகத்தில் இரண்டாம் தரப் பிரஜைகளாக இருக்க மறுத்ததற்காக யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது தமிழ்ச் சமூகத்தின் மீதான தீ மூட்டும் போராகும். இருப்பினும், இந்த இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் பொறாமையின் ஓர் அம்சம் இருந்தது. 1981 ஜூன் முதல் நாள் இலங்கையின் கலாசார வரலாற்றின் இருண்ட நாட்களில் ஒன்றாகும். அந்த நாளில்தான், இலங்கை இராணுவம், கொழும்பில் உள்ள ஆட்சியாளர்களுக்கு தெளிவாகத் தெரிந்த மற்றும் ஒப்புதலுடன், யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு தீ வைத்தது. இது 1931 ஆம் ஆண்டில் மிகுந்த சிரமத்துடன் நிர்மாணிக்கப்பட்டதாகும். தமிழ்ச் ...

Read More »

தமிழ் நாட்டின் எல்லையை விளங்கிக்கொள்ளல்

தமிழ் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பத்துவருடங்களுக்கு பின்னர் மீளவும் திராவிட முன்னேற்ற கழகம், அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அனைவரது பார்வையும் தீடிரென்று தமிழ் நாட்டின் பக்கமாக திரும்பியிருக்கின்றது. கருணாநிதியை துரோகியென்று கூறுபவர்களை தவிர, அனைத்து அரசியல் தரப்பினருமே, பாரபட்சமில்லாமல், ஸ்டாலின் மீதான எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். இது ஒரு பக்கமென்றால் – இன்னொரு பக்கமும் இருக்கின்றது. அதாவது, சீமான் மூன்றாவது சக்தியாக வந்துவிட்டதான கொண்டாட்ட மனோநிலை. இப்போதும் விடுதலைப் புலிகளை தங்களின் அரசியல் முதலீடாகக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், சீமானை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ...

Read More »