செய்திமுரசு

இணைய சேவை குறித்த ஆய்வில் அவுஸ்ரேலியாவுக்கு கடைசி இடம்!

Broadband- இணையப் பயன்பாடு தொடர்பில் மக்கள் திருப்தியடைகிறார்களா என உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அவுஸ்ரேலியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.  Ipsos Global Advisor என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சுமார் 28 நாடுகளைச் சேர்ந்த 21 ஆயிரம் பேரிடம், அவர்கள் பயன்படுத்தும் இணைய சேவை திருப்தியளிக்கிறதா எனக் கேட்கப்பட்டது. இதில் பங்கேற்ற அவுஸ்ரேலியர்களில் 61 வீதமானவர்கள் தமது இணையத்தொடர்பு திருப்தியளிப்பதாக இல்லை என தெரிவித்துள்ள நிலையில், இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 28 நாடுகளில் அவுஸ்ரேலியா கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமது இணைய சேவை தொடர்பில் மகிழ்ச்சியடையும் ...

Read More »

பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு!

NSW பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்படுவதாக NSW மாநில முதல்வர் Gladys Berejiklian நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார். அத்துடன் NSW அரசாங்கப் பள்ளிகளுக்கான தேவைகள் அடிப்படையிலான கல்வி நிதி 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக 8 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார். மாணவர் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளுக்கு $ 1.09 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் கணித கல்வியறிவுத் திட்டங்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சி ஆகியவற்றுக்கு அளிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள்!

விக்டோரியா மாநிலத்தின் பொது சுகாதார துறையில் கடுமையான அபாயங்களை விக்டோரியாவின் ஊழல் கண்காணிப்பு அமைப்பு இனங்கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான கொடுமைப்படுத்துதல் மற்றும் தொல்லை (bullying and harassment) ஆகியனவும் சுகாதார துறையில் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்டோரிய பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள், மருந்து திருட்டு, மோசடி மறைப்புக்கள் மற்றும் மோசடியான பண வசூல், அதாவது fraudulent billing ஆகியவை நிலவுவதாக மாநிலத்தின் ஊழல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. உடல்நல சேவைகளில் இருந்து கட்டுப்பாட்டு மருந்துகள், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ...

Read More »

புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க!

சிறிலங்கா  கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இரண்டுமாதங்கள் மாத்திரமே சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட ட்ராவிஸ் சின்னையா இன்றுடன் தனது கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 55 வயதுடன் ஓய்வு பெரும் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவின் பதவிக் காலத்தை  மைத்திரிபால சிறிசேன விரும்பினால் நீடித்திருக்க முடியும், எனினும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மிகவும் குறுகிய காலத்திற்கு நாட்டின் கடற் படைத் தளபதியாக பதவி வகித்தவர் ...

Read More »

முதலை பொறிக்குள் சென்று நீந்தி விளையாடிய விசித்திர மனிதர்கள்

அவுஸ்ரேலியாவில் முதலைக்கு வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் சென்று தைரியமாக 4 பேர் புகைப்படம் எடுத்த நிகழ்வு அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. அவை அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடி வருகின்றன. சமீபத்தில் 79 வயது மூதாட்டி ஒருவர் ஆற்றில் உள்ள முதலைக்கு இரையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த ஏரியில் முதலைக்காக பொறி வைக்கப்பட்டிருந்தது. அந்த பொறியில் 4 பேர் தைரியமாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். பொறிக்குள் சென்றும் அதனை சுற்றியும் ...

Read More »

ஜிம்பாப்வே அதிபர் முகாபே, உலக சுகாதார நிறுவன பதவியில் இருந்து நீக்கம்

பலத்த எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தொடர்ந்து ராபர்ட் முகாபேயை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குவதாக உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கேபிரியேசுஸ் அறிவித்துள்ளார். ஜிம்பாப்வே அதிபராக ராபர்ட் முகாபே (83) கடந்த 37 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். இவரை நல்லெண்ண தூதராக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நியமித்தது. அதற்கான அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் புதிய டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் காபிரியேசுஸ் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்து அரசு, கனடா பிரதமர், ஐ.நா. கண்காணிப்பு குழு, ...

Read More »

நெதர்லாந்தில் உலகின் முதல் 3.டி பிரிண்ட் பாலம்

நெதர்லாந்தில் 3.டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 3.டி பிரிண்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திர கைகள், மருத்துவ பயன்பாடுகளுக்கான உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நெதர்லாந்தில் 3.டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ...

Read More »

சின்னையாவின் கதி இன்று தெரியும்!

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவின் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா என்பது இன்று தீர்மானிக்கப்படும். ட்ராவிஸ் சின்னையா 55ஆவது வயது பூர்த்தி காரணமாக கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்தார். அக்காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொள்ள இருந்த நிலையில் கடற்படைத் தளபதிக்கு ஒருமாத கால பதவி நீடிப்பை வழங்கி, இது தொடர்பாக நாடு திரும்பிய பின் கலந்துரையாட அவகாசமளிப்பதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், நாளையுடன் ட்ராவிஸ் சின்னையாவின் பதவி நீடிப்புக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் ...

Read More »

டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம் ரூ.8 கோடிக்கு ஏலம்

கடலில் மூழ்கி இறந்த டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதத்தை எட்டு கோடி ரூபாய்க்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. வழியில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி உடைந்து கடலில் மூழ்கியது. இக்கோர விபத்து கடந்த 1912-ம் ஆண்டு நடந்தது. அதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இறந்தவர்களில் அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர். இவர் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை ...

Read More »

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவ சிப்பாய் பலி

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணு சிப்பாய் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ சிப்பாய்  கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சமயம் விபத்தில் சிக்கியுள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளாகிய இராணுவ சிப்பாயின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவப் பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »