பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், புதிய கட்சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பதவியில் அறிமுகமாகியுள்ளது. இந்தப் புதிய முக பிரவேசமானது நாட்டைப் புதியதோர் அரசியல் நெறியில் வழிநடத்திச் செல்வதற்கு வழிவகுக்குமா என்பது பலருடைய ஆர்வமிக்க கேள்வியாக உள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய அரசியல் பின்னணியைக் கொண்டவரல்ல. பாராளுமன்ற அரசியலில் அனுபவமுடையவருமல்ல. யுத்தச் செயற்பாட்டுப் பின்னணியைக் கொண்டதோர் அதிகார பலமுள்ள சிவில் அதிகாரியாகவே அவர் பிரபலம் பெற்றிருந்தார். ஒரு சிப்பாயாக இராணுவத்தில் பிரவேசித்து ...
Read More »கொட்டுமுரசு
ஜெனரல் குணரட்ணவின் நியமனம்! -பாதுகாப்பு குறித்து கோத்தாபய உறுதியாகவுள்ளார்!
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை , இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மிகவும் உறுதியாகவுள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது. நவம்பர் 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த பெரும்பான்மை சிங்களவர்கள் இலங்கை ஜிகாத் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலின்கீழ் உள்ளது என்ற அச்சத்தின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சியடைவது குறித்தஅச்சத்தின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதும், ...
Read More »கோத்தாபயவின் வெற்றியையும் சஜித்தின் தோல்வியையும் புரிந்துகொள்தல்!
கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச செல்லுபடியான வாக்குகளில் 52.25 சதவீதத்தைப் பெற்று நிறைவான ஒரு வெற்றியை தனதாக்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, அவரின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். ஞாயிறன்று தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் ...
Read More »வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்
நான் இறந்தால் என்னைப் பற்றிப் பத்திரிகைகள் எழுதுமா என்பது கேள்வி. தமிழ்நாடு எழுத்தாளர்களுக்கு அளிக்கும் கெளரவம் அத்தகைய சந்தேகத்தை எழுப்புகிறது… பத்திரிகைகளாவது ஒருநாள் எழுதும்… எழுதாமலும் போகும். ஆனால், நண்பர்கள் என்று சில பிறவிகள் இருக்கிறார்களே, அவர்களைப் பற்றி நினைத்துவிட்டால் எனக்கு சாகக்கூட பயமாயிருக்கிறது.’ நையாண்டி பாரதி என்ற புனைபெயரில் ‘கிராம ஊழியன்’ இதழில் 1944-ல் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரை இப்படித்தான் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது என்று உணர்ந்திருந்தபோதிலும், ஒரு எழுத்தாளராகவே வாழ்ந்து மறைய வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டவர் ...
Read More »வடமாகாண பெண்களும் அவர்களது தேவைகளும்!
இலங்கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேரடியாக பல்வேறுபட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மற்றும் சமய சமூக பிரச்சினைகளை தோற்றுவித்தது. யுத்தத்தின் அதியுச்ச பாதிப்பை தன்னகத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்தின் பின்னர் பாரிய அளவு இல்லாவிட்டாலும் ஒரு அளவிற்கு யுத்தத்தின் வடுக்களை குறைப்பதற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் இடம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள ரீதியான பாதிப்பு இதுவரை சரி செய்யப்பட முடியாததாகவே காணப்படுகின்றது. மனிதர்களாகிய நாம் ஏதேனும் பிரச்சினைகளுக்கு அல்லது கசப்பான சம்பவங்களுக்கு ...
Read More »விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்!
எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும். 1983ஆம் ஆண்டு, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா ...
Read More »ஜனாதிபதித் தேர்தல் – 2019 ; நடைபெறக்கூடியது என்ன ?
ஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று நடைபெற்று ஓரிரு நாட்களில் புதிய ஜனாதிபதியும் தெரிவு செய்யப்பட்டுவிடுவார். யார் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற ஏக்கத்திலும் ஊகத்திலும் மக்கள் உள்ளனர். அதற்கு காரணம் 35 அபேட்சகர்கள் போட்டியிடுவதல்ல வேறு காரணங்களாகும். எனினும் பெரும்பாலான மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் டம்மி அபேட்சகர்களும் அரசியலையே பொழுதுபோக்காக கொண்ட ஜோக்கர்களும் போட்டியிடுவதால் அவர்களில் யார் வெற்றி பெறுவர் என்பதை தீர்மானிப்பதில் சங்கடப்படாமல் நிச்சயமாக சஜித், கோத்தபாய, அநுர குமார திசாநாயக்க ஆகிய இவர்களில் ஒருவரே ...
Read More »தேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம் !- இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம்!
வோசிங்டன் போஸ்ட் தமிழில் ரஜீபன் இலங்கையின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் செயற்பட்ட கொலைகும்பல்களிடமிருந்து தப்புவற்காக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு நாடு கடந்த நிலையில்வாழும் இலங்கைபத்திரிகையாளர்கள், தங்;கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வழிநடத்தியவர் இவ்வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதால் ,தாங்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பமுடியாது எனவும் தங்களிற்கு நீதி கிடைக்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். 2005 முதல் 2015 வரையான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடகஉறுப்பினர்களிற்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கம் தண்டிக்க தவறியுள்ளமை குறித்து ...
Read More »ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு கோத்தாபயவிற்கு உதவுதல்?
திசராணி குணசேகர தமிழில் ரஜீபன் என்;னிடம் இரண்டு குழுக்களே உள்ளன, பயங்கரவாதத்திற்கு எதிராக போராட விரும்புவர்களும் பயங்கரவாதிகளுமே அவர்கள். நீங்கள் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடுபவர்களா? -பிபிசி பேட்டியின் போது கோத்தாபய 2015 இல் பெரும்பான்மையான இலங்கையர்கள் ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்வதற்காக வாக்களித்தனர்.அந்த ஜனநாய சூழலை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக நாங்கள் வாக்களிக்கவேண்டுமா? அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதற்கு நாங்கள் விரும்பாமலே துணை போகப்போகின்றோமா? 2018 இல் இடம்பெற்ற சிறிசேன-மைத்திரி சதிமுயற்சியின் போது மகிந்த ராஜபக்ச சிறிசேனவிற்கு நீதிமன்ற தீர்ப்பினை புறக்கணித்து தேர்தல்களிற்கு ...
Read More »சஜித்பிரேமதாசவை உருவாக்கிய விடயங்கள் எனக்குள்ளும் எதிரொலிக்கின்றன!
அகிம்சா விக்கிரமதுங்க தமிழில் ரஜீபன் இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர். ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன். தோற்கடிக்க முடியாத, அற்புதமான, அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன். கண்டிக்கத்தக்க – கோழைத்தனமான பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன். தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கின்றேன். இதன் மூலம் ...
Read More »