செய்திமுரசு

உலகில் பாதுகாப்பான நகரம் ‘துபாய் – ஆய்வில் தகவல்

துபாய் காவல் துறை  பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. துபாய் பொருளாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சூழ்நிலையை துபாய் நகரம் கையாண்டு வரும் விதமும் இதற்கு ஒரு காரணமாக திகழ்ந்து வருகிறது. துபாய் நகரம் தனது சமூக, ...

Read More »

சூழற் படுகொலையில் சிறிலங்கா அரசாங்கம்!

இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது, இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்த்தேக்கங்களை அமைக்கும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. இவற்றை நிர்மாணிப்பதற்காகச் சீன நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. உலகின் உயிர்ப் பல்வகைமைமிக்க வெகு சில இடங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படும் சிங்கராஜாக் காட்டைச் சீர்குலைப்பது சூழற்படுகொலையே அன்றி வேறல்ல. இனப்படுகொலையாளிகளான இவர்களுக்கு இது ஒருபொருட்டாகவே இல்லை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ...

Read More »

நடுகல்லிலும் கூட இனஒதுக்கல்

ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான மையக் கருத்து, ஈழத்தமிழர் இனஒதுக்கலின் நூற்றாண்டின் அழைப்பாகவுமாகிறது நடுகல்லிலும் கூட இனஒதுக்கல் செய்வது சிறீலங்கா என்பதற்கான சான்று ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டின் உலக இனஒதுக்கல் ஒழிப்புத் தின (21.03.21) மையப்பொருளாக “இன ஓதுக்கலை ஒழித்திட இளையவர்கள் எழுமின்” என்பதை அமைத்து இன ஒதுக்கலுக்கு எதிராக இளையவர்களை விழித்தெழுந்து போராடுமாறு அழைப்பும் விடுத்துள்ளது. கோவிட் -19இற்கு பின்னரான இன்றைய காலத்தில் சிறீலங்கா உட்பட உலகநாடுகள் பலவற்றிலும் கோவிட் பரவல் கூட இனஒதுக்கலை வேகப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலுக்கு ஏற்றவகையில் இளையவர்களுக்கு ...

Read More »

ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து

தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், தேவன் கான்வே- டாம் லாதம் ஜோடி அபாரமாக விளையாடியது. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 271 ரன்கள்  சேர்த்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 78 ரன்களும், மிதுன் 73 ரன்களும் விளாசினர். பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் (20), ஹென்ரி நிக்கோல்ஸ் (13) ...

Read More »

வெள்ளத்தில் மிதக்கும் சிட்னி நகரம்… 18000 பேர் வெளியேற்றம்

தொடர் மழையால் சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மிக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரம் சிட்னி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் இந்த பகுதியில் 100 செ.மீ. மழை பெய்துள்ளது. இது மிக அதிகளவு ஆகும். 1961-ம் ஆண்டு இதே போல மிக பலத்த மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல ...

Read More »

சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு குறித்து பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4 மணியாளவில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தன. இந்நிலையில், சிறிலங்காவின்   பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் ...

Read More »

அகதியின் புதிய ஆவணப்படம்

நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் தஞ்சம் கோரிய மக்களை ஆஸ்திரேலிய அரசு எப்படி நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்தும் புதிய ஆவணப்படம் ஒன்றை அத்தடுப்பில் இருந்த முன்னாள் கைதியான Elahe Zivardar எனும் ஈரானிய அகதி வெளியிட்டிருக்கிறார். Searching for Aramsayesh Gah என்ற தலைப்பிலான படத்தில், படகு சிக்கல் முதல் அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள முறை வரை நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முறை குறித்த பல்வேறு அம்சங்கள் இதில் பேசப்பட்டுள்ளது. “என்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என உண்மையில் எனக்குத் தெரியவில்லை. ...

Read More »

சீனாவை எதிர்க்க விரும்பாத தமிழ்த் தேசிய தலைமைகள்

இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் இறுதி வரைபு, மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் இது தொடர்பான இறுதி விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த விவாதங்களின் போது, இலங்கையை பாதுகாக்கும் தலைமைப் பொறுப்பை சீனா எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே இது தொடர்பில் சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. இலங்கையின் மீது புதியதொரு பிரேரணை என்னும் வாதம் மேலொழுந்த நாளிலிருந்து சீனா மிகவும் உறுதியான நிலையில் அதனை எதிர்த்து வந்திருக்கின்றது. இந்த விவகாரம் இலங்கையின் உள்விவகாரம். எனவே இதில் வெளியார் தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கையை நாங்கள் ...

Read More »

தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

தாய்லாந்தில் முக்கிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது. தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது. மாணவர்களின் இந்த போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் போராட்டக் குழுக்களின் தலைவர்களை ...

Read More »

ஊடகங்களை அரசாங்கம் ஒடுக்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது

ஊடகங்களை அரசாங்கம் ஒடுக்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம் மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக பேசும்போது ஊடகங்களை பாராட்டும் அரசு காடழிப்பு குறித்து பேசும்போது ஊடகங்களை கண்டிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார் ஊடகங்களை இவ்வாறு ஒடுக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவிவகித்தவேளை அவரது முகநூலை ஹக்செய் இளைஞன் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு அவரது திறமைக்காக பாராட்டப்பட்டார் ஆனால் இன்று காடழிப்பிற்கு எதிராக குரல்கொடுக்கும் இளைஞர்கள் ...

Read More »