செய்திமுரசு

ஆட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச  பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசில் தமிழ்,முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் கடந்த புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் நடந்தேறிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமனம் மற்றும் அதன் பின்னரான அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் மூலம் நிதர்சனமாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின் 25 பேரைக் கொண்ட அமைச்சரவையில் ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் 39 பேரைக்கொண்ட இராஜாங்க அமைச்சர்களில் இரு தமிழர்களுக்கும் ...

Read More »

முன்னணி முள்ளிவாய்க்காலில் உறுதிமொழி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சனிக்கிழமை காலை முள்ளிவாய்க்காலில் தமது பாராளுமன்ற பிரவேசத்திற்கான உறுதிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான அணியினரே இவ்வாறுஉறுதிமொழி செய்துள்ளனர்.

Read More »

நியூசிலாந்தில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு

நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில், பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. கொரோனா பரவத் தொடங்கிய கடந்த மார்ச் இறுதியில் தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பயனாக, கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டோம் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தரப்பில் கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியானது. அதுவரை 1,122 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 19 பேர் உயிரிழந்து இருந்தனர். எனினும், கடந்த ...

Read More »

இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் சுதந்திர தின வாழ்த்து

இந்திய சுதந்திர தினத்தையொட்டி, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டு உறவுகள், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாக கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த நட்புறவு ஆழமானது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, நமது கலாசாரம் வேறுபட்டிருந்தாலும், நாம் ஒரே விஷயங்களில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறினேன். இந்த உறவை பிரதமர் மோடியும், நானும் மேலும் ஒருபடி உயர்த்தி உள்ளோம்.  இவ்வாறு அவர் ...

Read More »

சஜித் எடுத்த முடிவு விரிசலை உருவாக்கும்!

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக் குத் தேசிய பட்டியில் கிடைத்த அமைச்சர் பதவிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்த உறுப்பினர் பதவியும் கிடைக்க வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இம்முறை பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட வருமான நசீர் அஹமட் கண்டனம் தெரிவித்துள்ளார் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தேசிய பட்டியலில் அமைச்சர் பதவி தருவதாக சஜித் ஒரு அறிக்கையில் கூறினார் என நசீர் அஹமட் தெரிவித் துள்ளார். தங்களின் கட்சி வெற்றி பெறுவதற்கான ...

Read More »

தடையை மீறி செஞ்சோலை 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு படையினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தலையும் மீறி நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.காலை 6.15 மணிக்கு விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 6.45 மணிக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். பின்னர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னால் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்களால் அதே இடத்தில் ...

Read More »

மாவை – சுமந்திரன் இடையே இணங்க்கம் ஏற்படுத்த முயற்சி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது. இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலத்தில் உருவாகியிருந்த முரண்பாடுகள் தொடர்பில் இருவரும் விரிவாக முறையில் ...

Read More »

யாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் மீட்பு ! இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதி

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியவேளை மனித எச்சங்கள் வெளிவந்துள்ளன. 2006 ம் ஆண்டுக்கு முன்னர் குறிப்பிட்ட பகுதியில் படையினர் நிலைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மனித எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகளும காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் அரசாங்கம் ஈடுபடாது என்கிறார் ஊடக அமைச்சர்

அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் ஈடுபடாது கட்டுப்பாடுகளை விதிக்காது என வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவரும் அல்லது எந்த அமைப்பும் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது குறித்து கருத்து தெரிpவிபபதற்கு கூட நான் தயாராகயில்லை என ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரச மற்றும் தனியார் ஊடகங்கள் போட்டிதன்மை வாய்ந்த ஆனால் ஆனால் ஆரோக்கியமான, ஒழுக்காற்று விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஊடக கலாச்சாரத்தை பின்பற்றும் ...

Read More »

வன்னியில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ள காவல்துறையினர் மீறி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினால் கைதுசெய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர். துக்குடியிருப்பு காவல்துறையினரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். செஞ்சோலை படுகொலையின் 14 வருட நினைவுநாள் நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையிலேயே காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 2006 ஆவணிமாதம் 14ம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை நினைவுகூறும் வகையில் வருடாவரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையிலேயே ஏற்பாட்டாளர்களுக்கு ...

Read More »