கடலில் மூழ்கி இறந்த டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதத்தை எட்டு கோடி ரூபாய்க்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. வழியில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி உடைந்து கடலில் மூழ்கியது.
இக்கோர விபத்து கடந்த 1912-ம் ஆண்டு நடந்தது. அதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இறந்தவர்களில் அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர்.
இவர் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை அந்த விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் எடுத்து வைத்திருந்தார். அக்கடிதம் பலரிடம் கைமாறிய நிலையில் இங்கிலாந்தின் வில்ட்சயர் நகரில் ஏலத்துக்கு வந்துள்ளது.
இக்கடிதத்தை 80 ஆயிரம் பவுண்டுக்கு அதாவது சுமார் ரூ.8 கோடிக்கு ஏலம் விட ஏல நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். இக்கடிதத்தில் கப்பலில் பயணம் செய்த பல்வேறு பயணிகள் குறித்த ஹோல்வர்சன் எழுதியுள்ளார்.