செய்திமுரசு

தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு பணம் வழங்கலாமா?

அவுஸ் ரேலியாவில் மக்கள் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க, தடுப்பூசி போடுபவர்களுக்குப் பணம் வழங்கலாம் என்ற யோசனையை labor கட்சி முன்வைத்துள்ளது. தடுப்பூசி போடுபவர்களுக்கு 300 டொலர்கள் வழங்கலாம் என்ற அந்த யோசனை மக்களை அவமதிப்பு செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விவரித்துள்ளார் ஆனால், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த அரசு அமைத்துள்ள செயற் குழுவின் தலைவர், இராணுவ அதிகாரி, இந்த யோசனையை ஆதரிக்கிறார்.

Read More »

கொழும்பில் உள்ள மதிப்புமிக்க பண்டைய கட்டிடங்களுக்கு என்ன நடக்கும்?

இது என்ன செலாண்டியா? கொழும்பில் உள்ள மதிப்புமிக்க அரசாங்க நிலத்தை சீனா உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் இந்த நாள்களில் அதிக விவாதத்திற்கு உட்பட்டவை. கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் உள்ள இந்த மதிப்புமிக்க நிலங்கள் சீனாவுக்கு விற்கப்படுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த நிலங்களில் சில மற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஐந்து ஹெக்டேயர் நிலத்தை தெற்கு சர்வதேச கொள்கலன் முனையமாக ஒரு நிறுவனத்திற்கு மாற்றவும், அதன் 85 ...

Read More »

யாழில் வாகனப் பேரணி

பொலிஸார் , சுகாதாரப் பிரிவினரின் தடைகளைத் தாண்டி, இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் இன்று (09), யாழ். நகரில் வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. 24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக, யாழ். நகரில், இன்று வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, யாழ். நகர வீதி வழியாக யாழ். மாவட்டச் ...

Read More »

மணக்கும் மலர் முகக்கவசம்

நடைமுறைக்கு ஏற்றவாறு சிந்தித்தால், பலருக்கும் எவ்விதமான கஷ்டங்களும் வராது. இல்லையேல் ஓரளவுக்கு கடன் இல்லாது வாழமுடியும். அவ்வாறுதான் திருமணத்துக்கு மாலைக்கட்டும் கலைஞர் மோகன் (வயது 40) சிந்தித்துள்ளார். மதுரை சுவாமி சன்னதி மலர் தயாரிப்பு கலைஞரான இவர், திருமணங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மணமக்களுக்கு மணக்கும் மலர்களில் முகக்கவசம் செய்து அசத்தியுள்ளார் “கொரோனா தாக்காமல் இருக்க பலர் பல்வேறு வகையில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் என் தொழில் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த மலர்களில் முககவசம் தயாரித்துள்ளேன். ஒரு முறை பயன்படுத்தும் ...

Read More »

‘பாடசாலைகளை திறப்பதில் சிக்கல்: செப்டெம்பர் சாத்தியப்படாது

ஆசிரியர்கள் அதிபர்களுக்கு தடுப்பூசியை ஏற்றியதன் பின்னர், சகல பாடசாலைகளும் செப்டெம்பர் முதல்வாரத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார். எனினும்,  முன்னர் திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளைத்  திறப்பதற்கான சாத்தியம் இல்லை” என்று இன்று (09) அறிவித்துள்ளார்.

Read More »

ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவோரில் ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடம்!

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்பவர்களில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, கடந்த 2020 ஜுலை முதல் 2021 ஜுன் வரையான காலப்பகுதியில், புலம்பெயர்பின்னணி கொண்ட 138,646 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இவர்களில் 24,076 பேர் இந்தியர்கள் ஆவர். இரண்டாமிடத்தில் 17,316 என்ற எண்ணிக்கையுடன் பிரிட்டிஷ் பின்னணிகொண்டோர் உள்ளனர். இதைத் தவிர பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 8,659 பேர், சீனாவைச் சேர்ந்த 7,302 பேர், நியூசிலாந்தைச் சேர்ந்த 5,612 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 5,415 பேரும், ஆஸ்திரேலிய குடியுரிமை ...

Read More »

மிரள வைக்கும் நாசா வெளியிட்ட புகைப்படம்

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம் பூமி பந்தை சுற்றி நிகழும் அற்புதங்களை புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறது. செவ்வாய் கிரகம், நெபுலா மேக கூட்டங்கள் என ரம்மியமான புகைப்படங்களால் அதன் சமூக வலைதள பக்கங்களை நாசா அலங்கரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிலவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டு உள்ளது. 53 புகைப்படங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் நிலவின் புகைப்படத்திற்கு “false-colour mosaic” என நாசா பெயரிட்டுள்ளது. ...

Read More »

பருப்பு மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு

தேசிய வர்த்தக சந்தையில் மைசூர் பருப்பு மற்றும் சீனியின் மொத்த விற்பனை விலைகள் ஒரு வாரத்தில் 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ கிராம் மைசூர் பருப்பு 155 ரூபாயாக இருந்ததுடன் நேற்றைய அதன் விலை 165 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் பருப்பின் மொத்த விற்பனை விலை 170 வரை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ பருப்பை 220 ரூபாவுக்காவது விற்பனை செய்ய வேண்டும் என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ ...

Read More »

யாழில் பிறந்து ஒரு நாளேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து ஒரு நாளேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த குழந்தை நேற்று முன்தினம் பிறந்துள்ள நிலையில் அதற்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More »

டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது. 32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் நேற்றுடன் முடிந்து விட்டன. கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் ...

Read More »