கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு காவல் துறை குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த வேளையில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த இஷாலினி குறித்து சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர்.
இந்த சிறப்பு காவல் துறை குழு நேற்று காலை 7.30 மணியளவில் டயமகவில் அமைந்துள்ள சிறுமி இஷாலினியின் இல்லத்திற்கு சென்று வாக்கு மூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தது.
இதன்போது இஷாலினியின் தாய், தந்தை, சகோதரர் மற்றும் கொழும்பு, பெளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ரிஷாத் பதியூதீனின் இல்லத்திற்கு சிறிமியமை பணியமர்த்த நடவடிக்கைகளை முன்னெடத்த தரகர் ஆகியோரிடம் வாக்கு மூலங்களை பதிவுசெய்திருந்தனர்.
சிறப்பு காவல் துறை குழுவுக்கு மேலதிகமாக, நுவரெலியா காவல் துறை பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் மற்றும் டயகம காவல் துறைனரும் இஷாலினியின் மரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal