தற்காலிக பாதுகாப்பு வீசா நடைமுறையில் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் பற்றிய விரிவான விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்விhttp://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/trrkaalik-paatukaappu-viicaa-kurrittu-puklittm-kooruvoor-arrintirukk-veennttiyvai?language=ta
Read More »செய்திமுரசு
புலனாய்வுப் பத்திரிகையாளர் நிக் டேவீஸ் பேட்டி
புகழ்பெற்ற புலனாய்வுப் பத்திரிகையாளரான நிக் டேவீஸ் நல்ல நாவலாசிரியரும்கூட. அரசும் ஆட்சியாளர்களும் மறைக்க நினைக்கும் ரகசியங்களைத் தேடிக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தும் இவர், ‘விக்கி லீக்ஸ்’ பல உண்மைகளை அம்பலப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். பிரிட்டனில் ரூபர்ட் முர்தோச்சின் ஊடக சாம்ராஜ்யம் தொடர்பான தகவல்களுடன், ‘நியூஸ் ஆஃப் த வேர்ல்ட்’ பத்திரிகை ஒட்டுக்கேட்பு விவகாரத்தையும் எழுதினார். தான் வழங்கிய புலனாய்வுச் செய்திகளை அடிப்படையாகக்கொண்டு நூல்களையும் எழுதுவது இவருடைய வழக்கம். ஒவ்வொரு முறை புத்தகம் எழுதும்போதும் பெரிய போராட்டமாகத்தான் இருக்கிறதா? புத்தகம் எழுதுவது கடினமான வேலை தான்; ...
Read More »வட மாகாணத்தில் விரைவில் மேலும் 4 நியதிச் சட்டங்கள்
வட மாகாணத்தில் விரைவில் மேலும் 4 நியதிச் சட்டங்கள் நிறைவேறவுள்ளதாக வட மாகாண இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் வட மாகாணத்திற்குட்பட்ட கனிப் பொருட்களிற்கான வரிக்கான ஏற்பாடுகள் இடம்மெறுவதோடு அடகு பிடிப்போர் அனுமதிக்கான வரி விதிப்பிற்கும் வட மாகாண இறைவரித் திணைக்களம் தயாராகிவருகின்றதுடன் வியாபார பெயர்ப் பதிவுக் கட்டணம் என்பவற்றோடு மருந்து மற்றும் இரசாயன விநியோகம் மீதான வரிகளிற்கான ஏற்பாட்டினையும் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வரிகள் ஏற்கனவே நாட்டின் ஏனைய மாகாணங்கள் சில வற்றில் நடைமுறையில் உள்ளது இதன் பிரகாரம் விரைவில் ...
Read More »அவுஸ்ரேலியா தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக கருத்தமர்வு
புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை கையாள்வது எப்படி? தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக கருத்தமர்வு நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் குறித்த தகவல்களை பரிமாறுவதற்க்கு தமிழ் சட்ட வல்லுனரான அவனிதா செல்வராஜா கலந்து கொள்ள இருக்கிறார். தமிழ் ஏதிலிகள் கழகத்தின் குமார் நாராயணசாமியும் பங்குபற்றுகிறார். தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள், அவர்களது நலன் விரும்பிகள், மற்றும் புகலிடக் கோரிக்கைக்கான விண்ணப்பம் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்தக் கருத்தமர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலம்: 4PM Saturday ...
Read More »அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி
அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நேற்று நடந்தது. தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின், ரபடா, இம்ரான் தாஹிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அவுஸ்ரேலிய அணி 36.4 ஓவர்களில் 167 ரன்களில் சுருண்டது. மிட்செல் மார்ஷ் (50 ரன்), மேத்யூ வேட் (52 ரன்), டிரைமைன் (23 ரன்), ...
Read More »விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்!!!
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 28 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை ...
Read More »கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதம் அடித்துள்ளார்
நியூசிலாந்துக்கு எதிராக கேப்டன் பதவியில் 6-வது சதத்தை (103 ரன்) பதிவு செய்தார். அதாவது கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதமும், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிராக தலா ஒரு சதமும் அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய பயணத்தின் போது டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இதை தொடர்ந்து வீராட்கோலி டெஸ்ட் கப்டன் பொறுப்பை ஏற்றார். நியூசிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்டில் வீராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 48-வது டெஸ்டில் ...
Read More »2017 வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி!
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த மாதம் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2017ஆம் ஆண்டில் 1,819 billion ரூபா, (1,819,544,000,000 ரூபா) மொத்த செலவினம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் கடன் வரம்பு, 1,489 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பாதுகாப்பு செலவினங்களுக்கான ஒதுக்கீடு சுமார் 284 பில்லியன் ரூபாவாக ...
Read More »SBS தேசிய மொழிப் போட்டியில் இரு தமிழ் மாணவர்கள் வெற்றி
SBS வானொலி ஆஸ்திரேலியா முழுவதும் நடத்திய மொழிப் போட்டியில் சுமார் 700 பள்ளிக்கூடங்களிலிருந்து 4 வயது முதல் 18 வயதுவரை என்று மொத்தம் சுமார் இருபதாயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பல பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றியாளர்கள் ஆறு பேரில் மெல்பன் நகரில் வாழும் வைகா கார்த்திக் மற்றும் கதிர் ஜானகி சக்திவேல் என்று இரு தமிழ் குழந்தைகள் வெற்றிபெற்றனர். இவர்களுக்கு நேற்று(8) சிட்னி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
Read More »டென்மார்க் உளவு அமைப்பின் முன்னாள் தலைவரின் பேட்டி புத்தத்தை விற்க தடை
டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேகப் சாஃப்பின் பேட்டிகளை கொண்ட புத்தத்தை விற்க தடை டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பு, தேசிய அளவிலான ஒரு செய்தித்தாள் மற்றும் வானொலி நிலையத்தை ஒரு புத்தகத்தின் பகுதிகளை வெளியிட தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஏனெனில், அந்தப் புத்தகம் ரகசியங்களை கொண்டிருக்கலாம் என்பதால் தடைசெய்யப்பட்டுள்ளது டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேகப் சாஃப்பின் பேட்டிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள அந்தப் புத்தகத்தை டென்மார்க்கில் உள்ள 40 கடைகள் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ...
Read More »