செய்திமுரசு

அடுத்த 6 மாதங்களுக்கு கொரோனாத் தொற்றின் தாக்கம் மிக மோசமாக இருக்கும்

அடுத்த 4 -6 மாதங்களுக்கு கொரோனாத் தொற்றின்  தாக்கம் மிக மோசமாக இருக்கும் என பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் உலகின்  மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் `பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்`என்ற அறக்கட்டளையின் இணைத்தலைவராகவும் உள்ளார். கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசிகளை  உருவாக்கும் பணிக்கு இந்த அறக்கட்டளை நிதிஉதவி அளித்து வருகிறது. இந் நிலையில், பில்கேட்ஸ்  அண்மையில் ஊடகமொற்றிற்கு இது குறித்து செவ்வியளித்திருந்தார். குறித்த செவ்வியில்  அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனாத் தொற்றின் தாக்கம், மிக ...

Read More »

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கையாளும் கொரோனாத் தொற்று தொடர்பான அணுகுமுறை

அதியுச்சமான சவால்களை கொண்டதாகவே 2020ம் ஆண்டு அமைந்துவிட்டது. அதற்குக் கொரோனாப் பேரிடர் ஆரம்பப் புள்ளியாகியது. இதோ முடிவுக்கு வருகின்றது. அதோ முடிவு தெரிகின்றது என்னும் கொரோனா குறித்த கணிப்புகள் வந்தவழியே திரும்பி ஓடிவிட்டன. தொற்று ஆரம்பமாகி ஒருவருடம் பூர்த்தியாகின்றது. கொரோனாவின் முடிவு குறித்த நம்பிக்கை, நாற்றுமேடையிலிருந்து வெளியே வரவே திணறுகின்றது. சமத்துவம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் காலத்தில், கொரோனாவின் சமத்துவம் வியப்பைத் தருகின்றது. நீதிமன்றங்களிலே கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு நிற்கும் நீதிதேவதையைப் பார்த்திருப்பீர்கள். அஃது, சமன்செய்து சீர்தூக்கி வழங்கப்படுகின்ற நீதிக்கு அடையாளமாகச் ...

Read More »

வவுனியாவிலிருந்து பிரான்ஸ் சென்ற இரு இளைஞர்கள் எங்கே?

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர் என வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர். அவர்கள் ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகளில் தங்கியிருந்த போது வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்தி கதைத்து வந் துள்ளனர். கோதண்டர் நொச்சிகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் கவிஞன் ...

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியது

இலங்கையில் மேலும் 688 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 627 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர். ஏனைய 58 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணி யில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடை யாளம் காணப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 03 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 837 ...

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தைத் தாண்டியது

இலங்கை மேலும் 655 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 503 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர். ஏனைய 147 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணி யில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர். அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 05 பேர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர். அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் ...

Read More »

வீணடிக்கப்பட்ட 20 நாட்கள்

”தமிழ் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில் பேசினால் அவர்கள், புலிப் பயங்கரவாதிகள், பிரபாகரன்கள். முஸ்லிம் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில், மதம் தொடர்பில் பேசினால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள், சஹ்ரான்கள்” தாயகன் கொரோனா வைரஸின் ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தலைமையிலான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வியாழக்கிழமை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்களும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வரவு ...

Read More »

புதியதொரு அரசியல் அணுகுமுறையை தமிழ்த் தரப்புக்கள் உருவாக்க வேண்டும்

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியிலுள்ள, தேசியவாத தென்னிலங்கை அரசுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு, புதியதொரு அணுகுமுறையையும் அரசியல் மொழியையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் புத்திஜீவிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இருப்பதாக பாரளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றின் நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பெரும்பான்மை பௌத்தர்களின் அமோக ஆதரவினை பெற்று, ஆழமான சிங்கள தேசியத்துவத்துடன் தற்போது ஆட்சியமைத்துள்ள அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமையும் ...

Read More »

மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம்

ஈழப்பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார். தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மெல்பேர்னில் வாழ்ந்த வருண்ராஜ், Sale பகுதியில் குடியேறிய பின்னர் ...

Read More »

அவசரமாகக் கூடிய முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீடம் – ’20’ ஐ ஆதரித்தோர் குறித்து ஆராய்வு

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் முழுமையாக ஒன்றுகூடுவது சாத்தியமில்லையென்பதால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, பதவிவழி உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதற்கான முக்கிய நோக்கம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தித்திற்கு ஆதரவாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களித்ததன் தொடர்பிலும், அதன் பின்னரான அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விளக்கம் கோருவதற்காகும். தலைவர் இதற்கான அவசியத்தை வலியுறுத்தியதன் பின்னர் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் ...

Read More »

ஓய்வூதியர்களின் நீதி ?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நினைவுகளைத் தொகுத்து ஒரு நூலை எழுதியிருக்கிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்த நூலில் அவர் இலங்கைத் தீவில் இடம்பெற்றது ethnic slaughter அதாவது இன சங்காரம் என்று கூறியிருக்கிறார். ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவர் இனப்படுகொலை என்று அதை அழைத்திருப்பதாக்க கருதுவது தெரிகிறது. ஆனால் அது இனப்படுகொலை என்ற அரசியல் அடர்த்தி மிக்க ஒரு வார்த்தயை விட செறிவு குறைந்த வார்த்தைதான். சங்காரம் என்பது தொகையாக உயிர்களை அழிப்பது. அதன் வேர்ச்சொல் பழைய நோர்வீஜிய மொழியிலிருந்து ...

Read More »