செய்திமுரசு

மைத்திரி, மஹிந்த, ரணில்-எதிர்ப்புத் தெரிவித்து யாழில் சுவரொட்டி!

யாழில்  மஹிந்த, மைத்திரி, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பரவலாக  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த அதிகார சூதாட்டத்துக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதுடன், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

மத்தியஸ்த முயற்சிக்கு யாருமில்லை?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக  நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி பிடிவாதமாக இருக்கும் அதேவேளை, பிரதமராக அவரையே நியமிக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டில்  விட்டுக்கொடுப்பைச் செய்ய ஐக்கிய தேசிய முன்னணி தயாராக இல்லாத நிலையில் இலங்கையின் அரசியல் நெருக்கடி விரைவாக முடிவுக்கு வரக்கூடிய சாத்தியப்பாடு இல்லை என்பதே  அரசியல் அவதானிகளின் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்துவரும் உச்சநீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்காமல் போகக்கூடும் என்று ...

Read More »

முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை!?

போரினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. மட்டக்களப்பு தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த வைரமுத்து திசவீரசிங்கம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தின் முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் போரின்போது காயங்களுக்கு உள்ளானவர். இவரது உடலில்யுத்த துகள்கள் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஏற்கனவே கடந்த கடந்த ...

Read More »

வவுணதீவு சம்பவத்தை அரசியல் விவகாரமாக்காதீர்கள்!

வவுணதீவில்  காவல் துறையினர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது என முன்னாள் இராணுவதளபதி தயா ரட்ணாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மீண்டும் ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வவுணதீவு சம்பவம் தனித்தவொரு சம்பவமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவதளபதி புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் குறித்த மறுஆய்வுகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் அரசமைப்பு ...

Read More »

தமிழர்களின் பிரச்சினை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது!-தர்மலிங்கம் சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சனை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது. எனவே தென்பகுதிக்கு எங்களுடைய தமிழ் தலைவர்கள் சென்று நாங்கள் உங்களுக்கு விரோதிகள் அல்ல  சம உரிமை என்ற விடயத்தை தெளிவுபடுத்த முடியாத முள்ளந்தண்டற்ற எங்களுடைய தமிழ் தலைவர்கள் இருப்பதுதான் வேதனையானது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு  இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்   தமிழ் தேசிய மக்கள் முன்னணி முதியோர்களின் நல திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் சிரேஷ்ட பிரஜைகள் சபை முதியோருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று ...

Read More »

ஆஸ்திரேலிய அணியில் 6 வயது சிறுவன்!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது சிறுவனின் ஆசையை பூர்த்தி யெய்யும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய சீருடையுடன் 6 வயது சிறுவனும் துருதுருவென வலம் வருவதை பார்க்க முடிகிறது. யார் அந்த சிறுவன் என்று விசாரித்தபோது, அந்த சிறுவனின் பெயர் ஆர்ச்சி ஷில்லர் என்பதும், இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு இதுவரை 13 முறை ஆபரேஷன் நடந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் ...

Read More »

தலாய்லாமாவை துப்பாக்கியுடன் நெருங்கிய பாதுகாவலர்!

மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் யாரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் தலாய்லாமாவை நெருங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்குள்ள மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமா மேடையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். அப்போது ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ...

Read More »

ஜெயலலிதா: மாநில உரிமைகளுக்காக முழங்கிய தலைவர்!

அதிமுக வசம் அப்போது வெறுமனே 18 எம்பிக்கள்தான். ஆனால், டெல்லி அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் மந்திரக்கோல் ஜெயலலிதாவின் கையில் இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், “ஜெயலலிதாவிடமிருந்து அழைப்பு வருமா? அனுமதி கிடைக்குமா?” என்று மணிக்கணக்கில் காத்திருந்த நாட்களும் உண்டு. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மட்டுமல்ல… இந்த முறை ஜெயலலிதா என்ன சொல்லி அனுப்புவாரோ என்று டெல்லியில் இருந்தபடியே பரிதவித்துக்கொண்டிருப்பார் பிரதமர் வாஜ்பாய். முதலில் ராம்ஜெத்மலானி உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கச் சொன்ன ஜெயலலிதா, ஒருகட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ...

Read More »

இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உங்கள்(இம்ரான்கான்) பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். எனவே தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” ...

Read More »

விராட்கோலியை வீழ்த்த எங்களிடம் திட்டம் இருக்கிறது – ஹேசில்வுட்

விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஹேசில்வுட் கூறினார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹேசில்வுட் அடிலெய்டில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய அணியின் பேட்டிங் வரிசை உலகின் சிறந்த பேட்டிங் வரிசையாக உள்ளதாக நான் பார்க்கிறேன். விராட்கோலி மற்ற அணிகளுக்கு எதிராக எப்படி ரன்கள் திரட்டுகிறார் என்பதை நாங்கள் பார்த்து இருக்கிறோம். எனவே அவரது ஆட்டத்தை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். கடைசியாக ...

Read More »