செய்திமுரசு

விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு!

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளோ, போராளிகளோ யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும்தான் மரியாதை. அதிகாரத்தை (அல்லது பதவியை) இழந்து “முன்னாள்” என்கிற அடையாளத்தைப் பெற்ற தருணத்திலிருந்து, அவர்களுக்கான அங்கிகாரம் மெல்ல மெல்லக் கீழிறங்கத் தொடங்கிவிடும். அதையே, தமிழ்த் ...

Read More »

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி மூன்றாவது நாளாக நடை பயணம் தொடர்கிறது!

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், நேற்று ...

Read More »

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளம் இல்லையாம்!

சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்கலாம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிறிலங்கா இது குறித்து அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவில் சீனாவின் கடற்படை தளம் உருவாகலாம் என சிலர் கற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது சிறிலங்காவின் துறைமுக அதிகார சபைக்கும் சீனா மேர்ச்சன்ட் நிறுவனத்திற்கும் இடையிலான வர்த்தக முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவின் சீனாவின் ...

Read More »

அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயல்!

அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறி உள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர். அது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது. முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து ...

Read More »

கடற்கரையில் கண்டெடுத்த காதல் கடிதம் கண்ணீரால் நனைந்தது!

கடற்கரையில் கண்டெடுத்த காதல் கடிதத்தைப் பற்றிய விடயத்தை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த Daniel McNally மற்றும் அவரது மனைவி Kate Challenger உடன் இணைந்து கடந்த ஓகஸ்டு 7 ஆம் திகதியன்று கடற்கரை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது கடலில் ஒரு பாட்டில் மிதந்தது வருவதை அவதானித்த குறித்த காதல்ஜோடி அதனை எடுத்துப் பார்த்த போது உள்ளுக்குள் காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதனை எடுத்து பிரித்து பார்த்துள்ளனர். அந்த கடிதத்தில் சீன மொழியில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்ற எம்.ஐ.டி மாணவர்கள்!

அஜித் ஆலோசனையின் கீழ் எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றதற்காக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அஜித்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் ஆராய்ச்சி சார்ந்த போட்டிகளில் இக்குழு பங்குபெற்று வருகிறது. தக்‌ஷா குழு இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் SAE ISS ஏரோ டிசைன் சேலஞ்சில் அசாத்திய திறனை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஒவ்வொர் ஆண்டும் ...

Read More »

பாதியில் முறிந்த பயணம்!

எஸ்.சம்பத் சிந்தனை உலகுக்கும் இலக்கியத்துக்கும் இடையே இருக்க வேண்டிய அவசியமான உறவின் இசைமையைப் புனைவின்வழி அற்புதமாகப் பிணைத்தவர் சம்பத். அடிப்படை விஷயங்களில் உழலும் புனைவு மனம் இவருடையது. ஆண்-பெண் உறவும் சாவும் இவரைப் பெரிதும் வாட்டிய விஷயங்கள். அவருடைய சிறுகதைகளும் குறுநாவல்களும் ஒரே நாவலான ‘இடைவெளி’யும் இத்தன்மைகளில் உருவாகியிருக்கும் படைப்புகளே. தன் அனுபவங்களின் ஊடாக அறியவரும் வாழ்வின் விசித்திர குணங்களும், அனுபவங்களின் சாரத்தில் உருக்கொள்ளும் கருத்துகளும் கேள்விகளும் அலைக்கழிப்புகளும் சம்பத்தின் புனைவுப் பாதையை வடிவமைக்கின்றன. அந்தப் பாதையில் உள்ளுணர்வின் ஒளியோடு பிரச்சினைகளுக்கான விடைகளைத் தர்க்கரீதியாகக் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் விசா நடைமுறையில் மாற்றம்: பாதிப்பை எதிர்கொள்வோர் யார்?

அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கான விசா நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. புதிதாக அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரை regional நகரங்கள் அல்லாத பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டம் குறித்து பேசப்பட்டு வருவதாக கடந்த ஓகஸ்ட் மாதம் அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சனத்தொகை மற்றும் நகரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Alan Tudge இதுதொடர்பில் நேற்று (09) உரையாற்றியிருந்தார். கடந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்கள் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகர் ஆகிய இடங்களையே அண்டியே வாழ்கின்றனர். ...

Read More »

காஞ்சிரம்குடா படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அகழ் விளக்கேற்றி கண்ணீரோடு அனுஷ்டித்தனர். குறித்த படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பானது அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இதன்போது பொது அகழ் விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆத்தம ...

Read More »

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு: ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளத்தை மூட முடிவு!

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு காரணமாக ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் ...

Read More »