செய்திமுரசு

மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தநிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ...

Read More »

குளங்களைத் தொலைக்கும் தலைமுறை

தண்ணீரைக் காக்கத் தவறுகின்ற சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்றது. எங்கள் கண்முன் எம் நீராதாரங்கள் களவாடப்படுகின்ற போது, வாழாவிருக்கின்ற சமூகம் அடிப்படை அறங்களை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. போருக்குப் பின்னரான இலங்கையில், அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இனியாவது நாம் பேசியாக வேண்டும். அடுத்த தலைமுறைக்கு, எதை விட்டுச் ...

Read More »

தேவிபுரத்தில் துப்பாக்கி , ரவைகள் மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து, துப்பாக்கியொன்றும் ரவைகளும் இன்று (06) மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர்  காணியைத் துப்புரவு செய்யும் போது, நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில்,  வெடிபொருட்கள் இனம் காணப்பட்டன. இது தொடர்பில்  புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைஅடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த  காவல் துறை , உரப்பை ஒன்றில் பொதிசெய்யப்பட்ட நிலையில், டி56 ரக துப்பாக்கி ஒன்றும் அதன் ரவைகள் 420உம் மீட்கப்பட்டுள்ளன.

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகள் விளக்கமறிலில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் இடம்பெற்ற வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நெளபர் மௌலவி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அடிப்படைவாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசீம் என்பவர் 2016 ஆம் ஆண்டே அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவருக்கு நௌபர் மௌலவி என்பவரே ...

Read More »

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது கடமைகளை நிறைவேற்ற தவறியபின்னரும் வெட்கமின்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார் என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நாட்டின் மீது தாக்குதல் இடம்பெற்றவேளை மைத்திரிபாலசிறிசேன வெளிநாட்டிலிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள மல்கம் ரஞ்சித் மைத்திரிபால சிறிசேனவின் தலைமத்துவ திறன்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதல் இடம்பெறலாம் என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க ...

Read More »

தமிழ் அகதிகளை விடுவிக்க ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் Karen Andrews பொறுப்பேற்றுள்ள நிலையில், இது அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுகாதார பிரச்னைகள் தொடர்பாக புதிய அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கான நல்ல வாய்ப்பு என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இது புதிய உள்துறை அமைச்சர் Karen Andrews தனது புதிய பொறுப்பைக் கருணையுடன் தொடங்குவதற்கான நேரமாகும். அத்துடன், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் உள்ள தமிழ் அகதி குடும்பத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையை புதிய அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. “எந்த நாட்டு ...

Read More »

அமைதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை நெருங்கிய வகையில் தொடர்புபட்டு ஆற்றிய அளப்பரிய பணிகளை தனிப்பட்ட முறையில் நான் நன்கறிவேன் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப் ஆண்டகையின் மறைவையடுத்து, அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு ...

Read More »

நீதிக்காகப் போராடிய மாமனிதரின் இழப்பு ……….ஈடுசெய்யப்பட முடியாத இழப்பு

மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை, இலங்கையின் ஒஸ்கார் றொமேறோராவார் என்று இரங்கல் குறிப்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை குறிப்பிட்டுள்ளது. முள்ளிவாய்க்காலின் பின் சமூக, அரசியல் வரலாற்று தளத்தில் தமிழின இனப்படுகொலை தொடர்பில் உண்மையைக் எடுத்துக்கூறி நீதிக்காகப் போராடிய மாமனிதரின் இழப்பு என்பது தமிழினத்திற்கும் சர்வதேசத்திற்கும் என்றுமே ஈடுசெய்யப்பட முடியாத இழப்பாகும் என்றும் தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. அத்துடன், ஜோசப் ஆண்டகை, மதங்களைக் கடந்து தமிழின விடுதலைக்காக, இலங்கை அரச அடக்கு முறைக்கெதிராக ஓங்கி ஒலித்த குரல் விடுதலை ...

Read More »

விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது மிகவும் முக்கியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே எதிர்ப்பதாக கூறி எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் அத்தீர்மானத்தினை நிராகரிக்க முடியாது. காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றவகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோமெனவும் ...

Read More »

‘சிறிலங்காவின் பெயரை சிங்கலே” – என மாற்ற பௌத்தமதகுருமார் யோசனை

சிறிலங்காவின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என பௌத்தமதகுருமார் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். புதிய அரசமைப்பிற்கான யோசனைகளை சமர்ப்பி;த்துள்ள பௌத்தமதகுருமார்கள் குழுவொன்று நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பௌத்தமதகுரு ஒருவர் நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்களமே உத்தியோகபூர்வ மொழியாக காணப்படவேண்டும், ருகுணு பிஹிட்டி மாயா என்ற அடிப்படையில் பிரதேசங்கள் பிரிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More »