செய்திமுரசு

இழப்பீடு கோரி 10,000 ஆஸி. பிரஜைகள் பதிவு

கொவிட் 19′ தடுப்பூசியால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு இழப்பீடு பெறுவதற்காக 10,000 அவுஸ்திரேலியர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்காக மருந்து நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்படுகின்றன. தடுப்பூசியைப் பெற்ற பின்னர், உடல்நலக் கோளாறுகள் இருந்தால், உரிய மருத்துவப் பதிவுகளுடன் புகார் அளிக்கலாம் என்று அவுஸ்திரேலியர்களுக்கு மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பில் மருந்து நிர்வாகத்துக்கு 79,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த 79,000 பேரில் 10,000 ...

Read More »

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது. அப்போது முதல் வீட்டு சிறையில் ...

Read More »

ஈஸ்டர் தாக்குதல் – பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் நேற்று (16) இரவு பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உயிர்த்த ...

Read More »

தமிழுக்கு தஸ்தயேவ்ஸ்கி வந்த கதை

ஒரு கடலை மிட்டாய் வாங்கக்கூடிய காசில், உயர் தரத்துடன் கூடிய மொழிபெயர்ப்பு நூல்களை சோவியத் யூனியனின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட காலத்தில் இவான் துர்கனேவ், லியோ டால்ஸ்டாய், சிங்கிஸ் ஐத்மாத்தவ், லெர்மன்தேவ் ஆகியோருடன் தமிழுக்கு அறிமுகமானவர் ஃப்யோதர் தஸ்தயேவ்ஸ்கி. ‘வெண்ணிற இரவுகள்’, ‘சூதாடி’, ‘அப்பாவியின் கனவு’ ஆகிய குறுநாவல்கள் மற்றும் சில கதைகள் வழியாகவே தஸ்தயேவ்ஸ்கியை தமிழில் மட்டுமே படிக்கும் வாசகர்கள் அறியும் சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், கோணங்கி ஆசிரியராக இருந்து, கவிஞர் சுகுமாரனோடு இணைந்து தஸ்தயேவ்ஸ்கிக்குக் கொண்டுவரப்பட்ட ‘கல்குதிரை’ சிறப்பிதழ், தமிழ் வாசகச் ...

Read More »

இரு நாடுகள் இடையேயான போட்டி மோதலாக மாறக்கூடாது

இரு நாடுகளின் உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. தென்சீன கடல் பகுதியில் சீனா அத்துமீறி செயல்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இடையே சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டனில் ...

Read More »

நான் வழங்கிய வாக்குமூலத்தை அதிகாரிகள் விசாரித்திருந்தால் தற்போது அமைச்சர் சரத்வீரசேகர சிறையிலிருந்திருப்பார்

நான் வழங்கிய வாக்குமூலத்தை அதிகாரிகள் விசாரித்திருந்தால் தற்போது அமைச்சர் சரத்வீரசேகர சிறையிலிருந்திருப்பார் என சிவில் சமூக செயற்பாட்டாளர் செகான் மாலக தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சரத் வீரசேகரவிற்கு தொடர்புள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் சிஐடியினரிடம் இது குறித்த ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதியை நடைமுறைப்படுத்தும் அனைத்து அமைப்புகளும் அதனை அனைவருக்கும் சமமான விதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது சிவில் சமூகம் எழுச்சிபெற்றுள்ளது,இளைஞர் சமூகம் எழுச்சியுடன் காணப்படுகின்றது எவராவது தங்கள் ஊடக பலத்தையும்-இராணுவத்தையும் பயன்படுத்தலாம் என நினைத்தால் அது சாத்தியமில்லை ...

Read More »

மாவீரர்களின் நினைவு நாளை ஆயர்மன்றம் மாற்றியமைப்பது துயிலுமில்லங்களை தகர்த்தமைக்கு ஒப்பானது!

இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும். இதேபோன்றே, மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும். அந்தவகையில், மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ...

Read More »

வேலைத் தேடுபவர்களுக்கான பண உதவியில் வாழ்ந்து வரும் 8 லட்சத்திற்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் 826,000 பேர் வேலைத் தேடுபவர்களுக்கான பண உதவி மூலம் வாழ்க்கையை நடத்தும் நிர்ப்பந்தமான சூழலில் இருப்பதாக சமூகச் சேவைக்கான ஆஸ்திரேலிய கவுன்சிலின் Australian Council of Social Service(ACOSS) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால வேலையின்மை அதிகரித்து வருகிறது என்பதை இந்த அறிக்கையின் ஆய்வுத் தகவல்கள் காட்டுகின்றன. மேலும், 1991 மந்தநிலைக்குப் பின்னர் முந்தைய உச்சமாக 350,000 பேர் வேலையின்றி இருந்திருக்கின்றனர்.ஆனால், தற்போதைய எண்ணிக்கை அதைக்காட்டிலும் இரு மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

Read More »

வாலில்லாத காளை மாடும் இலையான்களும்

கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள்  இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் தமிழ் வளவாளர்கள் உரையாற்றினார்கள். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் அதில் பங்குபற்றினார்கள். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று கிழமைகளின் பின் இம்மாதம் மூன்றாம் திகதி ஒரு சந்திப்பு யாழ்ப்பாணத்தில் யு எஸ் ஹோட்டலில் இடம் பெற்றது. பேராதனை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ...

Read More »

இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம்

ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம் சிறந்த வழிமுறையாகும். சரியான அளவில் தூங்கினால் உடல் மற்றும் மன அழுத்தங்கள் நீங்குகிறது. மேலும் இருதய சிக்கல் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் ஆபத்தையும் குறைக்கிறது. ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் ...

Read More »