ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது. பிரித்தானியா, சில வாரங்களுக்கு முன்னரே இதை உறுதி செய்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அஹமட் பிரபு, இதை மீண்டும் உறுதி செய்திருந்தார். அவர், ஜெனீவாவில் உரையாற்றுவதற்குச் சில மணி நேரம் முன்னதாக, வடக்கில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் இலங்கை ...
Read More »கொட்டுமுரசு
‘சிம்லா’ ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுவிக்கப்படுவாரா அபிநந்தன்?
‘சிம்லா’ ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய விமான அபிநந்தன் பாதுகாப்பாக மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்ற கேள்வி தற்போது உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? * சிம்லா ஒப்பந்தமானது வங்காளதேச விடுதலை போரினைத் தொடர்ந்து இந்தியா – பாக்கிஸ்தானிடையே கைச்சாத்திடப்பட்டது. * இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லாவில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் அதிபர் ஜூல்பிக்கார் அலிபூட்டோவுக்குமிடையே 1972 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி கையெழுத்தானது. * இதனூடாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த ...
Read More »வடக்கு ஆளுநரின் வழி, எவ்வழி?
வவுனியா நகரில் எழுந்தருளி, கருணை மழை பொழியும் கந்தசுவாமி கோவிலின் புதிய சித்திரத் தேருக்கான வெள்ளோட்டம், அண்மையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடை சூழ, அமைதியாக, பக்திமயமாக வெள்ளோட்டம் நடைபெற்றது. “எங்கட நிலமெல்லாம் எங்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன; எங்கட இடமெல்லாம் சிங்கள மயமாகின்றன; சொந்த நாட்டிலேயே பல்லாண்டு காலம், நடைப்பிணங்களாக வாழும் நாதியற்ற எங்களுடன், நாட்டாண்மை காட்டுகின்றார்களே; கந்தனே! இதை யாரிட்ட சொல்லி அழ; தமிழ்க் கடவுளே! கண் திறக்க மாட்டாயா; எம்மைக் காக்க உனையன்றி யாருமில்லை” இந்த வேண்டுதல், இங்கு வந்திருந்த பெரியவர் ஒருவரின் ...
Read More »மறப்போம் மன்னிப்போம் கோரிக்கையும் யதார்த்தமும்!
மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதாக அது அமைய வேண்டும். மனம் திருந்தாமல் மன்னிப்பு கோருவதை மனக்காயங்களுக்கு உள்ளாகியவர்கள் ஏற்பதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. வடபகுதிக்கு அரச முறையாகப் பயணம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நடந்தவைகளை மறப்போம். மன்னிப்போம். இணைந்து வாழ்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். உண்மையான மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுக்கப்பட்ட அழைப்பாக இதனைக் கருத முடியவில்லை. ஏனெனில் மறந்து, மன்னிக்க வேண்டிய விடயங்களில் அல்லது சம்பவங்களில் என்ன நடந்தது, யார் யாரெல்லாம் பங்கேற்றிருந்தார்கள் ...
Read More »மன்னிப்பதற்கான உரிமை!
1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஜெயவர்த்தனாவும், ரஜீவ்காந்தியும் பங்குபற்றினார்கள். அதில் ஓர் ஊடகவியலாளர் இந்தியா பலவந்தமாக வானத்திலிருந்து உணவுப்பொதிகள் போட்டதைப்பற்றி ஜெயவர்த்தனாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஜெயவர்த்தனா பின்வருமாறு பதிலளித்தார். ‘நான் அதை மன்னிப்பேன் ஆனால் அதை மறக்க மாட்டேன் என்று’ இது வழமைபோல ஜே.ஆரின் தந்திரமான ஒரு பதில். ஒன்றை மெய்யாக மன்னித்துவிட்டால் அதை மறந்துவிட வேண்டும். மன்னித்த பின்னும் மறக்கவில்லையென்றால் அங்கே பழிவாங்கும் உணர்ச்சி அல்லது ...
Read More »`ராஜ தந்திரன்!’ ஆசிய குயில்களின் அரசியல் தெரியுமா?!
பொதுவாகவே குயில்களுக்கு கூடுகட்டி வாழும் பழக்கம் கிடையாது. இவையும் அப்படியே. இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் சாதுர்யமான ஓர் அரசியலைக் கடைப்பிடிக்கும். உங்கள் வீடுகளைச் சுற்றி மரங்கள் இருக்கின்றனவா? இருந்தால் நீங்கள் அவர்களின் இசையை நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள். அந்த இசை உங்கள் காதுகளை ஊடுருவி மூளைக்குள் நுழைந்து அதிகாலையிலேயே அரை மயக்க நிலைக்குக் கொண்டு போவதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அந்தப் பரவசத்தை இதுவரை உணரத் தவறிவிட்டீர்களா? தொடர்ந்து படித்து அந்த இன்னிசைக்குச் சொந்தக்காரர்களான ஆசிய குயில் குறித்த அறிமுகத்தோடு இனி ரசிக்கத் தொடங்குங்கள். பல பறவைகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல ...
Read More »புற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல் பார்வை!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நோயுற்ற தன்மை, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிப் படுதல், வாழ்க்கைத்தரம் குறைந்து, இறப்புக்கான வாய்ப்பு அதிகரிக்க வழிவகுக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நோயுற்ற தன்மை, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிப் ...
Read More »தமிழில் நகைச்சுவை எழுத்துக்குத் தேவை இருக்கிறது!- பேயோன்
பேயோன்! தமிழ் எழுத்தாளர்களின் மறைத்துவைக்கப்பட்ட அல்லது புதைத்துவைக்கப்பட்ட மனசாட்சி என்று அவர் நம்புகிறார் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், தான் யாருடைய பேயோனும் (Ghost-writer) இல்லை; என்னுடைய பேயோன்தான் என்று சொல்லக் கூடியவர். ‘பேயோன் 1000’ என்ற இவரது நூல்தான் அநேகமாக ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பாக வெளிவந்த முதல் நூலாக இருக்கக் கூடும். இவரது எதிர்கவிதைகள்(!) ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற பெயரில் முழுத் தொகுப்பாக வந்திருக்கின்றன. பேயோன் கணிசமான மின்னூல்களும் வெளியிட்டிருக்கிறார். பேயோனின் வலைப்பூ முகவரி: www.writerpayon.com யாருடைய பேயோன் (ghost-writer) ...
Read More »தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை!
மாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ...
Read More »ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!
ஊடகவியலாளர் நடராஜா குகராஜா (குகன்) மீதான காவல்துறையினரின் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை, இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு நீதி வழங்கும் படி பொறுப்பிலிருக்கும் அனைத்து தரப்பினரையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேவையான ‘டான் டிவி’ நிறுவனத்தின் செய்தியாளர் திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா குகராஜா காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 19 ம் திகதி2.30 மணியளவில் கொக்குவில் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை செய்திக்காக படமெடுத்துக் கொண்டிருக்கையில், ...
Read More »