செய்திமுரசு

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கவனயீர்ப்பு நிகழ்வு

தமிழர்களுக்கான நீதியை கோரி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இது குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே எதிர் வருகின்ற 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை தொடர் போராட்டம் ஒன்றுக்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சிவில் செயற்பாட்டு அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவை தாயகத்தின் அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் வழங்குகின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கில் தீவிரமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்துவருகின்றன. தமிழ் மக்களின் கலை பண்பாட்டு ...

Read More »

யாழில் நான்கு நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அஹிம்சை வழிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தப் காவல் துறையினர் தடை உத்தரவு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல் துறை தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை ...

Read More »

அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வருபவர் ஜெப் பெசோஸ். இவர் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இதற்கிடையே, கடந்த மாதம் டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலன் மாஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை ‌ ‘பிங்’ மூலம் நிரப்ப முடியும் – பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘பிங்’ தேடுபொறி நிரப்பும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணையதளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த மாதம் இது தொடர்பான செனட் விசாரணைக்கு ஆஜரான கூகுளின் ...

Read More »

சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்

அரசாங்கம் தற்போது இன ,மத ரீதியாகவுள்ள சிறுபான்மையினர் மீது நடந்து கொள்ளும் மோசமான செயற்பாடு ஐ.நா கூட்டத் தொடரில் பலத்த எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதேபோல ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை என்ற விடயத்தை உள்ளடக்குவதன் ஊடாகத்தான் இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்கும் ,இவ்வாறான விடயங்கள் மீள நிகழாமைக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக பரிகார ரீதியாக அரசியல் தீர்வு அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணம், காணாமல் போனோர், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மற்றும் காணி அபகரிப்பு ஆகியவற்றுக்கு ...

Read More »

கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்டம் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்பது தொடர்பில் காவல் துறை  சோதனை செய்து வருகின்றனர். வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், ...

Read More »

இலங்கையில் கொரோனா தடுப்பு மருந்தினை பயன்படுத்தியவர்கள் வழமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்திய பலர் வழமையான பக்கவிளைவுகள் குறித்து தெரிவித்துள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தியவர்களில் குறிபிட்ட எண்ணிக்கையிலானவர்கள் வழமையான பக்கவிளைவுகளை எதிர்கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்தினை பயன்படுத்தியவரின் உடல் எவ்வாறு அதனை எதிர்கொள்கின்றது என்பதற்கான அறிகுறி இந்த பக்கவினைவுகள் என அரசமருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோhனா தடுப்பூசியை பயன்படுத்திய பின்னர் சிறிய காய்ச்சல் மூட்டுவலிகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பலர் முறைப்பாடு செய்துள்ளனர் என அரசமருத்துவ ...

Read More »

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலையே தூபி மீள கட்டப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதனைவிடுத்து, ‘அமைதி தூபி’ எனும் பெயரிலையோ அல்லது வேறு வடிவங்களிலோ தூபியை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்ட விரோதமானது எனக்கூறி ...

Read More »

இராணுவப் புரட்சி சட்டவிரோதமானது; ஆங் சாங் சூச்சியை விடுதலை செய்க!

மியான்மர் நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராணுவப் புரட்சிக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டவிரோதமாக பொது மக்களையும், ஆங் சாங் சூச்சி போன்ற தலைவர்களையும் சிறைபிடித்து வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேர்தலில், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தலைவர்களை விடுவிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, மியான்மரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி ...

Read More »

இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை பைடன் எப்படிப் பார்க்கிறார்?

அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் எப்படிச் சிந்திக்கும் என்பது குறித்து இந்திய அரசியல் தலைவர்கள், வெளியுறவுத் துறையினர், இதழாளர்கள், அறிஞர்கள் போன்றோருக்குத் தற்போது ஒரு தெளிவான பார்வை ஏற்பட்டிருக்கும். இவர்களில் சிலர் பைடனைச் சந்தித்திருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கென், சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் போன்றோரில் தொடங்கி பருவநிலை மாற்றத்துக்கான சிறப்புத் தூதர் ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்காவின் ‘இந்தோ-பசிஃபிக் ஒருங்கிணைப்பாளர்’ கூர்ட் கேம்பல் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள். பராக் ஒபாமாவின் துணை அதிபராக ...

Read More »