விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் உள்ளிட்ட 5.81 மில்லி மீட்டர்களைக் கொண்ட 273 ரவைகள் ஆகியவற்றை கைப்பற்றிய காவல் துறை,இராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.ஹ
பதுளை – ரிதிமாலியத்தை காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து காவல் துறை நேற்று ரிதிமாலியத்தை காவல் துறை பிரிவைச் சேர்ந்த குருவிதென்னை என்ற இடத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரது வீட்டைச் சுற்றி வலைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இத் தேடுதலின் போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதியொன்றை பரிசோதனை செய்த போதே மேற்கண்ட வெடிப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட பொருட்களின் உரிமையாளரென்று கருதப்படும் இராணுவ உயர் அதிகாரியையும் காவல் துறையினர் கைது செய்தனர். இவர் உடனடியாக மகியங்கனை மாவட்ட நீதிபதி ஏ.ஏ. லக்சான் முன்னிலையில் ஆஜர் செய்ததும்,நீதிபதி,அந் இராணுவ உயர் அதிகாரியைஎதிர்வரும் 13ந் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இராணுவ உயர் அதிகாரி,மன்னார் பகுதியின் பெரியமடு இராணுவ முகாமில் சேவையாற்றும் வை.எம்.விஜயசூரிய என்ற 35 வயது நிரம்பியவராவார்.
இவர் விடுமுறையில் வீடு வந்து தங்கியிருந்தவரென்று ஆரம்ப விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக ரிதிமாலியத்தை காவல் துறை நிலையப் பொறுப்பதிகாரி ரொசான் எஸ். பந்துசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal