பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.11 லட்சத்தைக் கடந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59 லட்சத்தை நெருங்குகிறது.
அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.11 லட்சத்தைக் கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal