செய்திமுரசு

சிட்னி பல்கலைக்கழகம் உலகளவில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளது!

சிட்னி பல்கலைக்கழகம் உலகளவில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. உலகளவில் 500 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தலில் சிட்னி பல்கலைக்கழகம் 4 வது இடத்தைப் பெற்றுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தால் வேலைவாய்ப்பு பெறுவது இலகு என்பது தொடர்பில், QS Graduate Employability Rankings பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வியின்போது வேலை செய்வதற்கேற்ற தகுதிகளை வளர்ப்பது, பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறிய பின்னர் விரைவாக வேலை கிடைத்தல் மற்றும் வேலை வழங்குநர்களுக்கு பல்கலைக்கழகத்தின் மீது இருக்கும் மதிப்பு போன்றவற்றை பிரதானப் படுத்தப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பற்றாளர் பொன். சத்தியநாதன் என்ற பெருமனிதன் மறைவு!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்ப்பற்றாளர் வைத்திய கலாநிதி பொன். சத்தியநாதன் வெள்ளிக்கிழமை ( 15 – 09 – 2017 ) அன்று சாவடைந்தார். இவர் தமிழரின் வாழ்வுக்காக தமிழ்மொழி பாதுகாக்கப்படவேண்டும் அதன் மூலம் சாதி சமயம் கடந்த தமிழர் நெறியை அனைவரும் போற்றி பாதுகாக்கவேண்டும் என தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணித்து பணிசெய்து வந்த ஒரு பெருமனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார். தமிழரின் தொன்மைமிக்க வள்ளுவரின் குறள்களை நெறியாகக் கொண்டு வள்ளுவமே தமிழரின் மதமாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டு தான் செல்லும் வீடுகளுக்கு வள்ளுவரின் ...

Read More »

அவுஸ்ரேலிய அணியில் பல சிறப்பான வீரர்களும் உள்ளனர்!

இந்தியாவிற்கு எதிராக விளையாடும் அவுஸ்ரேலியா அணி ‘ஒன் மேன் ஆர்மி அல்ல’. பல சிறப்பான வீரர்களும் உள்ளனர் என ஆல்ரவுண்டர் ட்ராவிஸ் ஹெட் கூறியுள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இடையில் இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்த தொடர் குறித்துதான் எங்கும் பேச்சாக உள்ளது. விராட் கோலியை ஆஸி. வீரர்கள் எப்படி கட்டுப்படுத்துவார்கள்? அணியில் யார் யாருக்கு இடம்? ஸ்மித், வார்னர் அதிக ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ரகானே களமிறங்க வாய்ப்பு!

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர் தவான் விளையாடமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 17-ந்திகதி தொடங்குகிறது. இந்த தொடரை அதிக வித்தியாசத்தில் கைப்பற்றி இரு அணிகளும் முதல் இடத்தை பிடிக்க துடிக்கின்றன. அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் தொடக்க வீரரான தவான் இடம்பிடித்திருந்தார். தற்போது அவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். இதனால் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள ...

Read More »

அவுஸ்ரேலியா நீச்சல் வீரருக்கு 12 மாதம் தடை!

ஊக்க மருந்து விதிமுறை’ப்படி அவுஸ்ரேலிய வீரர் ஜெரார்டு பூர்ட் தனது இடத்தை குறிப்பிடாததால் 12 மாதம் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் முன்னணி நீச்சல் வீரர் ஜெரார்டு பூர்ட். இவர் லண்டனில் 2012-ல் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோவிலும் கலந்து கொண்டார். 9 ஆயிரம் மீட்டர் வரை முதல் இடத்தில் வந்த பூர்ட், அதன்பின்னர் பின்தங்கி இறுதியில் 20-வது இடத்தைப் பிடித்தார். நீச்சல் குளத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரின் நிறம் மாறியதே தனது தோல்விக்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வெல்லும்: கங்குலி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உள்ளூரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் இலங்கைக்கு எதிராக செய்தது போன்று 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்வதற்குரிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் அவுஸ்ரேலியா வலுவான அணி. நமது தேர்வாளர்கள் இளம் வீரர்களின் ...

Read More »

அவுஸ்ரேலிய ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் பதவியிலிருந்து மைக் டன்கிரீட் நீக்கம்

அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் மைக் டன்கிரீட், சக அதிகாரிகள் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், திடீரென அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா துறை தலைவராக கடந்த 1999-ம் ஆண்ட் முதல் மைக் டன்கிரீட் பதவி வகித்து வந்தார். அவர் மீது கடந்த ஆண்டு அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஃபியோனா டீ ஜாங் போனில் தன்னை மிரட்டியதாக புகார் அளித்தார். அந்த புகாரில் மைக் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலமாக ...

Read More »

கங்காரு இறைச்சியை அதிகம் உண்ணுங்கள்: – மக்களுக்கு அவுஸ்ரேலிய அரசு அறிவுறுத்தல்

கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதனை குறைக்கும் நடவடிக்கையாக கங்காரு இறைச்சி உண்ணும் படி அவுஸ்ரேலிய மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. அவுஸ்ரேலிய வின் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது இந்த கங்காருக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதனால் கங்காருக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. எனினும் ஆஸ்திரேலியாவில் மிருக வதை சட்டங்கள் கடுமையாக இருப்பதால் அந்நாட்டு ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்த லட்சுமண் கருத்துக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து லட்சுமண் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டியளித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி அவுஸ்ரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது. இந்த தொடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும்’ ...

Read More »

இந்தியா முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு?

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் இந்தியா தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும். ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா, அவுஸ்ரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் அவுஸ்ரேலியா 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ...

Read More »