தகவல் அறியும் உரிமைச்சட்டமானது தற்போது எமது நாட்டில் நடைமுறையில் உள்ளது. எனினும் இது தொடர்பான விளக்கம் பொதுமக்களை முறையாகச் சென்றடைய வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் செயற்பாட்டை ஊடகவியலாளர்கள் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் தெரிவித்தார்.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைவதனை முன்னிட்டு “தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்களை விழிப்பூட்டல்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் என்பவற்றின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை(08-05-2018) கொழும்பில் ஆரம்பமானது. அந்நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.