செய்திமுரசு

கறுப்பு ஜூலையும் இன்றைய நிலைமையும்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து, ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அனைத்துப்பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் இணைந்து, கடந்த எட்டாம் திகதி பாராளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களை, பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களைப் பிணையில் விடுதலை செய்ததன் பின்னர், பொலிஸார் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பலாத்காரமாக அழைத்துச் சென்றனர். இந்தப் பின்னணியில், அடக்குமுறை, விலைவாசி உயர்வு போன்ற நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர், கடந்த ஒன்பதாம் திகதி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 80% முஸ்லீம்கள் பாகுபாட்டினை அனுபவிக்கிறார்கள்!

முஸ்லிம்கள் நேற்று (21) ஈகைத் திருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் நாட்டிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருவித பாகுபாட்டினை அனுபவித்திருப்பதை ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் கடந்தவாரம் வெளிப்படுத்தியுள்ளது.

Read More »

கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

ஈழத்தமிழரின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாகவும் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும் அமைந்துள்ள கறுப்பு ஜூலை படுகொலையை சம்பூர் பொலிஸ் பிரிவில் நினைவுகூர தடை உத்தரவு வழங்கி நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது. சம்பூர் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்த பின், ஒரு குழுவினருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு குழுவினர் தயாராகி வருகின்றனர் என்று பொலிசார் மன்றுக்கு தெரிவித்தனர். பொலிசாரின் விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் மூதூர் நீதவான் பாஸ்மிலா பானு, வெருகல் பிரதேச ...

Read More »

சிறுமி இஷாலினியின் குடும்பத்தாரிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு காவல் துறை குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த வேளையில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த இஷாலினி குறித்து சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர். இந்த சிறப்பு காவல் துறை குழு நேற்று காலை 7.30 மணியளவில் டயமகவில் அமைந்துள்ள சிறுமி இஷாலினியின் இல்லத்திற்கு சென்று வாக்கு மூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தது. இதன்போது இஷாலினியின் தாய், தந்தை, சகோதரர் மற்றும் கொழும்பு, பெளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ரிஷாத் பதியூதீனின் இல்லத்திற்கு சிறிமியமை பணியமர்த்த ...

Read More »

உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது!

குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார ...

Read More »

தமிழ் மக்களின் ’அரசியல் அணி’

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.சிவராம் (தராக்கி) `காலத்தின் தேவை அரசியல் வேலை` என்று குறிப்பிடுவார். காலத்தே பயிர் செய்தல் எல்லாவிதமான விடயங்களிலும் முக்கியம் பெறுகிறது. அதே போன்றுதான் இப்போதைய பூகோளவியல் அரசியல் மாற்றத்திலும் அரசியல் வேலையைச் சரியான முறையில் செய்தாகவேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும் அவர்களது அரசியல் தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது வாய்ப்பைப் பயன்படுத்தியாகவேண்டுமென்ற நிலை மீண்டும் ஒருமுறை உருவாகி இருக்கிறது. ‘விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள்’ என்ற ஒருமிப்புடன் எழுந்த அரசியல் பிரயோகம் ‘முக்கியமானதோர் அரசியல் அமைப்பு’ எனும் பாவனையுடன் ...

Read More »

தமிழ் பெண்ணை ‘அடிமை’யாக வைத்திருந்த வழக்கு: மெல்பன் தம்பதியருக்கு சிறைத்தண்டனை!

தமிழ்ப்பெண் ஒருவரை வீட்டுவேலையாள் என்ற பெயரில் எட்டு வருடங்கள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் குறித்த தம்பதியர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தநிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி John Champion இவர்களுக்கான தீர்ப்பினை அறிவித்தார். இதன்படி மனைவிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கணவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மனைவி ...

Read More »

பிரான்சில் 59 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.11 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் ...

Read More »

’ரிஷாட் வீட்டிலிருந்த இளைஞர் தும்புத்தடியால் தாக்கினார்’

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாக உயிரிழந்த சிறுமியின் தாயாரான ஆர்.ரஞ்சினி தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார். தான் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காகவே சிறுமி, ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு பணிப் பெண்ணாக சென்றார் என்றும் அவரது தாயார் ரஞ்சினி குறிப்பிட்டார். ரிஷாட் எம்.பியின் வீட்டிலுள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி ...

Read More »

பயணக்கட்டுப்பாடு விவகாரம் ; இராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் ஜூன் 10 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார். பின்னர், ஜூலை 14 முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி அத்தியாவசிய கடமைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ் மற்றும் ரயில்கள் பயணிப்பதற்கு அனுமதி ...

Read More »