ஈழத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக நாவல் உலகில் புதிய பாதையை வகுத்த முன்னோடியான செ.கணேசலிங்கன் கடந்த சனிக்கிழமையன்று (04.12.2021) மறைந்தார். அவருக்கு வயது 93. இலங்கையின் ’தினகரன்’ நாளிதழில் 1950-ல் தனது முதல் சிறுகதையை எழுதிய அவர், தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் சமூக அவலங்களைத் தனது எழுத்துகளின் மூலம் பல்வேறு பரிமாணங்களில் தோலுரித்துக் காட்டியிருந்தார். யாழ்ப்பாணம் உரும்பிராய் கிராமத்தில் 1928 மார்ச்-9 அன்று பிறந்த செ.கணேசலிங்கன் அரசுப் பணியாற்றி 1981-ல் ஓய்வு பெற்றார். 1950-களில் தொடங்கி, மறையும் வரை தொடர்ந்து எழுத்துப் பணியில் ...
Read More »கொட்டுமுரசு
எங்களை சுடத் துவங்கினார்கள்…
நாகலாந்தில் ராணுவ வீரர்களின் தாக்குதலில் உயிர் பிழைத்த நபர்களை நேரில் சந்தித்து பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் நாகலாந்தில் இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் தங்கள் அனுபவத்தினை இந்தியன் எக்ஸ்பிரசிற்கு பகிர்ந்துகொண்டுள்ளனர். நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் அது… அவர்கள் எங்களை அங்கேயே தாக்கினார்கள் என்று 23 வயது ஷெய்வாங்க் கூறினார். நாகலாந்து மாநிலம் ஓட்டிங் கிராமத்தில் சனிக்கிழமை சுரங்கத் தொழிலாளிகள் 8 பேர் மீது ராணுவத்தினர் நடத்திய ...
Read More »குசினிக் குண்டு
காஸ் சிலிண்டர் வெடிப்பது என்பது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு புதியது அல்ல. இந்தியாவில் சீதனம் கேட்டு பெண்களைக் கொன்றுவிட்டு அப்பெண் சிலிண்டர் வெடித்து இறந்துவிட்டார் என்று கூறி பெண்ணின் கணவரும் அவருடைய உறவினர்களும் தப்ப முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் பல செய்திகளை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம்.ஒரு கொலையை சமையலறை விபத்தாக உருமறைப்பு செய்வது என்பது குடும்ப வன்முறைகளில் மிகக் குரூரமான ஒன்று. சீதனப்படுகொலை என்று வர்ணிக்கத்தக்க காஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நமது நாட்டில் அனேகமாக இல்லை. எனினும் தமிழ் வாசகர்கள் படித்த சிலிண்டர் வெடிப்பு ...
Read More »பாகிஸ்தானில் இலங்கைக்கு எதிராக நடந்த 2வது வன்முறை; இந்தியாவுக்கான பாடம்!
பாகிஸ்தானின் சியால்கோட் தொழிற்சாலையில் இலங்கை ஊழியர் ஒருவர் கடவுள் நிந்தனை செய்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானின், சிவில் சமூகம், அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினரிடமிருந்து கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், அங்கே இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறையா என்றால் இல்லை. இலங்கை, கொழும்பு அருகே உள்ள கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரும் இரண்டு குழந்தைகளின் தந்தையுமான பிரியந்த தியவதன குமார, வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். பின்னர், அவருடைய உடலை எரித்தனர். அவருடைய தொழிற்சாலையில் பணிபுரிந்த சில ...
Read More »ராமன் விளைவுக்குப் பின்னால் ஒரு கிருஷ்ணன்!
ராமன் விளைவு’க்காக சர்.சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது பலருக்கும் தெரியும். இந்தக் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றிய கே.எஸ்.கிருஷ்ணனைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள விழுப்பனூர் என்ற குக்கிராமத்தில் 1898, டிசம்பர் 4-ம் தேதியன்று பிறந்தவர் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன். இவர் தனது தொடக்கக் கல்வியை வத்திராயிருப்பில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தார். இரவு நேரங்களில் வானத்தில் மிளிரும் விண்மீன்களைக் காட்டி இவரது ஆசிரியர், கிருஷ்ணனுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊட்டினார். ஆரம்பக் கல்வியை வத்திராயிருப்பில் முடித்த பின்பு திருவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் உயர்நிலைப் பள்ளியில் ...
Read More »“மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம்”
ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை என பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகர் மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளம் , யாழ்.மாநகர சபையினால் புனரமைக்கப்பட்டு , குளத்தினை சூழவுள்ள பகுதிகள் அழகாக்கப்பட்டுநேற்றைய தினம் வியாழக்கிழமை (01.12.21) ” ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல்” என திறந்து வைக்கப்படவுள்ளது. அந்நிலையில் , அது தொடர்பில் பேராசியர் குறிப்பிடும் போதே, அவ்வாறு ...
Read More »அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு!
புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன. அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதினால் அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமானதாகவே பார்க்கப்படுகின்றன. இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ...
Read More »வெளியுறவுக்கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள் ?
ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இது ஒரு ஓட்டம். அதேசமயம் சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை.அதுமட்டுமல்ல அப்படி ஒரு ...
Read More »யாழில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தம்!
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட மாதகல் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெறவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்பினால் இன்று கைவிடப்பட்டது. மாதகல் கிழக்கு ஜே /150 கிராம அலுவலர் பிரிவில் மூன்று பரப்புக் காணியை சுவீகரிக்க வந்த நில அளவை திணைக்களத்தினரை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது “நமது இந்த காணிகளில் கடல் அரிப்பு ஏற்பட்ட போது இந்த காணியை பாதுகாக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எங்களுடைய வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் ...
Read More »புனிதர்கள் திருநாளில் ஒரே நாடு ஒரே சட்டம் சிதறுண்டு சிதைகிறது!
இலங்கை என்பது தமிழர் தேசம், சிங்களவர் தேசம் என இரண்டாகியுள்ளது என்பதை நாடாளுமன்றம் இந்த மாதம் நேரில் தரிசித்தது. ஒரே நாடு – ஒரே சட்டம் என்பது நடைமுறைக்கு உதவாது என்பதை மாவீரர் நினைவேந்தல் தடையுத்தரவு தீர்ப்புகள் ஊடாக நீதிமன்றங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது என்ன நாடோ? என்ன சட்டமோ? வன்னியின் அடர்ந்த காட்டுப்பகுதியில், இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை சூழ்ந்து நிற்கையில், 1989 நவம்பர் 27ம் நாளன்று மாவீரர் நாள் பிரகடனமானது. 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் உறைநிலை கண்டதாயினும், தமிழரின் நீண்டகால அபிலாசைகளுக்கான அரசியல் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal