நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லையாம்

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உண்மை நீதி இழப்பீடுமற்றும் மீளாநிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போது இலங்கை பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கரை வருடங்களாக உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறியுள்ள இலங்கைக்கு வெளியே இருந்துமுன்வைக்கப்பட்ட நல்லிணக்க கட்டமைப்பினை தொடர்வதை கைவிட்டுவிட்டு இலங்கையின் நலனை கருத்தில் கொண்டு பயனளிக்க கூடிய நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அரசாங்கம்தெரிவித்துள்ளது.

மக்கள் அவ்வாறான கட்டமைப்பிற்கான ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம்மேற்கொண்ட பின்னர் உண்மை நீதி இழப்பீடு மீளநிகழாமை போன்ற விடயங்களில்சாதிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அறிக்கையாளரின் அறிக்கை உண்மையாகவும்சாதகமாகவும் குறிப்பிடவில்லைஎன இலங்கை தெரிவித்துள்ளது.