வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருகிறது என்பதை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது. ஏவுகணை சோதனைகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்து உலக நாடுகளை அதிர வைத்தது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் தொடர் பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அணு ஆயுத திட்டங்களை அந்த நாடு நடத்தியது. இது அமெரிக்காவுக்கு சவாலாக அமைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே தீராப்பகை மூண்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ...
Read More »செய்திமுரசு
“ஒரு பறவைக்காக இரண்டு நாள் காத்திருந்தேன்!” திவ்யபாரதி
கேனான் 7 D மார்க் கேமரா, 150 – 600 லென்ஸ் அதோடு ட்ரைபேடு… இவையின்றி திவ்யபாரதி ராமமூர்த்தியைப் பார்க்க முடியாது. முதுகலை ஆங்கிலம் படித்தாலும், இவரின் முழு ஆர்வம் போட்டோகிராபி பக்கம்தான். பொழுதுபோக்கிற்காக படங்கள் எடுக்கத் தொடங்கியவர், ஒரு கட்டத்தில் அதை விட்டு விலகமுடியாதளவு நேசிக்க ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக, கானுயிர்ப் புகைப்படக்காரராக உலா வரும் திவ்யபாரதி, இயற்கை சார்ந்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டுவருகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஆர்வத்துடன் போட்டோகிராபி மற்றும் இயற்கையைக் காத்தல் குறித்து உரையாடும் திவ்யபாரதியிடம் பேசினேன். “கானுயிர் போட்டோகிராபி மீது ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் திகதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சொகுசு காரை மோதச் செய்தான். அதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா ...
Read More »பாகிஸ்தான் போரை விரும்பவில்லை- இம்ரான்கான்
தனது மண்ணிலோ, உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று இம்ரான்கான் பேசியுள்ளார். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள சாச்ரோ நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- தனது மண்ணிலோ, அல்லது உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது. தற்போது இருப்பது புதிய பாகிஸ்தான். எங்கள் நாட்டில் முதலீட்டையே நாங்கள் விரும்புகிறோம். நமது புதிய பாகிஸ்தான் வளமுடனும், ஸ்திரதன்மையுடனும், அமைதியுடனும் திகழ ...
Read More »இராணுவ உயர் அதிகாரி வீட்டில் விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மீட்பு!
விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் உள்ளிட்ட 5.81 மில்லி மீட்டர்களைக் கொண்ட 273 ரவைகள் ஆகியவற்றை கைப்பற்றிய காவல் துறை,இராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.ஹ பதுளை – ரிதிமாலியத்தை காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து காவல் துறை நேற்று ரிதிமாலியத்தை காவல் துறை பிரிவைச் சேர்ந்த குருவிதென்னை என்ற இடத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரது வீட்டைச் சுற்றி வலைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். இத் தேடுதலின் போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதியொன்றை பரிசோதனை செய்த ...
Read More »மன்னார் மனிதப் புதைகுழி! முழுமையான ஆய்வறிக்கையின் பின்னரே இறுதித் தீர்மானம்!
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை அது குறித்து இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது என காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். இவ்விடையம் தொடர்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டியுள்ளது.கார்பன் கால நிர்ணய அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் ரி. சரவணராஜாவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சுமார் 350 வருடங்கள் ...
Read More »கைது செய்யப்படுவாரா கரன்னகொட?
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2008-09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு, இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும் ஒரு சந்தேக நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள், நடந்து கொண்டிருக்கின்றன. அட்மிரல் வசந்த கரன்னகொட, கடற்படைத் தளபதியாக இருந்தபோது, இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதுவும், அட்மிரல் கரன்னகொட தான், தனக்கு நெருக்கமான அதிகாரியாக இருந்த, ‘நேவி சம்பத்’ எனப்படும், லெப். கொமாண்டர் ...
Read More »அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர்தோருக்கு மகிழ்ச்சியான தகவல்!
அவுஸ்திரேலியாவில் 3 புதிய விசா பிரிவுகளை அவுஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர் சமூகத்தினருக்கு பயன்தரும் வகையில் இந்த விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் சமூகத்தினர் நீண்டநாட்களாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இப்புதிய 3 வகை விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு அமைச்சர் David Coleman இதனை தெரிவித்துள்ளார். இம்மூன்று புதிய விசாக்களில் முதலாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக பெற்றோர் விசாவாகும். எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி முதல் தமது பெற்றோருக்கான விசா விண்ணப்பங்களை பிள்ளைகள் தாக்கல் செய்யலாம். Sponsored Parent (Temporary) subclass 870 பிரிவில் ...
Read More »பாகிஸ்தானில் 22 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகிறது!
பாகிஸ்தான் விமானப்படையின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க முழு தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய விமானப்படை கூறியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. அதையடுத்து, இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இத்தகைய சம்பவங்களால், இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் விமானப்படையின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க முழு தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய படைகள் தெரிவித்தது. இதற்கிடையே பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் ...
Read More »வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து, அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், திருக்கோவிலிலுள்ள அவர்களின் அலுவகத்துக்கு முன்பாக கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டு, எதிர்ப்பு கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கோவில் வாக்ரிஷா வீதியில் அமைந்துள்ள சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில், அலுவலகத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றைத் தொடர்ந்து அங்கு வருகை தந்து இருந்த பெண்கள், கறுப்பு ...
Read More »