கொட்டுமுரசு

நிறைவேற்று அதிகாரத்தினை அரசியல் ரீதியில் பலமாக்குவதற்கு முயற்சி! -சட்டத்தரணி குருபரன்

19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியல் ரீதியில் பலமாக்குவதற்கான முயற்சியாகவே ஜனாதிபதியின் செயற்பாட்டினை பார்க்க முடியும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்   வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன்  காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்தவொரு விடயமாகின்றது. அவ்வாறிருக்கையில், 19ஆவது திருத்தச்சட்டத்தினையும் உள்வாங்கிய அரசியலமைப்பில் இரண்டு தனித்தனியான இடங்களில் பிரதமரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும், பிரதமர் பதவியை இழப்பதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. நீக்கும், நியமிக்கும் ...

Read More »

இலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்?

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை தோன்றியதில்லை. இந்த நெருக்கடி நிலைக்கான விதை 2015 ஜனவரி 8இல் விதைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோரை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கிலேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், இலங்கையில் இரண்டு பிரதமர்களும், இரண்டு பிரதமர் அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. 2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றமும் வெளிநாட்டு சதியென்றுதான் வர்ணிக்கப்பட்டது. தற்போது மகிந்தவின் மீள்வருகையும் வெளிநாட்டு சதியென்றே கூறப்படுகிறது. சதிகளை நம்பி அரசியல் செய்தால் மீண்டும் ...

Read More »

சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்!

‘சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக்? யாருடைய பிழை?’ இவ்வாறு முகநூலில் கேட்டிருப்பவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான சிராஜ் மஷ்ஹூர். அவர் கேட்பது சரி. நாட்டின் மீயுயர் மன்றம் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் அடுத்த கட்டம் அதில் எத்தனை பேர் சந்தர்ப்பவாதிகள் என்பதில்தான் தங்கியிருக்கிறது. எத்தனை பேரை விலைக்கு வாங்கலாம் என்பதுதான் யார் வெல்லக்கூடும் என்பதை தீர்மானிக்கப் போகிறது. இப்படிப் பார்த்தால் ஆட்சி மாற்றம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. பேரம் முடிந்தால் தான் ...

Read More »

மோடிக்கு புதிய தலையிடியைக் கொடுக்கும் ராஜபக்ச மீள்வருகை!

சீனா  மீது பற்றுக்கொண்ட ஜனாதிபதி அப்துல்லா யாமீன் மாலைதீவில் பதவியில் இருந்து அகற்றப்பட்டதையடுத்து இந்தியா நிம்மதிப்பெருமூச்சு விட்டு நீண்ட நாட்கள் செல்லவில்லை, அதற்குள்ளாக இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்கள் கடும்போக்காளர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கின்றன. இது மோடி அரசாங்கத்துக்கு புதிய தலையிடியை கொடுக்கப்போகிறது.   பூகோளரீதியில் தமிழ்நாட்டுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும் இலங்கையில் பாரிய கேந்திரமுக்கியத்துவ நலன்களை இந்தியா கொண்டிருக்கிறது.அந்த தீவில் குறிப்பாக, விடுதலை புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பகுதிகளில் இந்தியா பெருமளவில் முதலீடுகளைச் செய்திருக்கிறது.இலங்கையின் வடபகுதியில் ...

Read More »

வலைவீச்சு – பி.மாணிக்கவாசகம்

ஒரு வாரமாகத் தொடர்கின்ற பரபரப்பான அரசியல் நெருக்கடிக்கு நவம்பர் 5 ஆம் திகதி திங்கட்கிழமை முடிவேற்படுமா, எத்தகைய முடிவேற்படும் என்பதை அறிய, நாட்டு மக்களும், ஐநா உள்ளிட்ட சர்வதேசமும், ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள பலதரப்பினரும் ஆவலாக இருக்கின்றார்கள். நாட்டின் அதி உயர் அரச அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியபோது, அரசியலில் பரம எதிரியாகக் கருதப்பட்ட ஒருவரை பிரதமராக்கி, பதவியில் இருந்தவரைப் பதவி நீக்கம் செய்ததுடன் நில்லாமல், நாடாளுமன்றத்தையும் நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிஸ்டத்திற்கு ஒத்தி வைத்ததையடுத்தே, இந்த அரசியல் ...

Read More »

திட்டமிட்ட திடீர் அரசியல் திருப்பம்!

இலங்கை அரசியலில் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஒரு முக்கியமான வரலாற்று தினமாகப் பதிவாகியிருக்கின்றது. வரலாற்று தினம் என்பதிலும் பார்க்க ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கிய ஒரு கரிநாளாகவும் அது கருதப்படலாம். அன்றைய தினம்தான், எவருமே எதிர்பார்த்திராத வகையில் திடீரென, அதிர்ச்சியளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். அந்த சம்பவத்துடன் சூட்டோடு சூடாக ரணில் விக்கிரமசிங்கவை, அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளார் என்ற ...

Read More »

`புலியின் எலும்புகளையும் காண்டாமிருகத்தின் கொம்புகளையும் விற்கலாம்’ – சீனா புதிய கொள்கை!

உலகம் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் வேளையிலே, அதிகம் வீழ்ச்சி காணுவது இயற்கைதான். அவ்வகையில் மிக அதிகமாகப் பாதிப்படைந்து வருவது விலங்குகள். அழிக்கப்படும் காடுகள் ஒருபக்கம் என்றால், நேரடியாகக் கொல்லப்படுவதும் வன விலங்குகளின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளது. வனவிலங்குகள் அழிவது என்பது அந்த இனத்திற்கான அழிவு மட்டுமல்ல, உயிரினங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கலந்து வாழும் இந்தப் பூமியில், ஒரு இனத்தின் அழிவு என்பது, நீண்டபெரும் உணவு சங்கிலியின், ஒரு இணைப்பு துண்டிக்கப்படுவது ஆகும். இது இயற்கை, உருவாக்கிய உலகம், அதைச் சார்ந்த மனிதன் ...

Read More »

அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!

நாட்டு மக்களின் இறைமை மீண்டும் ஒருதடவை கேலிப்பொருளாகியுள்ளது.    மக்கள்  ஆணையைப்  பெற்று, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அதே மக்களின் ஆணையைப்பெற்று, ஜனநாயக மரபுகளுக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டு, ஆட்சியமைத்த அரசாங்கமொன்றைப் பலவந்தமாகப் பதவி நீக்கியிருக்கின்றார். இது, அரசமைப்பு மீதான அச்சுறுத்தல் மாத்திரமல்ல, மக்களின் இறைமையைப் பாதுகாக்கின்ற, பொறிமுறைகள் மீதான தாக்குதலும் ஆகும். மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் பொறிமுறைகளில், நாடாளுமன்றமும் நீதித்துறையும் சட்டத்தின் ஆட்சியும் பிரதானமானவை. ஜனாதிபதிப் பதவியும் அதன் ஒரு வடிவமே. ஆனால், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் மீது, அரசமைப்புக்கு முரணான வகையில் தலையீடுகளைச் செய்வதன் ...

Read More »

தமிழ்மக்கள் கூட்டணியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்- பி.மாணிக்கவாசகம்

வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்த சூட்டோடு சூடாக அதன் முதலமைச்சர் புதிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துவிட்டார். அவர் தனது அரசியலைவிட்டு, ஒதுங்கி இருக்கமாட்டார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்த போதிலும், பொதுவாக புதிய அரசியல் கட்சியொன்றை அல்லது புதியதோர் அரசியல் முன்னணியைத் தொடங்கப் போவதாகவே அவருடைய அறிவித்தல் அமைந்திருக்கும் என்ற வெறுமனான எதிர்பார்ப்பே அரசியல் வட்டாரங்களில் மேலோங்கியிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பைப் புறந்தள்ளி, தான் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை ‘தமிழ் மக்கள் கூட்டணி என ...

Read More »

விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்!

2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். ;விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன? என்று. நான் சொன்னேன். அவர் தொடர்பாக நான்கு விதமான ஊகங்கள் உண்டு. முதலாவது அவர் சம்பந்தனின் ஆள். விட்டுக்கொடுப்பற்ற தமிழ்த்தேசிய சக்திகளை கூட்டமைப்பிற்குள் தக்க வைத்திருப்பதற்காக சம்பந்தரால் இறக்கப்பட்டவர் என்பது. இரண்டாவது அதே நோக்கத்திற்காக அமெரிக்காவால் இறக்கப்பட்டவர் என்பது. மூன்றாவது அதே நோக்கத்திற்காக இந்தியாவால் இறக்கப்பட்டவரென்பது. நாலாவது மேற்சொன்ன சூழ்ச்சிக் கோட்பாடுகள் எதுவும் சரியல்ல. மாறாக அவர் ஒரு ...

Read More »