செய்திமுரசு

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் அறிமுக வீரராக இடம் பிடித்தார். அவர் இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் ...

Read More »

இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, நியூயோர்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. ‘தமது மோசமான மனித உரிமைகள் வரலாற்றைப் பற்றியும் பரவலாக இடம்பெறும் தண்டனையற்ற குற்றங்களைப் பற்றியுமான சர்வதேச விமர்சனங்களைத் திசை திருப்புவதற்காக, எவ்வித ஒழுங்குமற்ற ஆணைக்குழுக்களை நியமிக்கும் வரலாறொன்று இலங்கைக்கு இருக்கிறது. 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல், குறைந்த பட்சம் அவ்வாறான 10 ஆணைக்குழுக்களையாவது இலங்கை ...

Read More »

மட்டக்களப்பிலும் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு ஒறுப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தால் இன்று(புதன்கிழமை) காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை லண்டனில் 27ஆம் ...

Read More »

சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற தமிழ்ச்சிறுமி

தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் நாட்டிலுள்ள வங்கியொன்று தனது 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப் போட்டியொன்றை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்ரியாவின் தலைநகரில் நடத்தியது. இசையினைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்பதே இப்போட்டியின் விதிமுறையாகும்.இதில், ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த அபிர்சனா தயாளகுரு எனும் ஈழத்துச்சிறுமியும் மிக அழகாக தத்துரூபமான ஓவியமொன்றை வரைந்து பரிசு பெற்றார். ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை தனது ஓவியத் திறமை மூலம் வெளிப்படுத்தி முதலாம் பரிசினைத் தனதாக்கினார் அபிர்சனா.

Read More »

கிளி/வட்டக்கச்சியில் 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை முயற்சி; தாயார் காப்பாற்றப்பட்டார்

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதி யில் வசிக்கும் தாயார் ஒருவர்  கும்பத் தகராறின் காரணமாக தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற போதும் தாயார் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார். இரணைமடுக் குளத்தின் வலது கரை வாய்க்கால் ஓரம் உள்ள ஒற்றைக்கை பிள்ளையார் ஆலயம் அருகில் இருந்த கிணற்றுக்குள் தனது பிள்ளைகளைப் போட்ட  தாயார் தானும் கிணற்றில் குதித்துள்ளார். தாயார் கிணற்றில் குதிப்பதை அவதானித்த சிலர் உடன் கிணற்றில் பாய்ந்து ப்பாற்ற முயன்றதில் தாயார் உயிருடன் மீட்கப்பட்டார். குழந்தைகள் மூவல் இரண்டு ...

Read More »

ஐ.நாவில் திமிறும் இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் காரசாரமான அறிக்கையையடுத்து சூடேறியிருந்த இலங்கையின் பொறுப்பு கூறல் விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு கொதிநிலையை எட்டி இருக்கின்றது. கொதிநிலை என்பதையும்விட அந்த அரங்கு ஒரு போர்க்களமாக மாறியிருக்கின்றது என்றே கூற வேண்டும். அவ்வாறு குறிப்பிடுவதில் தவறிருக்க முடியாது. அதீத ஆயுத பலத்தையும் ஆக்கிரமிப்பு போக்கையும் பயன்படுத்தி விடுதலைப்புலிகளை யுத்தத்தில் வெற்றிகொண்ட ராஜபக்சக்கள் 2015 தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னர் மீண்டும் 2019 இல் ஆட்சியைக் கைப்பற்றிய உடன் முன்னைய அரசாங்கத்தின் ஐ.நா பிரேரணைக்கான ...

Read More »

ஆஸ்திரேலியா: குடும்ப விசா வழங்குவதில் தொடரும் தாமதம்

ஆஸ்திரேலியாவின் குடும்ப மீள் ஒன்றிணைவு மற்றும் இணையர் விசா வழங்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் அதை ஆஸ்திரேலியா செனட் சபை உட்படுத்த இருக்கிறது. இந்த விசாரணையில், இவ்விசா முறையில் ஏற்படும் விசா வழங்க ஏற்படும் தாமதம், பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விசாரிக்கப்பட இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகமான எஸ்பிஎஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. “நமது குடும்ப விசா வழங்கும் முறை சீர்குலைந்து கிடக்கிறது. ஆஸ்திரேலியாவில் தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்ட பலரை அது ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது,” எனத் ...

Read More »

9 மாதக் குழந்தையை தாக்கிய தாய் கைது

தாயொருவர் தனது 9 மாதக் குழந்தையை தடியொன்றினால் கொடூர மாகத் தாக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் 9 மாத ஆண் குழந்தையின் தாய் கைது செய்யப் பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை நாவலடி பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர்   தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 24 வயதான பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு குவைத்திலிருந்து குழந்தையுடன் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தற்போது காவல் துறையினர்  பொறுப்பேற்றுள்ளனர். குறித்த பெண் யாழ்ப்பாண காவல் துறையினர் கைது ...

Read More »

சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்முகராஜா காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா இன்று காலை காலமானர்.  கடந்த 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊட கவியலாளரான இவர் சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தவராவார். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை தனது 85 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு ஊடக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிக்கிரியைகள் நாளைய ...

Read More »

வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ்

வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 244 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 6 பேருக்கு தொற்றுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள். சிறைச்சாலைகளிலிருந்து ...

Read More »