கங்காரு இறைச்சியை அதிகம் உண்ணுங்கள்: – மக்களுக்கு அவுஸ்ரேலிய அரசு அறிவுறுத்தல்

கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதனை குறைக்கும் நடவடிக்கையாக கங்காரு இறைச்சி உண்ணும் படி அவுஸ்ரேலிய மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அவுஸ்ரேலிய வின் தேசிய விலங்கான கங்காரு அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது இந்த கங்காருக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கங்காருக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. எனினும் ஆஸ்திரேலியாவில் மிருக வதை சட்டங்கள் கடுமையாக இருப்பதால் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இப்போது வேறு வழி இல்லாததால் கங்காரு இறைச்சிகளை அதிகமாக விற்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மக்கள் கங்காரு இறைச்சிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய அரசு அறிவுறுத்தியதோடு இணையதளத்தில் கங்காரு இறைச்சி உடலுக்கு நல்லது என்றும் விளம்பரப்படுத்தி உள்ளது.