இந்திய சுதந்திர தினத்தையொட்டி, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டு உறவுகள், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாக கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த நட்புறவு ஆழமானது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, நமது கலாசாரம் வேறுபட்டிருந்தாலும், நாம் ஒரே விஷயங்களில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறினேன். இந்த உறவை பிரதமர் மோடியும், நானும் மேலும் ஒருபடி உயர்த்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal