வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார். வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களது பொருளாதாரத் தேவைகளை மட்டும் நிறைவு செய்வதன் ஊடாக, அரசியல் உரிமைகளை, அரசியல் அபிலாஷைகளை அவர்களது மனங்களிலிருந்து மெல்ல அகற்றி விடலாம் என்ற ...
Read More »செய்திமுரசு
தேசிய கால்பந்தாட்ட அணியில் யாழ். வீராங்கனைகள் ஏழு பேர்!!
இலங்கையின் தேசிய 14 வயதுப் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாண மாவட்ட வீராங்கனைகள் ஏழு பேர் இடம்பிடித்துள்ளனர். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் படசாலையைச் சேர்ந்த நால்வர், மகாஜனக் கல்லூரி மாணவிகள் மூவர் என்றவாறாக அமைந்துள்ளது அந்தப் பிரதிநிதித்துவம். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த ச.கிரிசாந்தினி, பா.சேந்தினி, அ.கொன்சிகா, க.பிருந்தாயினி ஆகியோரும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜெதுன்சிகா, உ.சோபிதா, சி.தவப்பிரியா ஆகியோருமே அவ்வாறு தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த அணி எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி பூட்டானில் ஆரம்பிக்கும் ஆசிய ...
Read More »இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலையானார் பாலஸ்தீன சிறுமி !
இஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்ததற்காக சிறைத் தண்டணை விதிக்கப்பட்ட பாலஸ்தீன சிறுமி அஹித் தமீமி விடுவிக்கப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான அஹிம் தமீமிக்கு பாலஸ்தீனத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நில ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் வீரர்களின் அட்டூழியங்களை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர். அம்மக்களின் பல ஆண்டுகால போராட்டம் உலக நாடுகளிடம் பெரிதான தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் 17 வயது சிறுமியான அஹித் தமீம் தனது போராட்டத்தின் மூலம் உலக நாடுகனை பாலஸ்தீனம் மீது கூடுதலாக பார்வை விழும்படி ...
Read More »வடக்கு வந்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! -விஜயகலா
வடக்கு மக்களின் உண்மை நிலையினையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலையினையும் அறிய வேண்டுமாயின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு விஜயம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் வடக்கில் பல உள்ளக பிரச்சினைகள் காணப்படுகின்றது. வெளியில் காணப்படுகின்ற ஒரு சில பிரச்சினைகள் மாத்திரமே தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு தெரிகின்றது. தெற்கில் இருந்துக் கொண்டு வடக்கில் நிர்வாகம் செய்ய முடியாது. இன்றும் வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றது. வடக்கு பிரதிநிதிகள் என்று ...
Read More »எலும்புக்கூடுகளும் – தமிழர் தாயகமும்!
இப்போதெல்லாம் வடக்கு – கிழக்கில் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் தனியார் தரப்பினராலும், கொள்ளைக்காரர்களாலும், ஏன் இராணுவத்தினராலும்கூட மேற்கொள்ளப்படு கின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதன் மூலமான கைதுகள் , புதையல் இருக்கும் இடத்தைக் கண்டறியும் அதி நவீன உபகரண பறிமுதல் உத்தரவுகள் என எல்லாமே பரபரப்புச் செய்திகளாக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக, இப்போது வடக்கு கிழக்கில் புதையல் தோண்டும்போது புதையல் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் மனித உடல் எச்சங்களும், எலும்புகூடுகளும் அதிக அளவில் வெளியே தலைகாட்டுகின்றன. அண்மையில் மன்னார், கூட்டுறவு மொத்த விற்பனை ...
Read More »தமிழ் மக்கள் போரின் பின்னர் வலுவிழந்துள்ளார்கள்!
வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியுள்ளார். தமிழ் மக்கள் போரின் பின்னர் வலுவிழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். வலுவிழந்தவர்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி, சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேசமாட்டார்கள் என்று அவர் எண்ணுகின்றார் போன்று கருதுகின்றேன் என வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ...
Read More »யாழ் கோட்டைப்பகுதியில் 2700 ஆண்டுக்கு முற்பட்ட ஆதி இரும்புகால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி இரும்புக் கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான உறுதியான சான்று கண்டுபிடிக்கப்பட்டது இவ்வாறு தொல்லியல் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்தார். கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும் அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் ...
Read More »இனவாத தாக்குதல்கள் தேசிய நலனுக்கு பாதிப்பு!- ரவூப் ஹக்கீம்
சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பார்க்காமல் அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வின் முதல் நாள் அமர்வு நேற்று (28) மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயற்சி நிலையத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ...
Read More »இந்தோனேசியாவின் லம்போக் தீவை உலுக்கிய நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் பூமியின் வளையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தோனேசியா.தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா, சர்வதேச அளவில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ...
Read More »தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது?
‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’…… இவ்வாறு கூறியிருப்பவர் வடமாகாண ஆளுநர் குரே. சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடந்த வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இதே கருத்துப்பட ...
Read More »