செய்திமுரசு

போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்!

பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார். 50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ், ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ...

Read More »

இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு உறுதியாக தகுதி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தால் இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஒவ்வொரு தொடரின்போதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க்-பாலில் விளையாட மறுத்துவிட்டது. தற்போது முதல்முறையாக வங்காளதேச அணிக்கெதிராக பிங்க்-பால் பகல் இரவு ஆட்டத்தில் விளையாடியது. இதனால் 2020 – 2021 தொடரின்போது இந்தியா பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என நம்புகிறது. மேலும் நான்கு ...

Read More »

நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 248/4

பெர்த்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில் லாபஸ்சாக்னேயின் சதத்தால் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு பிங்க் பால் டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. டேவிட் வார்னர் – ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 9 ரன்னிலும், டேவிட் வார்னர் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு லாபஸ்சாக்னே உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த லாபஸ்சாக்னே நிதானமாக விளையாட ஸ்டீவ் ...

Read More »

காதுகளைக் கொஞ்சம் பெரிதாக்குவோம்!

புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் உதிர்த்தார் என்ற வினா, இங்கு பிரதானமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையைத் தொடர்ந்து, சூடுபிடித்த புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கிவிட்டன. இதற்கான விருப்பமோ, அவசியமோ அரசாங்கத்திடம் இருக்கவில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மய்யப்படுத்தியே, புதிய அரசமைப்புப் பற்றிப் பேசப்பட்டபோதும், தேர்தல் முறை ...

Read More »

திடீரென கோடீஸ்வரனாக மாறிய இளைஞர்!

அவுஸ்திரேலியாவில் இளைஞருக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார். சிட்னியை சேர்ந்த 20களில் உள்ள இளைஞர் நேற்று காலை தூங்கி எழுந்தார், பின்னர் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய லொட்டரி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது, நீங்கள் கோடீஸ்வரர் ஆக்விட்டீர்கள் என கூறினார்கள். இதை முதலில் நம்பாத இளைஞர் ஓன்லையில் அது குறித்து பார்த்த போது அவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுக்கு பெரிய அளவிலான பரிசு பணம் ...

Read More »

டைம் பத்திரிகையின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு !

காலநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடிய சுவீடன் நாட்டு மாணவியான கிரெட்டா துன்பெர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 1927ம் ஆண்டில் இருந்து டைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டவட்டர்களில் 16 வயதுடைய கிரேட்டா துன்பெர்க் தான் மிகவும் இளையவர். கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே வகுப்புகளை புறக்கணித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹேஷ்டெக் மிகவும் பிரபலமானது. அந்த ...

Read More »

2019 இல் உலக நாடுகளில் 250 பத்திரிகையாளர்கள் சிறையில்!

2019 இல் தங்கள் எழுத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு மிகவும் அதிகமானதாக காணப்படுகின்றது. சீனா பத்திரிகைகள் மீதான தனது இரும்புப்பிடியை மேலும் கடினமாக்கியுள்ளஅதேவேளை  துருக்கி சுயாதீன செய்தியிடலை முற்றாக தடை செய்துள்ள நிலையிலேயே இந்த சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் சிறையிலிருந்து விடுதலையான பத்திரிகையாளர்கள் நீதிமன்ற விசாரணைகளையும் மேல்முறையீடுகளையும் எதிர்கொண்டு காத்திருக்கின்றனர். ஏதேச்சதிகாரமும், ஸ்திரமற்ற தன்மையும், ஆர்ப்பாட்டங்களும் பல பத்திரிகையாளர்கள் மத்திய கிழக்கில் சிறைகளில் வாடும் நிலையை உருவாக்கியுள்ளது.குறிப்பாக சவுதி அரேபியாவில் இந்த நிலை காணப்படுகின்றது,உலகில் பத்திரிகையாளர்கள் அதிகளவு ...

Read More »

கோதுமை மாவின் வரியைக் குறைக்க அமைச்சரவை அனுமதி!

கோதுமை மாவின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

எதிர்க்கட்சித் தலைவர் இன்றி அரசியலமைப்பு சபை கூடுகிறது!

அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் சபாநாயகர், பிரதமர்  ஆகியோர் உத்தியோகபூர்வமாக பங்குப்பற்றுவார்கள். அத்தோடு எதிர்க்கட்சித் தலைவராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவிற்குஅரசியலமைப்பு பேரவை கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை. நாடாளுமன்றம் கூடி எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி ஏற்காமையினாலேயெ இதற்கான காரணமாகும். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இன்றி அரசியலமைப்பு சபை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியானது!

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அடங்கிய விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 29 அமைச்சுக்களுக்கு பொறுப்பான விடயதானங்கள் குறித்த வர்ததமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு https://drive.google.com/file/d/1apTdv_bfnxbqO2oXwzeSUfW5GOvo2iG5/view

Read More »