ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் அரசாங்கம் ஈடுபடாது என்கிறார் ஊடக அமைச்சர்

அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் ஈடுபடாது கட்டுப்பாடுகளை விதிக்காது என வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவரும் அல்லது எந்த அமைப்பும் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது குறித்து கருத்து தெரிpவிபபதற்கு கூட நான் தயாராகயில்லை என ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் ஊடகங்கள் போட்டிதன்மை வாய்ந்த ஆனால் ஆனால் ஆரோக்கியமான, ஒழுக்காற்று விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஊடக கலாச்சாரத்தை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஒரு இலக்கையே ஒருநோக்த்தையே ஒரு கொள்கையையே கொண்டிருக்கவேண்டும்,அது ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நாட்டுக்கும் மக்களுக்கும் வளத்தை ஏற்படுத்துவதாகவும் காணப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.