செய்திமுரசு

மைத்திரி – அவுஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு!

அவுஸ்ரேலியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லை சந்தித்துள்ளார். கென்பராவில் உள்ள  நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புலின் அழைப்பின்பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதி கென்பரா நகரில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் கென்பரா நகரில் உள்ள சூரிய மின்சக்தி நிலையத்திற்கும் நேற்று(24)  விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Read More »

கென்பரா நகரில் அமைந்துள்ள கம்பா விகாரைக்கும் சென்ற மைத்திரி!

அவுஸ்திரேலியாவிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கென்பரா நகரில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் நேற்று (24) பங்குபற்றியதுடன் கென்பரா நகரில் அமைந்துள்ள கம்பா விகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது சமய கிரியைகளை நடாத்திய விகாராதிபதி அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கியதுடன் அங்கு வருகை தந்திருந்த இலங்கையர்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.  

Read More »

மைத்திரி கன்பரா தாவரவியல் பூங்காவில் மரம் நட்டார்!

அவுஸ்ரேலியாவிற்கான மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கன்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு நேற்று (24) விஜயம் செய்தார். கன்பரா முதலமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தி கன்பராவின் சட்ட மா அதிபர் கோல்டன் றம்சே மற்றும் பூங்காவின் பதில் கடமைபுரியும் நிறைவேற்று முகாமையாளர் ஸ்கொட் ஸட்லியும் ஜனாதிபதியை வரவேற்றனர். அவுஸ்ரேலியாவுக்கான தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில் மைத்திரி பூங்காவில் மகோகனி மரக்கன்று ஒன்றை நாட்டினார். இந்த நிகழ்வில் கன்பராவின் சட்ட மா அதிபர் ரம்சே தெரிவிக்கையில் சுற்றாடல்துறை அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயம் உண்மையிலேயே ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது மைத்திரி!

சிங்கப்பூரில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும்  போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ முகநூல்  பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன். இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலமுறை பயணம் செய்துள்ளேன். அவரும் அவரது மனைவி மைத்திரியும் இதே ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பலியான ஈழ புகலிடக் கோரிக்கையாளர்!

அவுஸ்ரேலியாவில், ஆஸ்துமா நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஈழத்தவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அருள்செல்வம் வேல்முருகு என்ற 35 வயதுடைய ஈழ புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளருக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளே மரணத்திற்கு காரணம் என மேற்கு அவுஸ்திரேலிய மரண விசாரணை அதிகாரி பெரி கிங் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவு குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு சிகிச்சைகளுக்காக வருகை தந்த சில மணித்தியாலங்களுக்குள்ளேயே ஈழ புகலிடக் கோரிக்யைாளர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஈழ அகதிகள்!

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தை ஈழம் உள்ளிட்ட அகதிகள் எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தாமலும், அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்காமல் இருப்பவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்காத நிலையில், 7500க்கும் மேற்பட்ட ஈழம் உள்ளிட்ட அகதிகள் அவுஸ்ரேலியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அனைவருக்கும் ஒக்டோபர் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குறித்த காலப்பகுதியில் தங்களை நியாயமான அகதிகள் என நிரூபிக்க ...

Read More »

அவுஸ்ரேலியாவில் மைத்திரிக்கு கன்பெராவில் வரவேற்பு!

அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்ரேலியா பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கென்பராவைச் சென்றடைந்தார். ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் மார்க் பிரேசர், கல்வி அமைச்சரும் செனட் சபை உறுப்பினருமான சிமோன் பேர்மிங்ஹம், ஆளுநர் நாயகத்தின் பிரதிச் செயலாளர் எலிசபெத் கெலி ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். ஜனாதிபதி சிறிசேனவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவும் இருதரப்பு கூட்டுறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான அவரது கருத்துக்களை அறிந்து கொள்ளவும் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி  மைத்திரியை ...

Read More »

அவுஸ்ரேலியா பறந்தார் மைத்ரிபால சிறிசேன!

அரச தலைவர் ஒருவரின் விஜயத்திற்காக அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பை நினைவுகூறும் வகையில் அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புலின் விசேட அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்றுமுன்னர் அவுஸ்ரேலியா பயணமானார். இதற்கு முன்னர் 1954 ஆம் ஆண்டு முன்னால் பிரதமரான ஜோன் கொத்தலாவல அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருந்தார். (அப்போது இலங்கையின் அரச தலைவராக இருந்தவர் பிரித்தானியாவின் இராணி என்பதால் ஜோன் கொத்தலாவலவுக்கு அரச விஜயத்திற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதுடன், அவ்விஜயம் ...

Read More »

சுமந்திரன் மக்களின் பிரச்சனை தொடர்பாக கதைப்பதில்லை!

அண்மையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்தபோது அவருடன் ஒன்றாக உலங்குவானூர்தியில் பறந்து இடங்களைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எதுவும் கதைப்பதில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மாறாக எம்.ஏ.சுமந்திரன் சிறிலங்காப் பிரதமருக்குத் தனது உறவினர்களையே அறிமுகம் செய்துவைத்தார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்தில் குடியேற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அம்மக்களைச் சந்தித்தபோது ஊடகவியலாளர்களால் ...

Read More »

பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Read More »