செய்திமுரசு

ஹரின் பெர்னான்டோவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்தினை வணக்கத்திற்குரிய கார்தினல் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார். குறித்த கருத்து தொடர்பில் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர்களின் அமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. ஹரீன் பெர்னாண்டோவால் பேராயர் மீது உண்மைக்கு புறம்பான, அநீதியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேராயர், ஆயர்கள் அல்லது எந்தவொரு காத்தோலிக்க பாதிரியார்களோ ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னரே அறிந்திருக்கவில்லை என பேராயர் ...

Read More »

தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும்

தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும் எனவும் திலீபன் தினைவு நிகழ்விற்கு வழிவிடத்தவறினால் ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற திலீபன் நினைவு தினம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில்; ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமர் தமிழர்களுக்கு அநீதி இழைக்க மாட்டோம் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். உண்மையில் இவர்களின் இக்கூற்றுகள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி !

கொரோனா பெருந்தொற்று சூழலினால், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பயண முடக்கம், விசா பரிசீலணையில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது. தற்போதைய கணக்குப்படி, கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த ஆஸ்திரேலியாவின் 2019-20 நிதியாண்டில் 140,366 வெளிநாட்டினருக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, அரசு திட்டமிட்ட 160,000 என்னும் எண்ணிக்கையை விட குறைவானது. கடந்த பத்தாண்டின் சராசரியே 175,000 எண்ணிக்கையாக உள்ள நிலையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது. சர்வதேச பயணத்திற்கு ...

Read More »

அரசைக் குழப்பும் ”20”

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் கோத்தபாய-மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசு ,தமது முதல் இலக்கான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மிக இலகுவாக நிறைவேற்றிவிடலாமென்ற நினைப்பில் அவசர,அவசரமாக அதனை தம் விருப்பப்படி தயாரித்து வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு இப்போது அந்த 20 ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களுக்கு வரும் எதிர்ப்புக்களையும் தவறுகளையும் பார்த்து ”ஆப்பிழுத்தகுரங்கின்” நிலையில் தடுமாறுகின்றது. இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்யும் அரசுகள் தமது அரசை பலப்படுத்தும் விதத்திலும் தமது பதவிகளை தக்கவைக்கும் ,நீடிக்கும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை ...

Read More »

14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தமிழ்க் கட்சிகளின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று பகல் இதற்கான கடிதத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் 14 முக்கியஸ்த்தர்கள் கையொப்பமிட்டனர். வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று ஒன்றுகூடிய தமிழ் தேசியம் சார் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கையெழுத்திட்டுள்ளார்கள். இந்தக் கடிதத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி, தமிழ் தேசியக் கட்சி, ...

Read More »

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 42 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது; 8 பேர் மாண்டனர். சென்ற மாதத் தொடக்கத்தில் கிருமித்தொற்று உறுதியாவோரின் அன்றாட எண்ணிக்கை 700க்கும் அதிகமாகப் பதிவானது. அண்மை நாள்களில் அது ஈரிலக்கத்துக்குக் குறைந்துள்ளது. அதனையடுத்து மாநில அதிகாரிகள் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர்.  முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews)கூறியுள்ளார். இருப்பினும், மாநிலத் தலைநகர் மெல்பர்னில் இம்மாதம் 28ஆம் திகதி வரை கடுமையான முடக்க நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read More »

முகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா

தென்கொரியாவில் செய்யப்பட்ட முகக்கவசங்களை வடகொரியா திருப்பி அனுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “வடகொரியாவில் முகக்கவசத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சீனாவிலிருந்து வந்த முகக்கவசங்களை வடகொரியா திரும்ப அனுப்பியுள்ளது. அந்த முகக்கவசங்கள் அனைத்தும் தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டதால் அவை திரும்ப அனுப்பப்பட்டதாக வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக, வடகொரியாவின் எல்லைப் பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு ...

Read More »

நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லையாம்

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மை நீதி இழப்பீடுமற்றும் மீளாநிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போது இலங்கை பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர். கடந்த நான்கரை வருடங்களாக உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறியுள்ள இலங்கைக்கு வெளியே இருந்துமுன்வைக்கப்பட்ட நல்லிணக்க கட்டமைப்பினை தொடர்வதை கைவிட்டுவிட்டு இலங்கையின் நலனை கருத்தில் கொண்டு பயனளிக்க கூடிய நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அரசாங்கம்தெரிவித்துள்ளது. மக்கள் அவ்வாறான கட்டமைப்பிற்கான ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. விசேட அறிக்கையாளர் இலங்கைக்கு ...

Read More »

திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது

அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒளிப்படம் ஒன்று உண்டு. அதில் அரைக் கால்சட்டை அணிந்த ஒரு போலீசார் வீதியில் விழுந்து கிடக்கும் ஒரு சத்தியாகிரகியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் காணப்படும் சத்தியாகிரகி அரசையாதான். அவரை 1990களின் தொடக்கத்தில் ஒரு தேவைக்காக நான் சந்தித்தேன். அப்போது கேட்டேன் “தமிழரசுக்கட்சி உண்மையாகவே சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதா? காந்தி கூறிய சத்யாகிரகி ஒருவருக்கு ...

Read More »

நினைவு கூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும் ! மறுத்தால் போராட்டம்!

“30 வருடகால போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும். அதற்குத் தடை விதிப்பது தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும். எனவே அரசு இந்தத் தடைகளை அகற்றவேண்டும். இதற்கான, கோரிக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பதிலளிக்கவேண்டும். பதிலளிக்க தவறினால் தமிழர் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன். திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டமை, சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட ...

Read More »