அவுஸ்திரேலியாவிற்கு வந்து பணிபுரியும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான இடங்களைக் குறைப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. நேற்று (080 2018 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இதுவரை ஆண்டொன்றுக்கு 2300 வெளிநாட்டு மருத்துவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிவதற்கான விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதனை 2,100 ஆக குறைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. மேற்குறித்த முடிவின் காரணமாக அடுத்த 4 ஆண்டுகளில் மெடிகெயார் ஊடாக 416 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியுமென ...
Read More »செய்திமுரசு
இறுதி பயணத்திற்காக செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு முன் உயிர் பிழைத்த அதிசயம்!
அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுவனுக்கு அவனது பெற்றோர் அவனது உறுப்புகளை தானமாக வழங்கும் நடைமுறைகளில் கையெழுத்திட்டப் பிறகு அச்சிறுவனுக்கு நினைவு திரும்பியது. ட்ரென்டன் மெக்கின்லே மார்ச் மாதம் ஒரு வாகன விபத்தில் சிக்கி கடுமையான மூளை காயங்களால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவனது பெற்றோரிடம், இனி அவன் திரும்பிவரமாட்டான். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் ஐந்து சிறுவர்களுக்கு அவனது உடல் பாகங்கள் பொருந்திப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். அவனது உயிருக்கு ஆதரவு வழங்கி வந்த செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு, ஒருநாள் முன்னதாக ...
Read More »தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொதுமக்களை முறையாகச் சென்றடைய வேண்டும்!
தகவல் அறியும் உரிமைச்சட்டமானது தற்போது எமது நாட்டில் நடைமுறையில் உள்ளது. எனினும் இது தொடர்பான விளக்கம் பொதுமக்களை முறையாகச் சென்றடைய வேண்டும். தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் செயற்பாட்டை ஊடகவியலாளர்கள் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் தெரிவித்தார். இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைவதனை முன்னிட்டு “தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்களை விழிப்பூட்டல்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் என்பவற்றின் ...
Read More »கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த யாழ். இந்துவின் மாணவன் பலி!
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவன் காங்கேசன்துறைக்கு சென்று வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த குறித்த மாணவன் தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு அங்கிருந்து ...
Read More »மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்- 2018
பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல்19-04-1988வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது நினைவுநாளும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாளும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ்த்தேசிய விடுதலைக்காக அயராது உழைத்து உயிர்நீத்து மாமனிதர்களாக கௌரவிக்கப்பட்டவர்களையும் இங்கு நினைவு கூரப்பட்டது, இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். 21-04-2018 சனிக்கிழமையன்று மாலை 6.00மணிக்கு சென்யூட்ஸ் மண்டபத்தில் வானமுதம் வானொலியின் அறிவிப்பாளர் திரு சிறீறஞ்சன் தலைமையில் அவுஸ்திரேலியத் தேசியக் கொடி மற்றும் தமிழீழத்தேசியக் கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள்ஆரம்பமாகின. அவுஸ்திரேலியத் ...
Read More »அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழர் விளையாட்டு விழா 2018
வங்க கடலில் காவியமான கேணல் கிட்டு ஞாபகார்த்த விளையாட்டு விழா 26 – 01 – 2018 இன்று வெள்ளிக்கிழமை சிட்னியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் துடுப்பந்தாட்டம் உதைபந்தாட்டம் வலைபந்தாட்டம் மற்றும் கிளித்தட்டு, முட்டி உடைத்தல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாலை ஏழு மணிவரையும் நடைபெற்றதுடன், வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உலகம் சுற்றி மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் சுரேஸ் ஜோக்கிம் உம் கலந்துகொண்டு, ...
Read More »அவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2018
இந்தியச்சதியால் வங்கக்கடலில் 16 – 01 – 1993 இல் வீரகாவியமாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்படுகின்ற மாபெரும் தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது. 07-01-2018 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணிக்கு மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் ஆரம்பமான இவ்விளையாட்டுவிழா நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை இளைய தமிழ்த் தேசியச் செயற்-பாட்டாளர் செல்வன் பவித்திரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் ...
Read More »மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு – 2017
தமிழீழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் 27ம் திகதி திங்கட்கிழமையன்று மெல்பேணில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேண் நேரம் மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய ஆரம்பமான இந்நிகழ்விற்கு பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் துளசி (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு.பிரான்ஸிஸ் கிறிஸ்ரி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக் கொடியினை மாவீரர் லெப்.கேணல் மணிவண்ணனின் சகோதரர் திரு.சிங்கராசா சுரேஷ்குமார் ...
Read More »‘மயிலே தா’ என்றால் மனமுவந்து தராது – விக்னேஸ்வரன்
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு கூட எமது மக்கள் தலைவர்கள் அறிந்து வைக்க வில்லையே என்பது மனவருத்தத்தைத் தருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கு ஒரு கேள்வி என்ற வகையில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். இதன்போது “தாங்கள் சிங்கள அரசியல் மற்றும் மத ரீதியான தலைமைகளுடன் பலதையும் பேசி வருகின்றீர்கள். சில நேரங்களில் அவர்களைச் சினம் ஊட்டும் வண்ணமும் கருத்துக்ளை வெளியிட்டு வருகின்றீர்கள். இதனால் தர இருப்பதையும் சிங்கள ...
Read More »கழுதை தேய்ந்து கட்டெறும்பானது! கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் கூட்டம்!!
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பு யாழில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. அத்துடன், அந்தக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட உள்ளதென கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதனால் அந்தக் கட்சி கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான இன்றைய சந்திப்பை தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More »