அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என்ற வட்டத்தில் இருந்து தமிழ்த்தரப்பு வெளியில் வரவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. அரசியல் தீர்வு காண்பது அவசியம்; மிக மிக அவசியம். அந்த வகையில் அரசியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசியல் தீர்வே முடிவானது என்ற வட்டத்தில் தமிழ்த் தலைமைகள் மூழ்கி இருந்தன. இந்த அரசியல் நம்பிக்கையை தமிழ்த் தரப்பு யுத்தத்திற்கு முன்னரும் கொண்டிருந்தது. பின்னரும் பற்றியிருந்தது. இறுக்கமாகப் பற்றியிருந்தது. இந்த நம்பிக்கை மீதான பற்றுதலே, இணக்க அரசியலில் இருந்து விலகி, ...
Read More »கொட்டுமுரசு
அம்பேத்கர் எனும் முன்னுதாரணர்!
இரண்டு பெரிய சமூகக் குழுக்கள் சமூகரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது. முதலாவது குழுவினர், தாழ்த்தப்பட்டவர்கள் – தலித்துகள் என்று அன்றாட வழக்கில் குறிப்பிடப்படுபவர்கள். இரண்டாவது குழுவினர், பழங்குடியினர் – ஆதிவாசிகள் என்று அறியப்பட்டவர்கள். இவ்விரு குழுக்களுமே அசாதாரணமான முறையில் பல்வேறுபட்ட குணாம்சங்களைக் கொண்டவை. மொழி, சாதி, குலம், மதம், வாழ்முறை ஆகியவற்றால் வித்தியாசமானவர்கள். ஆந்திர பிரதேசத்தில் வாழும் மடிகா, உத்தர பிரதேசத்தின் ஜாதவ் என்ற இரு பிரிவினருக்கும் இடையில் பொதுவான அம்சம் ஏதும் கிடையாது, அரசு வேலைக்கு ‘பட்டியல் ...
Read More »கடவுச்சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்!
புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது தமது பழைய கடவுச்சீட்டை புதுப்பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்ப்பெண்களிடமிருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து மேற்படி திணைக்களத்திடம் கேட்கப்பட்ட போதே அதன் ஊடகப்பேச்சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்தகவலை வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாம் குறித்த சர்வதேச நியமங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருத்தல் அவசியம். ICAO எனப்படும்சர்வதேச சிவில் ...
Read More »ஹைதராபாத் விவகாரம்- இந்தியா ஏன் கொலைகளை கொண்டாடுகின்றது?
பிபிசி தமிழில் ரஜீபன் இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்தவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்தமை இந்தியா முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் அந்த இடத்தில் கூடிய 2000ற்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரை பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள். பொலிஸார் வாழ்க என கோசமிட்ட அவர்கள் இனிப்புகளை வழங்கியதுடன் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலும், 27 வயது மருத்துவரின் உடல் மீட்கப்பட்ட பகுதியிலும் மலர்களை தூவினர். பெண் மருத்துவரின் பகுதியிலும் பெருமளவானவர்கள் திரண்டு இந்த கொலையை கொண்;டாடினர்,வெடிகொழுத்தினர் ...
Read More »ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமாக இவ் ஆண்டு செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாருக்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா 06.12.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகின்றது. 07.12.2019 சனிக்கிழமை நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் ...
Read More »19 ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவதற்கான செயற்பாடுகள்!
நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கவேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கூறியுள்ளார். இதேபோன்றே பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன ...
Read More »இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறப்பு!
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் இன்று காலை எட்டு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளமான 36 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. ...
Read More »இலங்கை தமிழர் விவகாரம் ; இந்திய ஆங்கில தேசிய பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்களில்..!
இலங்கையின் வடக்கு–கிழக்கு பகுதிகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கொண்டிருக்கும் மனப்பாங்கு இந்தியாவினால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்கின்ற அதேவேளை அதிகார பரவலாக்கத்திற்கு மேலாக பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அவரது விருப்பம் புதுடில்லிக்கும் சென்னைக்கும் கவலை தருவதாக இருக்கும். மேலும் தமிழர் பிரச்சினை இருதரப்பு உறவுகளை மீண்டும் பாதிக்கக்கூடிய “ஒரு வெடிகுண்டாக” தொடர்ந்திருக்கும் தமிழர் பிரச்சினையிலும் ஏனைய விவகாரங்களிலும் இரு நாடுகளும் பொதுவான நிலைப்பாட்டை கண்டறிய வேண்டியிருக்கும் என்றும் இந்தியாவின் முக்கியமான ஆங்கில தேசிய பத்திரிகைகள் அவற்றின் ஆசிரிய தலையங்கங்களில் குறிப்பிட்டுள்ளன. ...
Read More »மலையக அரசியலில் தொடரும் பழிவாங்கும் படலம்!
ஜனாதிபதித் தேர்தல்களுக்குப்பின்னர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு பாராளுமன்றத் தேர்தல் காலம் வரை , மலையக சமூகத்துக்குக் கிடைத்துள்ள அமைச்சுப் பதவியைக் கொண்டு இம்மக்களுக்கு ஏதாவது நல்ல விடயங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இங்கு நடப்பதோ வேறு. தனி வீடமைப்புத்திட்டத்தில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அது குறித்த விசாரணைகள் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஆறுமுகன் கூறுகிறார். அது மட்டுமன்றி, அது தொடர்பான கணக்காய்வு விபரங்களையும் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இ.தொ.கா இப்படி நடந்து கொள்வது இது முதல் தடவையல்ல. ...
Read More »மீண்டும் கைக்கு வருமா அம்பாந்தோட்டை?
கடந்த வியாழக்கிழமை, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை புதுடெல்லிக்கு மேற்கொள்வதற்கு முன்னர், தனது முதலாவது வெளிநாட்டு ஊடகச் செவ்வியையும், இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கே கொடுத்திருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ. இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான நிதின் ஏ கோகலே, Bharat Shakti.in மற்றும் SNI ஆகியவற்றின் தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார். அவருக்கே கோத்தாபய ராஜ பக் ஷ தனது முதலாவது தனிப்பட்ட செவ்வியை வழங்கியிருந்தார். இந்தச் செவ்வி வெளியாகிய பின்னர் தான், அவரது புதுடெல்லி பயணம் இடம்பெற்றது. எனவே, புதுடெல்லியை சங்கடப்படுத்தக் கூடிய, ...
Read More »