கொட்டுமுரசு

வெஸ்­ட்மி­னிஸ்டர் முறை­மையே ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்தும்!

தேர்­த­லொன்­றுக்குச் செல்­வ­தாலோ அல்­லது அர­சி­ய­ல­மைப்பில் மீண்டும் திரு­த்தத்தினை கொண்­டு­வ­ரு­வ­தாலோ நாட்டில் உரு­வெ­டுத்­துள்ள அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யற்ற போக்­கினை மாற்­றி­ய­மைக்க முடி­யாது என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கே.வி.தவ­ராசா தெரி­வித்தார். அனைத்து பெரும்­பான்மை கட்­சி­க­ளி­னது அர­சியல் உறு­திப்­பாட்­டு­டனும்,சிறு­பான்மை கட்­சி­களின் பங்­கேற்­பு­டனும்  நாட்டின் தேவைக்­கேற்ப சரி­செய்­யப்­பட்­டதும் காலத்தால் பரீட்­சிக்­கப்­பட்­ட­து­மான  வெஸ்ட்­மி­னிஸ்டர் முறை­மைக்கு திரும்பிச் செல்­வதன் நெருக்­க­டி­க­ளுக்கு தீர்­வினைக் கண்டு அர­சியல் ரீதி­யான ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்த முடியும் என அவர் சுட்­டிக்­காட்­டினார். 18ஆவது திருத்­தத்தின் ஊடாக ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் அதி­க­ரிக்­கப்­பட்­டமை ஜன­நா­ய­க­ம­ய­மாக்­கலின் அடிப்­ப­டையில் எழுந்த மக்கள் கோரிக்­கையின் விளை­வான ஒரு செயற்­பாடு ...

Read More »

நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகு!

கடந்த ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகை கண்டறிய அவ்வழியே உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 12ஆம் திகதி அன்று  தேவ மாதா என்ற படகு மூலம் கேரளாவின் முன்னாபம் பகுதியிலிருந்து நியூஸிலாந்தை நோக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் பயணத்தை தொடங்கி யிருந்தனர். பயணத்தை தொடங்கி 5 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் அவர்களின் இருப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை  ...

Read More »

அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டம் ?

ஐ.எஸ் தாக்குதல்  சம்பவங்களுக்குப்பிறகு  இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறைகள் எழுந்துள்ளன. தற்போது முழு நாட்டிற்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற விடயம் பேசப்பட்டு வருகிறது. இது எந்தளவுக்கு சாத்தியப்படப் போகின்றது என்பது தெரியவில்லை. ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு முஸ்லிம்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்பு அரச நிறுவனங்களில் அணியக்கூடிய ஆடைகள் தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்று வந்தது. அதற்கு மனித உரிமை ஆணைக்குழு தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். வௌிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் ...

Read More »

நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை ?

1956 பொதுத்தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் ஆதிக்கம் செலுத்திவருவது  ஒரேயொரு பிரச்சினையே இனவாதமே அது. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த பிரசாரங்களின் பிரதான இலக்காக தமிழ் சமூகமே இருந்தது. இறுதியில் ஒரு முப்பது வருடகால போருக்கும் வழிவகுத்தது. அந்த போரினால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பு  உண்மையில் மதிப்பிடமுடியாததாகும். தமிழர் பிரச்சினை இப்போது அதன் தாக்கத்தை இழந்து வாக்காளர்களைக் கவருவதற்கு தென்னிலங்கையில் பயன்படுத்தமுடியாத ஒன்றாகிவிட்டது. என்றாலும்கூட, குறிப்பிட்ட சில ‘ அரசியல் ஹீரோக்கள் ‘ தமிழர் பிரச்சினைக்கு புத்துயிர் கொடுக்க ...

Read More »

பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் தேர்தலுக்காகவா?

உலகில் வேலைநிறுத்தம் செய்த முதலாவது நாட்டுத் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவாகத்தான் இருக்க வேண்டும். ஏனைய வேலைநிறுத்தங்களைப் போலவே, அவரது வேலைநிறுத்தத்தின் மூலமும் பொது மக்களே பாதிக்கப்பட்டனர். ஏனைய வேலை நிறுத்தங்களைப் போலவே, ஜனாதிபதியும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஆராய, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை, இரத்து செய்யவேண்டும்” என்பதே, அவரது கோரிக்கையாகும்.“எனது கோரிக்கையை, சபாநாயகர் நிறைவேற்றாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை” என அவர் கூறியிருந்தார். அவரது அந்த வேலை நிறுத்தம் காரணமாக, ...

Read More »

இலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்!

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் ...

Read More »

ரணிலின் அரசியல் எதிர்காலம்!

இலங்­கையின் அண்­மைக்­கால அர­சியல் வர­லாற்றில் கட்­சி­யொன்றின் தலை­வ­ராக மிகவும் நீண்­ட­காலம் தொடர்ச்­சி­யாக இருந்­து­ வ­ரு­பவர் என்றால் அது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ராக அவர் சுமார் கால் ­நூற்­றாண்­டாக பதவி வகித்­து­ வ­ரு­கிறார். அதே­வேளை, ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வர்­க­ளாக இருந்­த­வர்­களில் எவரும்  பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வைப்­போன்று  தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ரான உள்­கட்சி கிளர்ச்­சி­க­ளுக்கு அடிக்­கடி  முகங்­கொ­டுத்­த­தில்லை. ஆனால், அந்த கிளர்ச்­சி­களை முறி­ய­டித்து தலைவர் பத­வியை அவரால் காப்­பாற்­றக்­கூ­டி­ய­தாக இருந்­து­ வந்­தி­ருக்­கி­றது. இலங்­கையின் அர­சி­யல்­வா­தி­களில் கூடு­த­லான கால­மாக பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் அவரே ...

Read More »

ஒரே திசைக்கு தொடுக்கப்படும் அம்புகள்!

எமக்கு நேரவிருக்கும் இழப்புகளிலிருந்து எம்மை காத்துக்கொள்வதையே பாதுகாப்பு என்கிறோம். அந்த வகையில், உயிர்ச் சேதங்கள்,சொத்துச் சேதங்கள் உள்ளிட்ட பலவாறான சேதங்களை முன்பே அறிந்து, அதற்குத் தடைக்கல் போடுவதையே பாதுகாப்புச் செயன்முறையாகக் கருதமுடியும். இந்தப் பாதுகாப்புச் செயற்பாடுகளின் பரப்பு விரிவடைந்து செல்லும்போது, தேசிய பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, பௌதீக வளங்களின் பாதுகாப்பு என்று பல கோணங்களில் பார்க்கப்படுகிறது. இவற்றில், பிரதான கட்டமைப்பாக, தேசியப் பாதுகாப்பைக் கருதலாம். தேசிய பாதுகாப்பு என்ற விடயத்துக்குள், பொதுமக்களின் பாதுகாப்பு, அரச பாதுகாப்பு உட்பட முழு நாட்டினதும் பாதுகாப்பும் உள்ளடங்கும். தேசிய ...

Read More »

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக உறவினர்கள் காத்திருப்பு!

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 2 1ஆம் திகதி இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முஸ்லிம்கள் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 77 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பிலும், 25 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக ...

Read More »

மைத்திரியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் !

குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர் நாட்டின் நிலை­மைகள் தற்­போது சீர­டைந்து வரு­கின்­றன. எனவே அர­சாங்கம் தேசிய பாது­காப்பை மேலும் வலுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகளில் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. கடந்தகால தவ­று­களை மறந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ருடன் ஒன்­றிணைந்து செயற்­பட ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­வித்த அமைச்சர் ராஜித சேனா­ரட்ன, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் சஜித் பிரே­ம­தா­சவும் ஒருவர் எனவும் குறிப்­பிட்டார். அமைச்சர் ராஜித சேனா­ரட்ன  வழங்­கிய பிரத்தி­யேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். செவ்வி வரு­மாறு : கேள்வி : 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ...

Read More »