செய்திமுரசு

ஆஸ்திரேலியாவில் இந்தியா பரிசாக கொடுத்த காந்தி சிலை உடைப்பு

கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர்ப்பகுதியான ரோவில்லே பகுதியில் ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையம் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு பரிசாக கொடுத்த அந்த சிலையை, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தூதர் ராஜ்குமார் மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால், ...

Read More »

திருவுருச்சிலை உடைப்பு சம்பவம்; பெண்ணொருவர் கைது

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் இருதயநாதரின் திருவுருவச் சிலை என்பன  உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் லிந்துலை காவல’ துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை காவல’ துறைனர் தெரிவிக்கின்றனர். நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் நேற்று இரவு உடைக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபாலகத்திற்கு முன்பாக உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பகுதியில் காணப்பட்ட திருவுருவச்சிலையும் உடைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, ...

Read More »

7 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார் அருட்தந்தை சிறில்

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே வழங்கிய முறைப்பாடு தொடர்பில், அருட்தந்தை சிறில் காமினி, 7 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு 1 இன் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (15) காலை 10 மணியளவில் சிறில் காமினி வருகை தந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி 07 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் வழங்கிய அருட்தந்தையால், நாளை (16) மீண்டும் வாக்குமூலம் வழங்கப்படவுள்ளதாக ...

Read More »

பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் உயிரிழப்பு

பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் உயிரிழப்பு கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் பருவகால தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் உள்ள பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அத்துடன் இத்தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் சுரண்டல்களுக்கு உள்ளாவதாகவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை எதிர்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

Read More »

மெல்பேர்ன் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்ட அகதி டான் கான் விடுதலை!

ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதியான டான் கான் இன்று விடுதையாகிறார் என முன்னாள் தடுப்பு முகாம்வாசி பர்ஹத் பண்டேஷ் டீவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எந்த வித குற்றமும் செய்யாத டான் கான் எட்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்ததாக பர்ஹத் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

25 பேரன், பேத்திகள், 50 கொள்ளுபேரன், பேத்திகள்: 4 தலைமுறை கண்ட 132 வயது பாட்டி மரணம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார். இன்றைய உலகில் இளம் வயதிலேயே பலரும் நோய்வாய்பட்டு மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளனர். ஆனால் நூற்றாண்டு கடந்து நலமுடன் மூதாட்டி வாழ்ந்து தனது 132-வது வயதில் மரணத்தை சந்தித்துள்ளார். இவர் நோய்வாய்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை என்கின்றனர் அவரது வம்சாவழியினர். 132 வயதில் மரணத்தை சந்தித்த மூதாட்டியின் பெயர் சந்தனம்மாள். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார். கடந்த ...

Read More »

அதிபர், ஆசிரியர்களின் அதிரடித் தீர்மானம்

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவந்த தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Read More »

யாழ். யுவதிக்கு உதவுமாறு பெற்றோர் உருக்கம்

யாழ்ப்பாணம், ஆணைக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.சாஜினி என்ற 19 வயது யுவதிக்கு இரு சிறுநீரகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அவருக்கு மிக விரைவாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தனது ஒரு சிறுநீரகத்தை தானம் வழங்க தாய் முன்வந்துள்ள போதிலும் சத்திரசிகிச்சை மற்றும் வைத்திய பாராமரிப்புச் செலவீனங்களை எதிர்கொள்ள முடியாது பெற்றோர் தவிர்க்கின்றனர். இதனால், தமது மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து உதவிகளை அவரது பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். கணக்கு இலக்கம் – 101075065585 (N.S.B) மேலதிக விவரங்களுக்கு தந்தை (சுரேஷ்) – 0778445767

Read More »

சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசின், நிதி அமைச்சர் பஷில்  ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி-நோயாளர் மரணம்”என்பதை போன்றது என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், வரவு- செலவு திட்டத்தினூடாக சொல்லப்படுகின்ற திட்டங்கள்,அறிவிக்கப்பட்டுள்ள செலவினங்கள்  தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை எந்த வருமானத்தில் இறுதியில் கையாளப்போகின்றீர்கள்? இந்த ...

Read More »

முன்னாள் போராளிகள் சாட்சியமளித்தனர்!

மூன்று தசாப்தகாலப் போருக்கான காரணம் என்ன? அதற்குரிய தீர்வுகள் எவை? என்பதை ஆராயாமல் பாதிக்கப்பட்ட சமூகத்தின் காயங்களுக்கு மருந்திடமுடியாது. கடந்தகாலத்தை மறந்துவிட்டு முன்நோக்கிப் பயணித்தல் என்பது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. போரில் பங்கேற்ற இரண்டு தரப்புக்களில் தமிழ்த்தரப்பு தற்போது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் ‘வெற்றியீட்டிய தரப்பாக’ இருந்துகொண்டு இப்பிரச்சினையை அணுகுகின்றது என்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் கண்ணீர்மல்க சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற உரிமைகளைத் தமிழ்மக்களும் அனுபவிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கும் அதேவேளை, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் காணிகள் ...

Read More »