ஊக்க மருந்து விதிமுறை’ப்படி அவுஸ்ரேலிய வீரர் ஜெரார்டு பூர்ட் தனது இடத்தை குறிப்பிடாததால் 12 மாதம் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் முன்னணி நீச்சல் வீரர் ஜெரார்டு பூர்ட். இவர் லண்டனில் 2012-ல் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோவிலும் கலந்து கொண்டார். 9 ஆயிரம் மீட்டர் வரை முதல் இடத்தில் வந்த பூர்ட், அதன்பின்னர் பின்தங்கி இறுதியில் 20-வது இடத்தைப் பிடித்தார்.
நீச்சல் குளத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரின் நிறம் மாறியதே தனது தோல்விக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுப்பினார். ஆனால், அந்த குற்றச்சாட்டு தள்ளுபடி ஆனது.
தற்போது அவருக்கு அவுஸ்ரேலிய நீச்சல் பெடரேசன் தலைமைச் நிர்வாகி மார்க் ஆண்டர்சன் 12 மாதம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.