செய்திமுரசு

மீத்தொட்டமுல்லையில் நடந்த அனர்த்தம் ஒரு இயற்கை அனர்த்தம் அல்ல

ஆட்சியாளர்களின் பொறுப்பபற்ற நடவடிக்கைகளும் துஸ்பிரயோகங்களும் எல்லை கடந்த நிலைக்குச் சென்றுள்ளன. இதற்கு விலையாக நாட்டு மக்கள் தமது உயிர்களை அநியாயமாக பறிகொடுக்க வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. மீத்தொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீத்தொட்டமுல்லையில் நடந்த அனர்த்தம் ஒரு இயற்கை அனர்த்தம் அல்ல. இது எமது ஆட்சி செய்த, ஆட்சி செய்கின்றவர்களின் கவனயீனங்களாலும், துஸ்பிரயோகங்களினாலும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அனர்த்தமாகும். பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்துவந்த மீத்தொட்டமுல்லை பகுதியில் ...

Read More »

4 வயது பெண் குழந்தையை சந்திக்க காரை நிறுத்திய பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பாதுகாப்பு வளையத்தை மீறி தன்னை சந்திக்க சாலையை கடந்து ஓடிவந்த குழந்தையை சந்திப்பதற்காக பிரதமர் மோடி தனது காரை நிறுத்தச் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, சூரத் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, டெல்லி செல்வதற்காக இன்று பிற்பகல் விமான நிலையம் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். பிரதமரின் கருப்புநிற காருக்கு பின்னாலும் முன்னாலும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுத்து ...

Read More »

மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது! – சம்பந்தன்

எமது மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இராணுவத்தளபதி, ஏனைய படைகளின் தளபதிகள் மற்றும் கூட்டமைப்பின் ...

Read More »

அவுஸ்ரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்புண்டா?

தொல்லியல் மற்றும் மானுடவியல் துறையினர் குறிக்கும் வரலாற்றுக் காலம் என்பது, பொதுவாக இறுதியான உறைபனிக் காலத்தின் (last glacial period) முடிவான சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ள காலம். இக்காலத்தில் இருந்து நமக்கு காலக்குறிப்புகளைக் கொண்டு கணக்கிட்டு, மனித வரலாற்றைக் கட்டமைக்க உதவும் காலக்குறிப்புத் தடயங்களை ஏதோ ஒருவகையில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டு வாழ்ந்தவர்களைப்  பற்றி நாம் அறிவதற்கு,  தங்கள் வாழ்வின் எச்சங்களாக அவர்கள் விட்டுச் சென்றவையாக அகழாய்வின் போது கிடைக்கும் சான்றுகளை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு ...

Read More »

கணினித்துறை முன்னோடி ராபர்ட் டைலர் 85 வயதில் மரணம்

கணினித் துறையில் நவீன கணினியையும், இண்டெர்நெட் எனப்படும் வலையமைப்பையும் கண்டறிவதில் முன்னோடியான ராபர்ட் டைலர் தனது 85 ஆம் வயதில் மரணமடைந்தார். டைலர் 1961 ஆம் ஆண்டில் நாசாவில் பணியாற்றிய போது நவீன கணினி மவுசை கண்டு பிடிப்பதில் ஈடுபட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் பெண்டகனில் (அமெரிக்க இராணுவத் தலைமையகம்) பணியாற்றும் போது ஒரு தனித்த கணினியின் மூலம் வலைப்பின்னலை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். இதன் மூலம் அமெரிக்கா முழுவதுமிலிருந்து பெண்டகனிடம் தொடர்புள்ள நிறுவனங்களை இணைக்கும்படியான ஏற்பாடு செய்யப்பட்டது. இதிலிருந்து முன்னோடி ...

Read More »

உரிமைகள் மறுக்கப்பட்டால் போராடுவோம் -பொ.ஜங்கரநேசன்!

தமிழர்களுக்கான உரிமைகள் மீண்டும் மறுக்கப்படுமாக இருந்தால் மீண்டும் இந்த மண் இரத்த களரியை எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கும் தள்ளப்படலாம் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். புங்குடுதீவில் நேற்றைய தினம் நடைபெற்ற அம்பலவாணர் கலையரங்க திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்சியாளர்களை நல்லாட்சி என்று நாங்களே கூறி மக்களிடம் தவ றான அபிப்பிராயத்தை நாங்களே உருவாக்கியுள்ளோம். எங்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். பிரச்சினைகள் இந்த மண்ணில் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யாரும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம். ...

Read More »

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி பெண்மணி 117-வது வயதில் காலமானார்

உலகின் வயதான பெண்மணியும், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி நபருமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்மா தனது 117-வது வயதில் காலமானார். உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ தனது 117-வது வயதில் காலமானார். தனது 117-வது பிறந்தநாளை கடந்த டிசம்பர் மாதம் கொண்டாடினார். 1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த எம்மா, 19-ம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்து வந்தார். கடந்த பிறந்த நாளின் போது தன்னைப்பற்றி எம்மா கூறுகையில்:- என்னுடைய ...

Read More »

நேரலையில் பகல் கனவு கண்ட செய்தி வாசிப்பாளர்

அவுஸ்திரேலியாவில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேரலையில் பகல் கனவு கண்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ABC 24 சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர் Natasha Exelby. இவர், நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென மெய்மறந்து தனது கையில் உள்ள பேனாவை உற்றுபார்த்தவாறு அமர்ந்திருந்துள்ளார். சிறிது நிமிடங்களுக்கு பிறகு நேரலையில் இருப்பதை உணர்ந்த அவர், சுதாரித்துக்கொண்டு செய்தியை வாசித்து முடித்துள்ளார். நேரலையின் போது பகல் கனவு கண்ட இவரது செயல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

Read More »

அவுஸ்ரேலியாவின் ராணி சிட்னி!

பசிபிக் கடலின் கரையில் அமைந்துள்ள அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரம் சிட்னி. 1788ல் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட நகரமான சிட்னி இன்று உலகம் வியக்கும் மாபெரும் நகரம். ஆங்கிலேயச் செயலாளர் சிட்னி பிரபு என்பவரின் பெயரை இந்நகருக்கு இட்டனர். அவுஸ்திரேலியாவின் பொருளாதார, வர்த்தக, தொழில், தகவல் தொடர்பு, மருத்துவ மய்யமாக சிட்னி இன்று விளங்குகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் மிதமான கோடையும், மிதமான குளிர்காலமும் இருப்பதால் எப்போதும் சென்று காணலாம். ஒபரா அவுஸ் தாமரை இதழ்களைப் போன்ற அமைப்புடைய கூரையுடன் சிட்னி துறைமுகம் ...

Read More »

முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்தியவர்

அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி, Turella பகுதியில் உள்ள வீட்டிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. முன்னதாக, 25 வயதான இளம் பெண் ஒருவர் தனது 29 வயது காதலனை விட்டு பிரிந்துள்ளார். இதனால், கோபமடைந்த காதலன், காதலியின் அழகான தோற்றத்த அழிக்க Turella பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து கத்தரிக்கோல் மூலம் முகம் உட்பட உடலில் 37 இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர ...

Read More »